How to Apply PAN Card Online 2021 in Tamil
ஆன்லைன் மூலம் எப்படி Pan கார்டு apply செய்து வீட்டில் இருந்தபடியே பான் கார்டு வாங்கி கொள்வது என்பதை பற்றி இந்த் பதிவில் பார்க்கலாம்.
![]() |
Online pan card |
மிகவும் சுலபமாக வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் அல்லது லேப்டாப் பயன்படுத்தி ஆன்லைனில் PAN Card Apply செய்து வாங்கிக் கொள்ள முடியும்.
நீங்கள் Pan Card Apply செய்ய போகிறீர்கள் என்றால் கண்டிப்பாக 15 நாட்களாகும் உங்களுக்கு வீடு தேடி வர, அரசாங்க விதிகளின்படி அனைவருக்கும் pan card தேவை என்று சொல்லி இருக்கிறார்கள்.
தற்போது உள்ள சூழலில் PAN Card Government சம்பந்தப்பட்ட அனைத்து செயல்களுக்கும் இந்த PAN Card கேட்கிறார்கள்.
எனவே அனைவரும் கட்டாயமாக PAN Card வாங்கி வைத்துக் கொள்வது நல்லது.
இதை online ல் Apply செய்து E-pan card ஆக எடுத்துக் கொண்டால் வெறும் ஐந்தே நிமிடத்தில் உங்களுக்கான E-pan card-ஐ பெற்றுக் கொள்ள முடியும். இதை எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
How to Apply PAN Card online With Apply Types of PAN Card?
Pan Card இரண்டு முறைகளில் Apply செய்து பெற்றுக் கொள்ளலாம்.
* E-pan card
*Physical PAN Card
இதில் E-pan card உடனடியாக கிடைத்தது விடும்.
இதை Download செய்து கொண்டு பிறகு, மேலே குறிப்பிட்டுள்ளது போல எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
தேவைப்பட்டால் print out செய்து அதற்கு lamination செய்து வைத்துக் கொள்ளலாம்.
இது physical PAN Card போலவே பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இல்லை எனக்கு அரசாங்கத்திடம் இருந்து அனுப்பப்படும் Card தான் வேண்டும் என்றால்.
Physical PAN Card க்கு apply செய்து பெற்றுக் கொள்ள முடியும்.
இது கொரியர் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆனால் இதற்கு குறிப்பிட்ட சில நாட்கள் எடுத்துக் கொள்ளப்படும்.
எனவே உங்களுக்கு உடனடியாக தேவை என்றால் e- Pan Card Apply செய்து வாங்கிக் கொள்ளலாம்.
How to Apply PAN Card Online?
மேலே குறிப்பிட்ட எந்த வகையில் நீங்கள் pan card Apply செய்ய வேண்டும் என்றாலும் கீழ் உள்ள இந்த இரண்டு இணைய தளங்களில் சென்று Apply செய்து கொள்ள முடியும்.
*https://www.incometaxindiaefiling.gov.in/e-PAN/
*https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html
இந்த இரண்டு இணைய தளங்களில் சென்றால்.
புதிதாக pan card அப்ளை செய்வதற்கான Option இருக்கும் அதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பதிவிடுங்கள்.
E-Pan Card Apply செய்வதற்கான தகவல்கள்:
முதல் அமைப்பில் E-pan card Option-ஐ தேர்வு செய்து கொள்ளுங்கள்.
பிறகு இந்த தகவல்களில் முக்கியமான தகவல் உங்களுடைய ஆதார் கார்டு எண் தான்.
எனவே உங்கள் ஆதார் எண்ணை தயார்படுத்திக் கொண்டு ஆரம்பியுங்கள்.
ஆதார் அட்டை பதிந்திந்துள்ள (Aahaar Card Registered mobile number) தொலைபேசி எண்ணிற்கு OTP -ம் அனுப்பப்படும். எனவே அந்த தொலைபேசியையும் பக்கத்தில் வைத்துக் கொண்டு Apply செய்தால் உங்கள் வேலை மிக எளிதாக இருக்கும்.
பிறகு உங்கள் ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை அப்படியே எடுத்து கொண்டு உங்களுடைய PAN Card தயார் ஆகும்.
இதில் நீங்கள் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டும் என்றால், முதலில் உங்கள் ஆதார் அட்டையில் மாற்ற வேண்டியதாக இருக்கும்.
இல்லை என்றால் புதிய PAN Card Apply செய்து அதற்கு என தனி (முகவரி, தொலைபேசி எண்) தகவல்களை கொடுத்து பெற்றுக் கொள்ள முடியும்.
ஆனால் புதிதாக PAN Card Apply செய்வதற்கும் ஆதார் அட்டை எண் தேவைப்படும்.