புதிதாக யூடியூப் சேனல் தொடங்க இருப்பவர்கள் கவனத்திற்கு
இன்றைய சூழலில் புதிதாக ஒரு யூடியூப் சேனலை தொடங்கி அதில் பணம் சம்பாதித்துக் கொள்ள தகுதியான அந்த 1000 Subscribers மற்றும் 4000 watching hours அடைவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல என்பது அனைவரும் அறிந்ததே.
![]() |
New YouTube Channels |
யூடியூபில் இப்போது கொடுக்கப்பட்டுள்ள சில புதிய அப்டேட்டுகள் இதை இன்னும் கடுமையாக மாற்றியிருக்கிறது.
Monetization Eligiblelity க்கு தேவையான 1000 Subscribers கூட பெற்று விட முடியும்.
ஆனால், 4000 மணி நேரத்தை அடைவது என்பது இனி புதிய Youtubers-க்கு மிக மிக கடினமானதாக இருக்கப் போகிறது.
இன்றைய சூழலில் யூட்யூபில் ஏகப்பட்ட யூட்யூப் சேனல்கள் வந்துவிட்டன. உண்மையில் சொல்லப்போனால் யூட்யூபில் வீடியோக்கள் பார்ப்பவர்களை விட சேனல் வைத்திருப்பவர்கள் தான் அதிகம்.
அதிலும் ஒருவரே இரண்டு மூன்று சேனலை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் புதிதாக ஒரு யூடியூப் சேனலை ஆரம்பித்து அதில் Monetization தகுதியை பெறுவது சாதாரண காரியமாக இருக்காது.
இதுபோன்ற சூழல் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பு ஏற்பட்டுவிட்டது.
முன்பு யூடியூபில் அதிகம் எடுக்காத Category -ஐ தேர்வு செய்து சேனல் தொடங்குவது நல்லது. விரைவில் உங்கள் சேனல் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என புதிய யூட்யூப் தொடங்குவதற்கு Tips கொடுக்க முடிந்தது.
ஆனால் இப்போது அப்படி எதுவும் இல்லை, அனைத்து (Category) வகையிலான சேவைகளும் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.
எனவே தற்பொழுது உள்ள சூழல் யூடியூப் சேனல் ஆரம்பித்து வெற்றி பெறுவது இன்னும் அதிகமான அளவில் கடினமாகி விட்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் தற்போது யூடியூபில் வந்து உள்ள சில அப்டேட்கள் மூலமாக இது மேலும் மேலும் அதிகமாகிக் கொண்டே போகிறது என்பதை புதிய யூடியூப் சேனல் வைத்திருப்பவர்களும் சரி, புதிதாக சேனல் ஆரம்பிக்கலாம் என்று இருப்பவர்களும் சரி கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
முக்கியமான மூன்று தகவல்களை நீங்கள் மனதில் எடுத்துக் கொள்ளுங்கள். இதுதான் புதிய யூட்யூப் சேனல் வைத்திருப்பவர்களுக்கும், புதிதாக தொடங்கலாம் என்று இருப்பவர்களுக்கும் தடையாக இருக்கப் போகிறது.
இதை எதிர்கொள்ளும் வகையில் நீங்கள் சேனல் ஆரம்பிக்க வேண்டும், வீடியோக்களை பதிவிட வேண்டும்.
அவை:
1.Watching Hours Monetization Update 2021
2.Celebrities YouTube Channels
3.Ads for All Channels without Monetization
1.What is New Bad Monetization Update 2021?
யூடியூப் Monetization Eligiblelity Watching Hours - பணம் அவர்களுக்கு தகுதியான பார்வை மணி நேரங்களுக்கு தகுதியான பார்வை மணி நேரங்களாக எதை எதை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்பதற்கு புதிதாக ஒரு அப்டேட் வந்திருக்கிறது. இதுதான் முக்கியமாக புதிய யூடியூப்பாளர்களுக்கு மிக மோசமான ஒரு அப்டேட் ஆக இருக்கிறது.
அது, Live Streaming Watching Hours இனி பணம் ஆக்குதல் தகுதிக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்று புதிய அப்டேட் வந்துள்ளது. 👈இதை பற்றிய முழு தகவல்களுக்கு நமது முந்தைய பதிவை வீடியோவை பார்க்கவும்.
2. Celebrities YouTube Channels (பிரபலங்கள் யூட்யூப் சேனல்கள்)
யூடியூப் சேனல் ஏற்கனவே இருக்கும் போட்டிகள் பத்தாது என்று மேலும் போட்டியாக தொலைக்காட்சி பிரபலங்களும் தற்போது யூடிபில் சேனல் தொடங்க ஆரம்பித்துவிட்டார்கள்.
அவர்கள் ஏற்கனவே தொலைக்காட்சி மூலம் பிரபலமாகி இருப்பதன் காரணமாக யூடியூபில் அவர்கள் ஒரு வீடியோ பதிவிட்ட உடனே அவர்களுக்கு லட்சக்கணக்கில் பார்வையாளர்கள் வந்து விடுகிறார்கள் அதேபோல Subscribers-ம் உடனே சரசரவென அதிக அளவில் வந்துவிடுகிறது.
