How to Open YouTube Studio Beta Version on Mobile phone 2021
தற்பொழுது யூடியூபில் சேனல் வைத்திருக்கும் அனைவரும் அதிகமாக தங்களது சேனலை மிக எளிமையாக தொலைபேசி மூலமே நடத்தி வருகிறார்கள்.
இதில் புதிய யூட்யூப் சேனல்கள் பெரும்பாலும் யூட்யூப் App-ல் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் சேனலில் முக்கியமான சில பல Settings App-ல் செய்து கொள்ள முடியாது.
இதற்கு Desktop computer or Laptop கண்டிப்பாக தேவைப்படும்.
ஆனால் தொலைபேசியிலும் இதை செய்து கொள்ள முடியும்.
இதற்கு உங்கள் தொலைபேசி Chrome search Tap-ஐ desktop mode மாற்றி கொண்டு யூடியூப் இணைய தளத்தை பயன்படுத்திக் கொள்வது மூலம் உங்கள் தொலைபேசியையே Computer போல் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
ஆனால் தற்போது Chrome-ல் இது போல desktop mode மாற்றிக் கொண்டு YouTube.com சென்று பிறகு உங்கள் சேனலை Open செய்தாலும் நேரடியாக YouTube App-க்கு சென்றுவிடுகிறது.
YouTube Studio Beta Version ல் உங்கள் யூடியூப் சேனல் Open செய்ய முடியவில்லை.
எனவே இந்த பதிவில் தற்போது 2021-ல் புதிய அப்டேட் ஆகி உள்ள நிலையில் எப்படி தொலைபேசியில் YouTube Studio Beta-க்கு உங்கள் சேனலை Open செய்வது என்பதை பார்க்கலாம்.
How to Open youtub Studios beta desktop on mobile phone 2021?
முறை:1
1. உங்கள் தொலைபேசி கூகிள் Chrome-ல் Desktop Mode-க்கு மாற்றி கொள்ளுங்கள்.
2. பிறகு YouTube.com Open செய்து அதில் உங்கள் யூடியூப் சேனலை login செய்து கொள்ளுங்கள்.
3. இப்போது உங்கள் சேனல் திறந்து இருக்கும். பிறகு உங்கள் சேனல் logo-ஐ click செய்து அதில் YouTube studio Option-ஐ கிளிக் செய்து கொள்ளுங்கள்.
4. இப்போது உங்கள் சேனல் YouTube Studio Beta Version-ல் Open ஆகும்.
மேலே குறிப்பிட்ட முறையில் சரியாக உள்ளது சேனல் YouTube Studio Version-ல் open ஆகவில்லை என்றால். அடுத்த முறையில் முயற்சி செய்யுங்கள்.
முறை:2
மேலே சொன்னது போலவே உங்கள் யூடியூப் சேனலை Open செய்யுங்கள். இதில் நேரடியாக உங்கள் யூடியூப் App-ல் சென்று Open ஆகிறது YouTube studio beta திறக்க முடியவில்லை என்றால்,
1. ஏற்கனவே desktop mode மாற்றி இருப்பதை off செய்து பிறகு உங்கள் சேனல் logo-ஐ click செய்து My Channel Option-ஐ கிளிக் செய்து கொள்ளுங்கள்.
2. இப்போது உங்கள் சேனல் திறந்த பிறகு அதில் CUSTOMISE CHANNEL option Click செய்து கொள்ளுங்கள்.
3. இப்போது உங்கள் சேனல் YouTube Studio Beta Version-ல் திறந்து விடும். அனைத்து Settings-ம் செய்து கொள்ள முடியும்.
முறை:3
இந்த முறை மிக எளிமையாக இருக்கும்.
1. Google Chrome திறந்து கொள்ளுங்கள்.
2. அதில் studio.youtube.com உள்ளிட்டு search கொடுங்கள்.
3. இப்போது YouTube studio Site page வரும், ஆனால் நேரடியாக உள்ளே செல்லாது கீழே படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது போல் வரும்.
இதில் App மற்றும் YouTube studio திறக்க என இரண்டு Options கொடுக்கப்படும்.
நீங்கள் இரண்டாவதாக கீழே உள்ள Continue studio என்ற option-ஐ கிளிக் செய்து கொள்ளுங்கள்.
இப்போது நேரடியாக உங்களது யூட்யூப் சேனல் Studio beta version-ல் வந்து விடும்.
Computer or laptop-ல் செய்து போல் அனைத்து முக்கியமான Settings-ம் செய்து கொள்ள முடியும்.
இந்த முறை:3-ஐ முதலில் முயற்சி செய்து சரியாக வரவில்லை என்றால். முறை:1 மற்றும் முறை:2 வை முயற்சி செய்யுங்கள்.
குறிப்பு: உங்களின் யூடியூப் சேனல் mail id, மற்றும் password சரியாக போட்டு உங்கள் யூடியூப் சேனலை முதலில் login செய்து கொள்ளுங்கள்.
அப்போது தான் எளிமையாக YouTube Studio Beta Version திறந்து கொள்ள முடியும்.
நாம் குறிப்பிட்டுள்ள இந்த பிரச்சினைக்களை தவிர உங்களுக்கு வேறு ஏதேனும் பிரச்சினை இருந்தாலும் கமெண்டில் தெரியப்படுத்துங்கள் அதற்கான தீர்வு தனி பதிவில் பார்க்கலாம். மேலும் வீடியோ வடிவிலான தகவல்களை தெரிந்து கொள்ள நமது யூடியூப் சேனலை Follow செய்து கொள்ளுங்கள்.