தலைமுடி உதிர்வதைத் தடுக்க சிறந்த தீர்வு | Hair fall Best Remedies/ Tips and Tricks in Tamil
தலைமுடி உதிர்கிறதா?? இதை மட்டும் செய்யுங்கள்:
இப்பொழுது இருக்கும் இந்த ஜெனரேஷன்ல ஆண்களானாலும் சரி பெண்களானாலும் சரி எல்லோருக்கும் முடி கொட்டுவது என்பது பெரிய பிரச்சனையாகவே இருக்கின்றது.
முடி உதிர்வது பல காரணங்களால் ஏற்படுகிறது:
இந்தக் காலத்தில் சுத்தமான தண்ணீர் இல்லாமையும் பல கெமிக்கல் கலந்த ஷம்போ பயன்படுத்துகிறதாலும் முடி கொட்டுகிறது என்றும் கூறலாம்.![]() |
Hair fall problem Healthy Tips |
இதற்கெல்லாம் என்ன தீர்வு என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
1.சுத்தமான பாத்திரம் ஒன்றை எடுத்து உங்களுக்குத் தற்போதைய சூழ்நிலையில் எவ்வளவு முடி இருக்கின்றதோ அதற்கு தேவையான அளவான வெந்தயம் எடுத்து கொள்ளுங்கள்.
*அதன் பின்பு அந்த பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
*அதன் பின்பு காலையில் எழுந்து பார்த்தீர்கள் என்றால் அந்த வெந்தயம் நல்ல வடிவாக ஊறி இருக்கும்.
*அந்த வெந்தயத்தை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
*அரைத்து எடுத்த வெந்தயத்தை வேரு ஒரு நல்ல பாத்திரத்திற்குள் எடுத்து வைத்து அதனுடன் 3 மேசைக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேருங்கள்.
*வெந்தயத்தில் இருக்கின்ற சத்துக்களால் உங்களுடைய முடி வேகமாக வளரும் அதேநேரம் கருமையும் கிடைக்கும்.
*தேங்காய் எண்ணெயில் விட்டமின் E மற்றும் அயன் சக்தி இருப்பதனால் அது முடி வளர்வதற்கு உதவி செய்யும்.
*அதன் பின்பு பாதியாக வெட்டி எடுக்கப்பட்ட எலுமிச்சம்பழதின் சாரை அரைத்து எடுத்த வெந்தயத்துடன் சேர்த்துக் கொள்ளுங்கள்.
*முடி உதிர்வதற்கு முக்கிய காரணம் நம்முடைய தலையில் இருக்கும் அழுக்குகள்தான் அந்த அழுக்குகளை எலுமிச்சைச்சாறு இல்லாமல் ஆக்கும்.
*நீங்கள் இப்பொழுது செய்து எடுத்த இந்தப் கலவையை உங்களுடைய தலையில் பூசுவதற்கு முன்பதாக, உங்களுடைய தலையை நன்றாக கழுவிக் கொள்ளுங்கள்.
*அதன் பின்பு உங்களுடைய தலையின் பகுதி முழுவதும் இந்த பேஸ்ட்டை தடவி 45 நிமிடங்கள் அப்படியே ஊற விடுங்கள்.
*45 நிமிடங்கள் கழித்து உங்களுடைய தலையை கழுவிக் கொள்ளுங்கள் அந்த நேரத்தில் நீங்கள் ஷாம்பு பயன்படுத்த வேண்டாம்.
இந்த முறைமை இனி நீங்கள் பின்பற்றினால் உங்களுக்கு இதனுடைய விளைவு ஒன்று அல்லது இரண்டு கிழமைகளுக்கு தெரியும்.
(இந்தப் பதிவின் மூலம் நீங்கள் பயன் பெற்றது போல் பலரும் பயன் பெற வேண்டும் தயவு செய்து இரண்டு பேருக்காவது ஷேர் செய்யுங்கள் ஒருமுறை கமெண்ட் செய்யுங்கள் )