Facebook Page Monetization Eligiblelity in Tamil
ஃபேஸ்புக்-ல் யூடியூப் போலவே வீடியோக்களை பதிவிட்டு அதன்மூலம் பணம் சம்பாதித்துக் கொள்ள முடியும். இது சமீப காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் யூடியூப் போலவே இதிலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விதிமுறைகள் மற்றும் சில தகுதிகளை நீங்கள் பெற்றிருக்க வேண்டும். இதை கடைபிடித்து நீங்கள் வீடியோக்கள் பதிவிட்டால் மட்டுமே உங்களால் Facebook-ல் பணம் சம்பாதித்துக் கொள்ள முடியும்.
எனவே ஃபேஸ்புக் பேஜில் பணம் சம்பாதித்துக் கொள்ள என்னென்ன கட்டுப்பாடுகள் இருக்கிறது. என்னென்ன தகுதிகளை நீங்கள் பெற்றிருக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பேஸ்புக்கில் நீங்கள் Monetization Apply செய்து பெறுவதற்கு முன்பு இந்த அடிப்படைத் தகுதியை பெற்றிருக்க வேண்டும்
அவை:
1.பேஸ்புக்கின் கூட்டாளர் பணமாக்குதல் கொள்கைகளுக்கு நீங்கள் சேர்ந்து இருக்க வேண்டும்.
2.உங்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது இருக்க வேண்டும்.
3.Facebook ஸ்ட்ரீம் விளம்பரங்களுக்கு தகுதியான நாட்டில் நீங்கள் வாழ வேண்டும்.
Monetization Eligiblelity for Your FB Page
1. 10,000 Followers
2. 600000 நிமிடங்கள் (Watching Minister) இருக்க வேண்டும். இது கடைசி 60 நாட்களில் பெற்று இருக்க வேண்டும்.
3. இந்த 600000 நிமிடங்கள் சாதாரணமாக அப்லோட் செய்யும் வீடியோக்கள் மூலமாகவோ அல்லது Live செய்து அதன் மூலம் பெறப்பட்ட பார்வை நேரங்கள் ஆகவும் இருக்கலாம்.
4. ஆனால், குறுக்குவெட்டு (crossposted), மற்றும் பணம் கொடுத்து அதன் மூலம் பெறப்பட்ட பார்வை நேரங்கள், Boost செய்து அதன் மூலம் பெறப்பட்ட நிமிடங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது.
5.உங்கள் Facebook Page-ல் குறைந்தது 5 வீடியோக்கள் செயலில் (Active) இருக்க வேண்டும்.
6.இந்த கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் வீடியோக்கள் demand Video-ஆக இருக்கலாம் அல்லது ஏற்கனவே Live செய்யப்பட்ட வீடியோக்களாக இருக்கலாம். ஆனால் குறுக்குவெட்டு (crossposted) வீடியோக்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது.
Live வீடியோக்களுக்கான கூடுதல் தேவைகள்:
Facebook Monetization தகுதியான கடந்த அதாவது கடைசி 60 நாட்களில் பார்க்கப்பட்ட 600,000 மொத்த நிமிடங்களில் குறைந்தது 60,000 நிமிடங்கள் நேரடி (Live Video) வீடியோக்களிலிருந்து பார்க்கப்பட்ட நிமிடங்களைக் கொண்டிருக்க வேண்டும்.
எனவே Monetization Eligiblelity-க்கு Live Video மூலம் குறைந்தது 60,000 நிமிடங்களை கண்டிப்பாக நீங்கள் பெற்றிருக்க வேண்டும்.