Weight Gain in 15 Days Tamil| 15 நாட்களில் உடல் எடை அதிகரிக்க வேண்டுமா?
உடல் எடையை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள்: •காலையில் அல்லது ஏழு மணிக்கு எழும்பி 2 கிளாஸ் தண்ணீர் குடியுங்கள்.
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிகின்ற பொழுது சக்தி வருவது போல் இருக்கும். ஒரு கிழமை தொடர்ந்து நீங்கள் அதை செய்து கொண்டு வந்தால் உங்களுக்கு அந்தப் பிரச்சினையும் இல்லாமல் போய்விடும்.
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும் பொழுது உடல் எடை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது.
•இரண்டு கிளாஸ் தண்ணீர் குடித்த பின்பு 10 நிமிடம் கழித்து பச்சை கடலை சாப்பிட வேண்டும்.
பச்சைக் கடலை நீங்கள் சாதாரணமாக எல்லா கடைகளிலும் பெற்றுக்கொள்ளலாம் அந்த கடலையை இரவு நேரத்தில் தண்ணீருக்குள் ஊறவைத்து முளை வந்த பின்பு காலையில் சாப்பிடுங்கள்.
இந்த முறை வந்த பச்சை கடலையில் அதிக விதமான சத்துக்கள் இருக்கின்றது அது உங்களுக்கு உடல் எடை அதிகரிப்பதற்கு உதவி செய்யும்.
•அதன் பின்பு காலை உணவாக எடுத்து கொள்ளும் உணவு சத்தான உணவா என்பதை ஆராய்ந்து அதன் பின் அந்த உணவுகளை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.
•அதன் பின்பு காலை உணவிற்கும் மதிய உணவிற்கும் இடையில் ஒரு இடைவெளி இருக்கும் அந்த இடைவேளை நேரங்களில் நீங்கள் ஸ்னாக்ஸ் சாப்பிடுவதைப் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
உதாரணத்திற்கு: நீங்கள் கருப்பு எள் உருண்டை எடுத்து இருந்தால் அது உங்களுக்கு உடல் எடை அதிகரிப்பதற்கு உதவியாக இருக்கும்.
•அதன் பின்பும் மதிய உணவு மதிய உணவிலும் நீங்கள் அதிக புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை பார்த்து எடுத்துக் கொள்ளுங்கள்.
•அதோடு மட்டுமல்லாமல் இரண்டு முட்டைகளை உங்களுடைய மதிய உணவுடன் சேர்த்துக்கொள்ளுங்கள்.
•அதன் பின்பு மாலை ஆறு முப்பது மணி அளவில் நீங்கள் இரண்டு கைப்பிடி அளவு வேர்க்கடலை சாப்பிட பழகுங்கள்.
•நான் சொன்ன டிப்ஸ் மற்றவைகளை நீங்கள் பின்பற்றாமல் இருந்தாலும் இந்த வேர்க்கடலை சாப்பிடுவதை பின்பற்றுங்கள் கண்டிப்பாக உங்களுக்கு உடல் எடை அதிகரிக்கும்.
•அடுத்ததாக இரவு உணவிற்கும் மதிய உணவு போலவே புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் அதிகம் இருக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். •சாப்பிட்டு முடிந்த பின்பும் வாழைப்பழம் சாப்பிடுங்கள்.
•அப்படி வாழைப்பழம் உங்களிடம் இல்லை என்றால் தேனை பாலுடன் கலந்து குடியுங்கள்.
இவ்வாறான முறைகளை நீங்கள் பின்பற்றி வர கண்டிப்பாக உங்களுக்கு உடல் எடை அதிகரிக்கும்.
இந்தப் பதிவின் மூலம் நீங்கள் பயன் பட்டது போல் பலரும் பயன் பெற வேண்டும் தயவு செய்து இரண்டு பேருக்காவது இந்த பதிவினை ஷேர் செய்யுங்கள் மறக்காமல் கமெண்ட் பண்ணுங்கள்.