How to save your mobile data Tips and Tricks 2021

KrishSel All in All

How to save your mobile data Tips and Tricks 2021

எப்படி உங்களது மொபைல் தினசரி டேட்டாவை Save செய்து கொள்வது என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

Save mobile data
Save Mobile Data


இன்றைய சூழலில் ஆண்ட்ராய்ட் மொபைல் கண்டிப்பாக அனைவரும் வைத்திருக்குகிறோம்.  

இந்த ஆண்ட்ராய்ட் போன் அதிகப்படியாக பயன்படுத்துவதற்கு காரணம் என்ற நெட் பயன்பாடுதான்.

மக்கள் இப்போதெல்லாம் போனில் இன்டர்நெட் மூலமாகவே அதிகமான பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே ஒரு நாளைக்குரிய இன்டர்நெட் டேட்டா போதுமானதாக இருப்பது இல்லை.

இந்த பதிவின் மூலம் உங்களுடைய தினசரி டேட்டாவை தீர்ந்து விடாமல் நாள் முழுவதும்  பயன்படுத்திக்கொள்ள சில டிப்ஸ்களை பார்க்கலாம்.

இன்டர்நெட் அதிகமாக பொழுதுபோக்கிற்காகவே அதிகப்படியான மக்கள் பயன்படுத்துகின்றோம்.

அதில் குறிப்பாக பொழுதுபோக்கு வீடியோக்களை அதிகமாக பார்க்கிறோம்.

இதுபோல பொழுதுபோக்கு வீடியோக்கள் மற்றும் பிற உபயோகமான வீடியோக்கள் அனைத்தையும் பார்ப்பதற்கான சிறந்த இடமாக இருப்பது யூடியூப் தான்.

சமீபத்தில் டிக் டாக் முடக்கப்பட்ட நிலையில் யூடியூபே அதிகமான இடத்தை பிடித்து விட்டது.

1.எனவே யூட்யூபில் வீடியோக்கள் பார்ப்பதன் மூலம் உங்களுடைய தினசரி டேட்டா அளவு விரைவில் தீர்ந்து போய்விட வாய்ப்பிருக்கிறது.

2.யூடியூபே அடுத்து அதிகமாக நாம் பயன்படுத்துவது கூகுள் சர்ச் (google search) தான்.

நமக்கு ஏதேனும் விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் உடனே கூகுள் ஓபன் செய்து அதில் நமக்கு தேவையான விஷயங்களை உள்ளிட்டு தேட ஆரம்பிக்கிறோம்.

எனவே மொபைல் தினசரி டேட்டா அளவில் யூடியூப் மற்றும் கூகுள் இந்த இரண்டில் தான் அதிகமான டேட்டாக்களை செலவிடுகிறோம்.

இதற்கு அடுத்தபடியாக பொழுதுபோக்கு செயலிகள் இன்ஸ்டாகிராம் டிக் டாக் ஷேர் சேட் இது போன்ற சமூக வலைதளங்களை பொழுதுபோக்கு செயலிகளை நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதாவது வீடியோக்களை எடுத்து அதை மற்றவர்களுக்கு ஷேர் செய்து பொழுதை கழித்துக் கொண்டிருக்கிறோம் அல்லது மற்றவர்கள் அனுப்பியிருக்கும் வீடியோக்களை பார்ப்பதற்காகவே இந்த சமூக வலைத்தளங்களை நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இதுபோல் வீடியோக்களை பார்ப்பதன் மூலமும் அதிகபடியான டேட்டாக்கள் வீணாக்கப்படுகிறது.

எப்படி தினசரி டேட்டாவை சேவ் செய்து கொள்வது? 

மேலே குறிப்பிட்டுள்ளது போல யூடியூப் மற்றும் கூகுள் தான் அதிகமான டேட்டாக்கள் முதன்மையாக செலவழிக்கப்படுகிறது.

எனவே முதலில் யூடிபில் எப்படி எல்லாம் நமது டேட்டாவை சிக்கனமாக பயன்படுத்தி கொள்ளலாம் என்பதை பார்க்கலாம்.

How to Save YouTube Data Usages?

யூடியூபில் நீங்கள் பார்க்கும் வீடியோக்களை 5,6 தரத்தில் (quality) நீங்கள் பார்த்துக் கொள்ள முடியும்.

அதாவது 144P, 240P, 360P, 480P, 720, 1180P இதுபோன்ற வேறு வேறு தரங்களில் வீடியோக்கள் பதிவு இடப்பட்டிருக்கும்

ஒரு சில வீடியோக்களில் மட்டும் மூன்று தரத்தில் கொடுக்கப்பட்டிருக்கும்.

இதில் அதிகப்படியாக உள்ள தரத்தில் சில சேனல் மட்டுமே வீடியோக்களை பதிவிட்டு இருப்பார்கள் மற்றபடி 720P தரங்களில் கண்டிப்பாக அனைத்து யூடியூப் சேனல்களும் வீடியோக்கள் பதிவிட்டு இருப்பார்கள்.