இதன் காரணமாக யூடியூபில் அதிகபட்சமாக இவர்கள் வீடியோவை மேல்புறமாக Suggestion ஆகா அதிகம் காட்டப்படுகிறது. அதேபோல் இவர்களது வீடியோக்களே YouTube Trending Page-ல் அதிகம் வந்துவிடுகிறது.
இப்படி பட்ட சூழலில் சாதாரண முன், பின் தெரியாத ஒரு தனி நபர் சேனல் தொடங்கி எப்படி மேலே வருவது? எப்படி தங்களுக்கான ஒரு இடத்தை பிடிப்பது? என்பதை சிந்தித்துக் கொள்ளுங்கள்.
இந்நிலையில் புதிய Youtubers இதையும் சொல்ல நான் விரும்புகிறேன். என்னுடைய யூடியூப் சேனலில் நான் கொடுக்கும் தகவல்களை போலவே தான் இந்த பதிவிலும் கொடுத்து இருக்கிறேன். என்னுடைய வீடியோவில் அனைத்துமே உங்கள் திறமைகளை மட்டும் நம்பி சேனல் ஆரம்பியுங்கள் அதில் வரும் பணத்தை எதிர்பார்த்து வராதீர்கள் என்பதையும் நான் ஆரம்பத்திலிருந்தே குறிப்பிட்டு வருகிறேன்.
•எனவே இதற்கு எல்லாம் இடம் கொடுக்காமல் தமது திறமையை தொடர்ந்து கொடுக்க வேண்டும் என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
•யூடியூப் - புதிய Creator's -க்கு முன்னுரிமை கொடுத்து ஊக்குவிக்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
• அப்பறம் எதற்கு இந்த மூன்று தகவல்களை கொடுக்கிறீர்கள் என நீங்கள் நினைக்கலாம். நாம் தொடர்ந்து நம் உழைப்பை கொடுத்தால் மட்டும் வெற்றி பெற முடியாது சரியான முறையிலும் கொடுக்க வேண்டும்.
அதற்கு நமது தடைகள் எது என்பதை தெரிந்து கொண்டு அதை தாண்டி செல்வதற்கு எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதையும் உணர்ந்து அதற்கு ஏற்ப நமது உழைப்பை போட வேண்டும்.
எனவே தான் இந்த தடைகள் எல்லாம் இருக்கிறது, இதிலிருந்து சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற இந்த தகவல்களை கவனித்து செயல்பட வேண்டும் என்பதற்காக தான் இந்த பதிவு. உங்களுக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.
3. Ads for All Channels without Monetization
யூடியூபில் கொண்டுவந்துள்ள இன்னும் ஒரு Bad Update என்னவென்றால் அனைத்து வீடியோக்களும் விளம்பரங்கள் காட்டப்படும் என்பது தான்.
அதாவது யூடியூப் Monetization Eligiblelity அடைய தேவையில்லை, Monetization பெற்றிருக்க தேவையில்லை.
புதிய சேனல்கள் அனைத்து வீடியோக்களும் விளம்பரங்கள் காட்டப்படும்.
இதன்மூலம் என்ன புதிய யூட்யூப் சேனல்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றால்,
உதாரணமாக: ஒரு லட்சம் Subscribers கொண்ட ஒரு யூடியூப் சேனல் என்றால் கண்டிப்பாக அந்த சேனலுக்கு என அதற்கு இணையாக ரசிகர்களும் இருப்பார்கள். இந்த நிலையில் உள்ள ஒரு சேனல் வீடியோவில் விளம்பரங்கள் வந்தாலே பார்வையாளர்களுக்கு சற்று வெறுப்பை உண்டாக்கும்.
இது போல விளம்பரங்கள் வந்தால் வீடியோவை பார்க்காமல் வெளியேறவும் வாய்ப்பு இருக்கிறது.
அல்லது அது Skippable Ad ஆக இருக்கும் பட்சத்தில் உடனே Skip செய்யவே காத்து இருப்பார்கள்.
பெரிய சேனல்களுக்கே இந்த நிலை தான் என்றால், புதிதாக எந்த ஒரு பிரபலமும் இல்லாத, 40,50 அல்லது 100,200 views வந்து கொண்டிருக்கும் ஒரு ஆரம்ப சேனல்களில் இது போல எல்லா வீடுகளிலும் விளம்பரங்கள் காட்டப்பட்டால் அடுத்த அடுத்து எப்படி பார்வையாளர்கள் வீடியோக்களை தொடர்ந்து பார்ப்பார்கள்.
இதன் காரணமாக வீடியோக்களுக்கு கிடைக்ககூடிய பார்வை நேரத்தில் (watching hours) பாதிக்கு மேல் குறைய நிறையவே வாய்ப்புகள் இருக்கிறது.
இது U.S. நாட்டில் மட்டுமே இப்போதைக்கு அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
இதை அனைத்து நாடுகளிலும் அப்டேட் செய்து விட்டால். புதிய யூடியூப்பர்களின் பாடு பெரும் திண்டாட்டமாக தான் இருக்கும்.