YouTube New Update: How viewers found this video

KrishSel All in All

YouTube New Update: How viewers found this video - New Analystics Stats

What is New Update on YouTube Video Analystics?

YouTube New Update 2021 in video

யூடியூப் Analystics பகுதியில் புதிதாக ஒரு அப்டேட் செய்யப்பட்டுள்ளது இந்த அப்டேட் கண்டிப்பாக அனைத்து புதிய யூடியூப் சேனல்கள் மற்றும் வளர்ந்து வரும் யூடியூபர்கள் மற்றும் பெரிய யூடியூப் சேனல்கள் அனைவருக்கும் மிக சிறந்த ஒரு அப்டேட் ஆக இருக்கும்.
அப்படி என்ன அப்டேட் வந்துள்ளது என்பதை பற்றி இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம்.

New Update: How Viewers found this video


இந்த அளவிற்கு அனைவருக்கும் பயன்படக்கூடிய அந்த அப்டேட் என்னவென்றால் யூடியூப் Video Analystics-ல் புதிதாக "பார்வையாளர்கள் இந்த வீடியோவை எவ்வாறு கண்டுபிடித்தார்கள்" என்பது போன்று புதிய அப்டேட் வந்துள்ளது.
இதில்,

* YouTube Recommendations
  - YouTube Home
  - Up Next
* Channel Page
* YouTube search
* Notification
* Other

இதுபோன்று உங்களுடைய வீடியோக்களை பார்வையாளர்கள் எப்படி தேடி வந்தார்கள் எதன் மூலம் உங்களுக்கு இந்த வீடியோ பார்க்கப்பட்டது என்பது போன்ற அனைத்தையும் தனித்தனியாக பிரித்து குறிப்பிட்டு காட்டி இருப்பார்கள்.

இதன் மூலம் ஒரு தனிப்பட்ட வீடியோவின் பார்வையாளர்கள் எப்படி அந்த வீடியோவிற்கு வந்தார்கள் என்பதை உங்களால் தெரிந்துகள்ள முடியும்.

இதை வைத்துக் கொண்டு உங்களால் அடுத்தடுத்த வீடியோக்களை சரியான முறையில் உருவாக்கி அதற்கான அதிகமான பார்வையாளர்களை பெற்றுக்கொள்வதற்கு இந்த தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Usage of YouTube New Update: How Viewers found this video New Analystics Stats


உங்களது வீடியோக்கள் யூடியூப் தரப்பிலிருந்து பரிந்துரை செய்யப்படுகிறதா இல்லையா என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

அதேபோல யூடியூப் தனது முகப்பு பக்கத்தில் உங்களது வீடியோக்களை பரிந்துரை செய்கிறதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இதுமட்டுமின்றி ஒருவர் தனக்குத் தேவையான வீடியோக்களை யூடியூபில் தேடும்பொழுது குறிப்பிட்ட சொற்களை போட்டுதான் தேடுவார்கள். 

அதற்கு சம்பந்தப்பட்ட வீடியோக்கள் வரிசையாக ஒன்றின் கீழ் ஒன்றாக பரிந்துரைக்கப்படும் அவ்வாறு கொடுக்கப்படும் வரிசையில் முதல் பக்கத்தில் உங்களது வீடியோக்கள் இல்லை என்றாலும். 

அதில் பரிந்துரைக்கப்பட்ட மற்ற சேனல்களில் வீடியோக்களை பார்க்கும் பொழுது அந்த குறிப்பிட்ட வீடியோ ஓடிக் கொண்டிருக்கும் பொழுது அதில் வலதுபுறம் அந்த வீடியோவுக்கு சம்பந்தப்பட்ட வீடியோக்களை பரிந்துரைக்கப்பட்டு கொண்டிருக்கும். இந்த பட்டியலில் உங்களது சேனல் வீடியோக்கள் காட்டப்படலாம்.

இவ்வாறு உங்கள் வீடியோக்கள் பயன்படுத்தப்பட்டதா, அது எவ்வளவு சதவீதம் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

அடுத்தபடியாக நோட்டிபிகேஷன் இவை ஏதுமே இன்றி உங்களது சந்தாதாரர்கள் நோட்டிபிகேஷன் மூலமாக உங்களது வீடியோக்கள் அனுப்பட்டதா என்பதையும் தெரிந்து கொள்ளலாம். அப்படி அனுப்பப்படும் நோட்டிபிகேஷன் சதவீதம் எவ்வளவு என்பதையும் குறிப்பிட்டுள்ளார்கள்.

இதைத் தவிர்த்து மற்ற எந்தெந்த வழிகளில் எல்லாம் உங்களுடைய ஒரு தனிப்பட்ட வீடியோவை காண பாருங்கள் அவரகள் வந்துள்ளார்கள் என்பதை தெளிவாக
 மேலே சொன்னது போல பிரித்து பிரித்து குறிப்பிட்டு காட்டியுள்ளார்கள்.

இந்த தகவல்களை எல்லாம் வைத்துக்கொண்டு ஒரு வீடியோவை எப்படி உருவாக்கி அதை எந்தெந்த தளங்களில் உங்களால் முடிந்தவரை சரியான முறையில் பகிர்ந்து அதிகமான பார்வையாளர்களை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை உங்களால் கணித்துக் கொள்ள முடியும். 

இதன் மூலம் அடுத்து அடுத்து உங்கள் யூடியூப் சேனலை மென்மேலும் வளர்த்துக் கொள்ள இது மிகவும் ஒரு முக்கியமான அப்டேட் என்றே சொல்லவேண்டும்.


Tags