எனவே நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான் நீங்கள் யூடியூபில் வீடியோவை பார்க்கும் பொழுது நீங்கள் எது சம்பந்தமான வீடியோக்கள் பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்து அந்த வீடியோவின் தரத்தை (Qulatiy) குறைத்து அதன் பின் வீடியோக்களை பார்த்தீர்கள் என்றால் மிக மிக குறைவான அளவிலேயே data செலவிடப்படும்.

உதாரணமாக: நீங்கள் பார்க்கும் வீடியோ ஒரு பொழுதுபோக்கு வீடியோ என்றால் அதனை 144p அல்லது 240p என்ற தரத்தில் மட்டும் வைத்துப் பார்த்தாலே போதுமானதாக இருக்கும்.

அதேபோல சில வீடியோக்களில் நாம் குறைகளை மட்டுமே கேட்போம் அதாவது ஆடியோவை மட்டுமே கேட்கும் இதுபோன்ற வீடியோக்களை கண்டிப்பாக நீங்கள் 144p என்ற மிக மிக குறைந்த தரத்தில் மட்டுமே வைத்துப் பார்த்தாலே போதுமானது.

அடுத்து ஏதேனும் முக்கியமான வீடியோக்கள் பார்க்கிறீர்கள் அதாவது அந்த வீடியோவில் இருக்கும் தகவலை நீங்கள் பார்த்து அதேபோல் செய்ய வேண்டியதாக இருக்கிறது என்றால் அந்த வீடியோவின் தரத்தை 720p வரை நீங்கள் வைத்து பார்க்கலாம் அதுவே போதுமானதாக இருக்கும்.

அதாவது ஏதேனும் இணையத்தில் அப்ளை செய்ய ஒரு டுடோரியல் வீடியோ பார்க்கிறீர்கள் என்றால், உதாரணமாக: எப்படி ஆன்லைனில் ஓட்டர் ஐடி அப்ளை செய்வது? ஆதார் கார்டு அப்ளை செய்வது, ஏடிஎம் கார்டு அப்ளை செய்வது, இதுபோன்ற தகவலுக்காக நீங்கள் வீடியோ பார்க்கிறீர்கள் என்றால் கட்டாயமாக அதில் இருக்கும் அந்த எழுத்துக்கள் சரியாக தெரியாமல் இருக்கும் எனவே இதுபோன்ற வீடியோக்களுக்கு மட்டும்  அதிகமான தரத்தில் வைத்துவிட்டு பிறகு வீடியோக்களை பார்க்கலாம்.

இதற்கும் அதிகபட்சமாக 720P  என்ற தரம் போதுமானதாக தான் இருக்கும். உங்களுக்கு தேவைப்பட்டால் அதிகபட்ச தரமான 1080P என்பதை வைத்துக் கொள்ளலாம் ஆனால் அது அந்த அளவுக்கு தேவையில்லை என்பதுதான் உண்மை.

அடுத்தபடியாக யூட்யூப் App-ல் நீங்கள் செய்ய வேண்டிய செட்டிங்ஸ் என்னவென்றால்? ஆட்டோ பிளே (Auto Play) என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை நீங்கள் Off செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

ஏனென்றால் நீங்கள் தேடிப் போகும் ஒரு வீடியோவை பார்த்து விட்ட பிறகு அடுத்த வீடியோ அதுவாகவே தானாக play ஆக ஆரம்பித்துவிடும் அதன் மூலமாகவும் டேட்டாக்கள் வீணாகும்.

இதை Off செய்து வைப்பதன் மூலம் உங்களுக்குத் தேவையான வீடியோக்களை மட்டும் நீங்கள் பிளே செய்து பார்த்துக் கொள்ளலாம்.

இதன் மூலம் தேவையில்லாத வீடியோக்கள் பிளே ஆவதை தடுக்க முடியும். தினசரி டேட்டா களையும் சேமிக்க முடியும்.

அடுத்தபடியாக யூடியூப்பில் செய்யவேண்டிய செட்டிங்ஸ் என்னவென்றால் Lite mode on செய்து கொள்ள வேண்டும்.

இதன் மூலம் உங்கள் data சேமிக்கப்படும்.

How to Enble YouTube Lite mode data Saver:

Settings Steps:

• யூட்யூப் ஆப்பை திறந்து கொள்ளுங்கள்.

• உங்களுடைய சேனல் லோகோ வை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

•அதில் கடைசியாக கீழே செட்டிங்ஸ் ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

• இதில் general என்ற ஆப்ஷன் முதலாவதாக இருக்கும் அதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

• இதில் Lite mobile data usage என்ற ஆப்ஷன் இருக்கும் இதை ஆன் செய்து கொள்ளுங்கள்.

இவ்வாறு நீங்கள் பார்க்கும் வீடியோக்களை பொறுத்து அதனுடைய கோட்டையை குறைத்து வைத்து பார்ப்பதன் மூலம் உங்களுடைய தினசரி டேட்டா அளவில் அதிகபட்சமாக செலவிடாமல் மிக குறைந்த அளவில் மட்டுமே செலவிடப்படும்.

அடுத்தது இதேபோல நாம் அதிகம் பயன்படுத்துவது கூகுள் சர்ச் தான்.

