TNPCS Exam General Questions and Answers in Tamil
1.இந்தியாவில் அதிக சுற்றுலா பயணிகள் வரும் இந்திய மாநிலம் எது?
*தமிழ்நாடு
2.முதல் தமிழ் கணினிக்கு சூட்டப்பட்ட பெயர் என்ன தெரியுமா?
*திருவள்ளுவர்
3.பருத்தி இழையிலிருந்து, விதைகளை பிரித்தெடுக்கும் முறைக்கு என்ன பெயர்?
*ஜின்னிங்
4.கரும்பு உற்பத்தியில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
*2ஆம் இடம் (பிரேசில் முதலிடம்)
5.நாட்டின் மொத்த சர்க்கரை உற்பத்தியில்
முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?
*உத்திர பிரதேசம்(50%)
6. இந்தியாவில் சர்க்கரை பெரும்பாலும் எதில் இருந்து எடுக்கப்படுகிறது?
*கரும்பு
7.கிரிக்கெட் மட்டை எந்த மரத்தில் இருந்து
தயாரிக்கப்படுகிறது?
*வில்லோ மரம்
8. உலகில் காகங்கள் இல்லாத நாடு எது?
* நியூஸிலாந்து
9.உலகில் பாம்புகளே இல்லாத நாடு எது தெரியுமா?
*அயர்லாந்து
![]() |
TNPCS GK Questions |
10. உலகில் கொசுவே இல்லாத நாடு எது?
*ஐஸ்லாந்து
11. உலகில் குரங்குகள் இல்லாத நாடு எது?
*ஆஸ்திரேலியா
12.உலகில் தெரு நாய்கள் இல்லாத நாடு எது?
*நெதர்லாந்து
13. இந்தியாவில் முதன் முதலில் பிரியாணியை அறிமுகம் செய்தவர்கள் யார் தெரியுமா?
*முகலாயர்கள்
14.கோயம்புத்தூரின் முந்தைய பெயர்?
*கோவன் புத்தூர்
15. இந்தியாவின் 15வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
*திரௌபதி முர்மு (2022)
16. 68வது தேசிய திரைப்பட விருதுகளில் "சிறந்த திரைப்படம்" விருதை வென்ற படம்?( 2022)
*சூரரைப் போற்று
17.கிஜோன் செஸ் மாஸ்டர்ஸ் 2022 பட்டத்தை வென்றவர்
*டி.குகேஷ் (இந்தியா)
18.பெண் மீனாக மாறும் ஆண் மீன் எது?
*நட்சத்திர மீன்
19. குங்குமப்பூவை அதிகமாக உற்பத்தி செய்யும் பகுதி?
*காஷ்மீர்
20. உலகின் மிக விலை உயர்ந்த நறுமணப்பொருள் எது?
*குங்குமப்பூ
21.உலகின் இரண்டாம் மிக பெரிய சதுப்பு நிலக்காடு?
*பிச்சாவரம் (தமிழ்நாடு)
22. இந்தியாவின் முதல் பொறியியல் கல்லூரி எது?
*ஐஐடி ரூர்க்கி
23.உலகிலேயே அதிக வேகத்தில் பாயும் ஆறு ?
*அமேசான் ஆறு
24.உலக நெல் ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ள இடம்?
*மணிலா (பிலிப்பைன்ஸ்) (1960)
24.இந்திய நெல் ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ள இடம்
*கட்டாக் (ஒடிசா) 1966
25.தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ள இடம்
*ஆடுதுறை (தஞ்சாவூர்) (1985)
26. இந்திய விமானப்படையின் Honorary பதவி பெற்ற ஒரே விளையாட்டு வீரர் யார்?
*சச்சின் டெண்டுல்கர்
27.இந்திய இராணுவத்தின் பிராண்ட் தூதர் (Brand Ambassador)
*மகேந்திரசிங் தோனி
28."கம்பு" எந்த நாட்டை பூர்வீகமாக கொண்ட பயிர்?
*ஆப்பிரிக்கா
28.சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) 'முன்னாள் தலைமைப் பொருளாதார நிபுணர்களின் சுவரில்' இடம்பெற்ற முதல் பெண் & இரண்டாவது இந்தியர்
*கீதா கோபிநாத்
29.எந்த நாட்டில் 5 மாதங்களுக்கு இரவே வருவது இல்லை?
*நார்வேயில் ஏப்ரல் முதல் ஆகஸ்டு வரை 5 - மாதங்களுக்கு சூரியன் மறைவது இல்லை அதாவது இரவே கிடையாது.
30. இந்தியாவின் முதல் வாகனத் தொழிலகம் எங்கு தொடங்கப்பட்டது?
*மும்பை, மகாராஷ்டிரா
31.தேனீக்கள் எத்தனை வகைப்படும்?
