தமிழ் கீரைகளின் பெயர்கள் - கீரை வகைகள் | Tamil Greens types

KrishSel All in All

தமிழ் கீரைகளின் பெயர்கள்- கீரை வகைகள் | Tamil Greens types 


கீரை வகைகள் தமிழ்
கீரை வகைகள்

இன்றைய தலைமுறையினருக்கு காய்கறிகள் பெயர்களே தெரிவதில்லை. அதிலும் கீரை என்றால் சுத்தமாக ஒரு சில கீரை பெயர்கள் கூட தெரியாமல் தான் இருக்கிறார்கள்.

இன்றைய சூழலில் சில வெளிநாட்டு காய்கறிகள், கீரைகள் பெயர்கள் கூட தெரிந்து இருக்கிறார்கள்.
ஆனால் நமது நாட்டின் காய்கறிகள் கீரைகள் பெயர்கள் தெரியாமல் தான் பெரும்பாலானோர்கள் இருக்கிறார்கள்.

எனவே நமது நாட்டின் முக்கியமான ஒரு 35 வகையான கீரை வகைகளின் பெயர்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

நமது நாட்டின் கீரை வகைகளில் ஒரு சில கீரைகளில் ஒரே பெயரில் இரண்டு வகைகள் இருக்கும்.
வண்ணம் மட்டும் மாறுபடும்.
அல்லது அது விளையும் இடத்தை பொறுத்து இருக்கும்.

உதாரணமாக:
1.தண்டுக்கீரை
*சிவப்பு தண்டுக்கீரை
*பச்சை தண்டுக்கீரை
2. குமிட்டிக் கீரை
*(காட்டு) குமிட்டிக்கீரை
*கல்லான் குமிட்டிக்கீரை


தமிழ் கீரை வகைகள்:

1.சிறு கீரை
2.அரைக்கீரை
3.தண்டுக்கீரை
*வெள்ளை தண்டு கீரை
*சிவப்பு தண்டு கீரை

4.பண்ணைக் கீரை(மகிலி கீரை)
*கீத்து பண்ணை கீரை

5.தொய்யக் கீரை
6.குமிட்டிக் கீரை (குமுட்டி)
*குமிட்டிக் கீரை
*கல்லான் குமிட்டிக் கீரை

7.முருங்கைக்கீரை
8.புளிச்ச கீரை
9.தூதுவளைக் கீரை
10.பொன்னாங்கன்னி கீரை
11.அகத்திக்கீரை
12.குப்பைக்கீரை
13.மனத்தக்காளிக் கீரை
(மிளாகா தக்காளி)
14.பசலைக்கீரை
15.கொடி பசலை
16. முளைக்கீரை
17.வெந்தயக்கீரை
18.பாலக் கீரை
19.மணலிக்கீரை
20.முடக்கத்தான் கீரை
21.சக்ரவர்த்திக் கீரை
22.கொத்தமல்லி
23.பொதினா
24.கோவை
25.அப்பக்கோவை
26.வேளைக்கீரை
27.துத்தி
28.குப்பை மேனி
29.சாரணை கீரை
30.தாளிக் கீரை
*வெள்ளை தாளி
*சிவப்பு தாளி

31. மூக்கிரட்டை கீரை
32.பொடுதலை
33.வள்ளாரை கீரை
34.பிரண்டை
35.ரயில் கீரை 


மேலே கொடுக்கப்பட்டுள்ள கீரை வகைகளை தவிர நமது நாட்டின் கிராமத்து கீரைகளின் பெயர்கள் இருந்தால் கமெண்டில் தெரியப்படுத்தலாம். மற்றவர்களும் தெரிந்து கொள்வார்கள்.