இதிலும் உங்களால் ஒரு சிறிய டிப்ஸை பயன்படுத்தி உங்களது டேட்டாவை சிக்கனம் படுத்திக்கொள்ள முடியும். அதாவது குறைவாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.

கூகுள் குரோமில் நீங்கள் பயன்படுத்துவதற்கு முன்பு டேட்டா Save ஆப்ஷன் ஆன் செய்து கொள்ளுங்கள்.

இதன் மூலம் உங்களுடைய டேட்டா குறைவாக செலவிடப்படும்.

How to On Save Data on Google Chrome?

 • கூகுள் குரோமை ஓபன் செய்து கொள்ளுங்கள்.

 •வலதுபுறம் மூன்று புள்ளி இருக்கும் அதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

 •இதில் செட்டிங்ஸ் ஆப்ஷன்ஸ் இருக்கும் அதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

•இந்த செட்டிங்ஸ் ஆப்ஷனில் Lite mode என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

• இதில் இந்த லைட் மோடை On/Off ஆப்ஷன் இருக்கும் அதை ஆன் (On) செய்து கொள்ளுங்கள்.

அவ்வளவுதான் இப்போது நீங்கள் கூகுள் குரோமில் எவ்வளவு நேரம் பயன்படுத்தி கொண்டிருந்தாலும் உங்களுடைய டேட்டாவை சேமித்து கொடுக்கும்.

இந்த Tips and Tricks கடைபிடிக்கிறார்கள் என்றாலே உங்களது தினசரி டேட்டா விரைவில் முடிந்து விடுவதை பெருமளவு தடுத்துக் கொள்ளலாம்.

நான் யூடியூப் மற்றும் கூகுள் குரோம் அதிகம் பயன்படுத்துவதில்லை சோசியல் மீடியாவை மட்டுமே அதிகம் பயன்படுத்துகிறேன் நான் எப்படி டேட்டாவை சேமித்து கொள்வது என்றால்!?

Social மீடியாவில் நீங்கள் பயன்படுத்தும் பொழுது உங்கள் நண்பர்களுடன் நீங்கள் மெசேஜ் மூலம் அரட்டை அடிப்பதால் எந்த அளவிலும் அதிகமான டேட்டா செல்லவிடாது ஆனால் இன்ஸ்டாகிராம் ஷேர் சாட் இது போன்ற வலை தளங்களில் வீடியோக்களை பார்ப்பதன் மூலம் கண்டிப்பாக அதிகமான டேட்டாக்கள் செலவிடப்படும்.

3. ஃபேஸ்புக் போன்ற சமூக வலை தளங்களில் நீங்கள் பயன்படுத்தினால் கண்டிப்பாக உங்களது டேட்டா  மற்றும் பேட்டரிகள் விரைவிலேயே தீர்ந்து போகும்.

காரணம் ஃபேஸ்புக் ஆப் பேக்ரவுண்டில் ஓடிக்கொண்டே இருக்கும். எனவே அதில் அதிகமான டேட்டா மற்றும் பேட்டரியும் குறைப்பதற்கு இந்த ஃபேஸ்புக் ஆப் மூலதனமாக இருக்கும்.

எனவே பேஸ்புக் ஆப்பை பயன்படுத்துவதை தவிர்த்து அதற்கு மாற்றாக ( ஃபேஸ்புக்கில் லைட்) Facebook Lite version App அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதே போல மற்ற சமூக வலைதளங்கள் ஆப்பை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதையும் அன்இன்ஸ்டால் (Uninstall) செய்து விட்டு அதில் லைட் வெர்ஷன் (lite version) கண்டிப்பாக இருக்கும் அதை தேவைப்பட்டால் இன்ஸ்டால் (install) செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

எனவே இது போல சமூக வலைதளங்களில் பொழுதுபோக்கு வீடியோக்களை மட்டுமே நீங்கள் பார்க்கிறீர்கள் என்றால் நீங்கள்தான் அதில் சற்று குறைவான வீடியோக்களை பார்த்துக் கொள்ள வேண்டியதாக இருக்கும்.

இதுமட்டுமல்லாமல் மொத்தமாகவே மொபைலில் டேட்டாவை சேமித்து வைத்து அதாவது குறைவாக செலவிட ஒரு ஆப்ஷன் இருக்கிறது.

உங்களுக்கு தேவைப்பட்டால் இந்த ஆப்ஷனை நீங்கள் On செய்து கொள்ளலாம்.

இந்த ஆப்ஷன் ஒருசில ஆண்ட்ராய்டு மொபைல்களில் மட்டுமே இருக்கும் நாம் தேவைப்பட்டால் அதை ஆன் செய்து கொள்ளலாம்.

 இதில் என்ன ஒரு பிரச்சனை என்றால் இந்த டேட்டா Save Option ஆன் செய்து வைப்பதன் மூலம் நீங்கள் பார்க்கும் எந்த ஒரு வீடியோவும் சிறிய அளவிலேனும் இணையதளத்தில் தேடி போகும் பொழுதும் சரி சற்று மெதுவாகவே செயல்படும்.  ஆனால் உங்களுடைய தினசரி டேட்டா குறைவாக செலவிடப்படும்.



Tags