How to Remove First Copyright Strike in Your YouTube Channel in Tamil
உங்கள் யூடியூப் சேனலில் முதல் Copyright Strike வந்தால் Expire ஆன பிறகு அதை எப்படி Remove செய்வது?
![]() |
First Copyright Strike |
பொதுவாக யூட்யூபில் ஒரு Copyright Strike வந்தால் அந்த Strike போவதற்கு 90 நாட்கள் எடுத்துக் கொள்ளப்படும்.
எனவே, முன்பு வரை உங்கள் யூடியூப் சேனலில் முதல் முறையாக ஒரு Copyright Strike வந்துவிட்டால், அதன் Expire day's முடிந்த பின்னர். அந்த Strike 90 நாட்கள் கழித்து விட்டால் தானாகவே நீக்கப்படும்.
ஆனால் தற்போது யூடியூபில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக யூடிபில் முதல் Copyright Strike வந்தால். அதன் காலாவதி (Expire day's) நாட்கள் முடிந்த பிறகும் அந்த Strike நீக்கப்படாது.
ஏனென்றால், இதற்கு நீங்கள் Copyright School என்ற முறையை பூர்த்தி செய்ய வேண்டும்.
Copyright School:
அதில் யூடியூப் நிபந்தனைகள், சட்டதிட்டங்கள் பற்றிய சில கேள்விகள் கேட்கப்படும் இதற்கு சரியான பதிலளிப்பது மூலம் உங்கள் சேனலில் உள்ள காலாவதி (Expired) ஆன Copyright Strike நீக்கப்படும்.
இதில் கேட்கப்படும் அனைத்து கேள்விகளுக்கும் சரியான விடை அளிக்க வேண்டும் என்றாலும், ஒர், இரு கேள்விகளுக்கு தவறான விடை கொடுத்தால் ஏதும் பிரச்சினை இல்லை.
உங்கள் பதில்களில் எத்தனை சரி, தவறு என காட்டப்படும்.
பிறகு உள்ளது Copyright Strike நீக்கப்படும் அல்லது உங்களுக்கு யூடியூப் Policy எடுத்துரைத்து வழிக்காட்டப் படும்.
அதன் பின்னர் மீண்டும் சரியான விடை கொடுத்தால் உங்கள் யூடியூப் சேனலில் வந்துள்ள முதல் Copyright Strike நீக்கப்படும்.
இந்த Copyright School ல் கேட்கப்படும் கேள்விகள் அனைவருக்கும் ஒரே மாதிரியான கேள்விகள் கேட்கப்படாது.
ஒவ்வொரு சேனலுகும் வேறு, வேறு கேள்விகள் கேட்கப்படும். இது மட்டும் இல்லாமல். ஒரே சேனலிலே ஒவ்வொரு முறையும் நீங்கள் இந்த Copyright School பகுதிக்கு போகும் போதும் வேறு, வேறு கேள்விகளே கேட்கப்படும்.
எனவே யூடியூப் Rules and Policies பற்றி நன்கு தெரிந்து இருப்பது மிகவும் முக்கியமான விஷயமாகும்.
ஏனென்றால் யூட்யூப் Policy and Rules இதைப்பற்றி தெரிந்து கொண்டு வீடியோக்கள் போடுவதன் மூலம் எந்த வித Copyright பிரச்சினை மற்றும் மற்ற தவறுகள் இல்லாமல் சரியான முறையில் வீடியோக்களை பதிவிட முடியும்.