*மூன்று வகைப்படும் (ராஜா, ராணி, வேலைக்கார தேனீக்கள்)
32.ஒரு கிலோ தேனில் எவ்வளவு கலோரி உள்ளது தெரியுமா?
* 3,200 கிலோரி
33. தமிழகத்தில் முதுமக்கள் தாழி கிடைத்துள்ள இடம் எங்கு உள்ளது?
* ஆதிச்சநல்லூர்.
34. பாம்புகளின் நாடு என்று அழைக்கப்படும் நாடு எது?
*பிரேசில்.
35.வெற்றிலை, பாக்கில் அதிகம் உள்ள தாது?
*செம்பு
36.உலகில் முதலில் தேசியக் கொடியை அமைத்துக் கொண்ட நாடு?
*டென்மார்க்
37.சங்ககால சோழர்களின் வாழ்வியல் முறை பற்றி கூறும் நூல்
எது?
*பட்டினப்பாலை
38.சங்ககால பாண்டியர்களின் வாழ்வியல் முறை பற்றி கூறும் நூல் எது?
*மதுரைக்காஞ்சி, பரிபாடல்
39.சங்ககால சேரர்களின் வாழ்வியல் முறை பற்றி கூறும் நூல் எது? *பதிற்றுப்பத்து
40.தேனியில் உள்ள சர்க்கரை மற்றும் நீரின் அளவு எவ்வளவு?
*சர்க்கரை 75% - நீர் 17%
41.சிப்பி வளர்ப்பு முறையின் அறிவியல் பெயர் என்ன?
*ஆஸ்டெர் கல்சர்
42.மண்புழு வளர்ப்பு முறையின் அறிவியல் பெயர் என்ன?
*வெர்மி கல்சர்
43.தேனீ வளர்ப்பு முறையின் அறிவியல் பெயர் என்ன?
*எபி கல்சர்
44.மீன் வளர்ப்பு முறையின் அறிவியல் பெயர் என்ன?
*பிஸ்ஸி கல்சர்
45.மல்பெரி செடி வளர்ப்பு முறையின் அறிவியல் பெயர் என்ன?
*மோரி கல்சர்
46.பட்டுப்புழு வளர்ப்பு முறையின் அறிவியல் பெயர் என்ன?
*செரி கல்சர்
47.இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம்
*உத்திரப் பிரதேசம்
48.இந்தியாவின் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலம்
*சிக்கிம்
49.இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட யூனியன் பிரதேசம்
*டெல்லி
50.இந்தியாவின் குறைந்த மக்கள் தொகை கொண்ட யூனியன் பிரதேசம்
*லட்சத்தீவு
51.திருச்சியில் காவிரியால் உருவாக்கப்படும் தீவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
*ஸ்ரீரங்கம் தீவு
52.உலகின் மிகப்பெரிய அதிக எடையுள்ள விதை எது?
*இரட்டைத் தேங்காய்
(இதன் எடை 18 கிலோ கிராம்)
53.தாஜ்மகால் என்ற சொல்லுக்கு பொருள் என்ன?
* அரசியின் மணிமுடி என்று பெயர்
54.சீன மொழி டைப்ரைட்டரில் எத்தனை எழுத்துக்கள் உள்ளன?
*1,500 எழுத்துக்கள்
55.ஹிட்லரை சந்தித்த தமிழ் விஞ்ஞானி அறிவியல் மேதை
*ஜி.டி.நாயுடு
56.கண்தானத்தில், கண்ணில் எந்த பகுதிஅடுத்தவருக்கு பொருத்தப்படுகிறது?
*கருப்பு விழிகள்
57.எலிகள் பிறந்து கண்விழிக்க எத்தனை நாட்கள் ஆகும்.
* 14 நாட்கள் ஆகும்
58.விமானங்களின் டயர்களில் நிரப்பப்படும் வாயு எது?
*நைட்ரஜன்.
59.பாலை திணையை பற்றி பாடிய புலவர்
*ஓதலாந்தையார்
60.நெய்தல் திணையை பற்றி பாடிய புலவர்
*அம்மூவனார்
61.மருத திணையை பற்றி பாடிய புலவர்
*ஓரம்போகிறார்
62.முல்லை திணையை பற்றி பாடிய புலவர்
*பேயனார்
63.குறிஞ்சி திணையை பற்றி பாடிய புலவர்
*கபிலர்
64.மிகவும் பழமையான கைவினை கலைகளில் ஒன்று
*மண்பாண்டக்கலை
65.இந்திய நீர் பாசனத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
*சர் ஆர்தர் காட்டன்
66.பூக்களில் சிறந்த பூ என திரு.வி.க. கூறிய பூ எது?
*பருத்திப் பூ