Why YouTube Payment Reducing while Receiving to Bank?

KrishSel All in All

Why YouTube Payment Reducing When Receiving to Bank?

உங்கள் யூடியூப் சேனலில் நீங்கள் சம்பாதித்த பணம் உங்கள் வங்கிக்கு வரும் போது ஏன் குறைகிறது? என்ன காரணம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

YouTube payment reducing
Payment reducing problem

பொதுவாக யூடியூபில் நாம் சம்பாதிக்கும் பணம் முழுவதுமாக நமக்கு வருவது இல்லை. 

நமது சேனலில் வரும் வருமானப் பணத்தில் ஒரு பங்கு யூடியூப் அவர்களுக்கான பங்கை எடுத்துக்கொண்டு பிறகுதான் நமக்கான பங்கை கொடுப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

இவ்வாறு கொடுக்கப்படும் பணத்தில் நமது வங்கிக்கு அனுப்பப்படும். இதிலும் ஒரு குறிப்பிட்ட தொகை குறைந்து காணப்படும்.

YouTube Payment Reducing Reasons:

1. யூடியூப் நமக்கு Doller$ -ல் தான் பணம் கொடுக்கிறார்கள். அதை நமது நாட்டின் பணத்தில் அதாவது ரூபாய் ( indian rupee₹) -ல் மாற்றி நமது வங்கிக்கு அனுப்பப்படும். இவ்வாறு டாலர்களில் இருந்து இந்தியா ரூபாயில் அனுப்பி வைப்பதற்கு என எடுக்கப்படும் தொகை தான் இது. (Transaction Fees) இதன் காரணமாக தான் யூட்யூபில் இருந்து வங்கிக்கு அனுப்பப்படும் பணம் குறைந்து வருகிறது.

2. உங்கள் யூடியூப் சேனலின் வருமானம் அதிகமான அளவில் இருக்கிறது என்றால் அதாவது வருமானவரி (incom Tax) கட்டும் அளவிற்கு இருக்கிறது என்றால் அதற்கான பணத்தை எடுத்துக் கொண்டு மீதி தான் உங்கள் வங்கிக் கணக்கில் வந்து சேரும்.

இந்த இரண்டு காரணங்களால் தான் உங்கள் யூடியூப் சேனலில் வருமானத் தொகை adsense account-ல் இருந்ததை விட 10%-30% குறைந்து வங்கி கணக்கில் வருகிறது.

இந்த Transaction Fees நிரந்தரமான தொகையாக இருக்காது. காரணம் ஒவ்வொரு வங்கியை பொருத்து இது மாறுபட்டு இருக்கும்.

மற்றும் டாலர் மதிப்பு தினந்தோறும் மாறிக் கொண்டே இருப்பதால்.
டாலர் மதிப்பை பொருத்தும் நமக்கு அனுப்பும் பணமும் மாறிக் கொண்டே இருக்காது.

Adsense அக்கவுண்டில் இருந்து எந்த மதிப்பில் அனுப்படுகிறதோ அதே மதிப்பு தொகைதான் நமது வங்கிக்கு அனுப்பப்படும்.

உதாரணமாக:
உங்கள் யூடியூப் சேனல் வருமானம் 100$ என வைத்துக் கொண்டால்.
அதன் இந்திய ரூபாய் மதிப்பு சராசரியாக 70₹ என நாம் வைத்துக் கொள்ளலாம்.

100×70 = 7000₹ என்ற அளவில் நமக்கு பணம் வரும்.
ஆனால் இந்த 7000ரூபாய் முழுவதுமாக வராமல் Translation fees எடுத்துக் கொண்டு மீதமுள்ள பணம் தான் வரும்.
அது ஒவ்வொரு வங்கியை பொருத்து

Income     Transaction Fees   FinalAmount
7000₹ க்கு      - 150₹                       - 6850₹
7000₹ க்கு      - 200₹                       - 6800₹
7000₹ க்கு      - 250₹                       - 6750₹

என்ற அளவுகளில் வெவ்வேறு அளவு தொகை எடுக்கப்படுகிறது.
இது அந்தந்தப் bank பொருத்து இருக்கும்.

மேலே குறிப்பிட்டுள்ள Transaction Fees பணம் மதிப்பு உதாரணத்திற்காக குறிப்பிட்டுள்ள அளவு மட்டுமே. 

இதை சரியாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் உங்கள் வங்கிக்கு சென்று Passbook -ல் Entery போட்டு அதில் பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.

அதில் தெளிவாக குறிப்பிட்டு இருக்கும்.
எவ்வளவு யூடியூப் பணம் அனுப்புகிறது, அதில் எவ்வளவு பணம் Transaction Fees எடுக்கப்பட்டுள்ளது, ஒரு வேளை உங்களுக்கு அதிகமான வருமானம் வருகிறது என்றால் எவ்வளவு வருமானவரி எடுக்கப்பட்டுள்ளது
என் அனைத்து தகவல்களும் தெரிந்து கொள்ள முடியும்.

மேலும் யூடியூபில் doller$ மதிப்பில் தான் உங்கள் வருமானம் காட்டப்படும்.
இதை ரூபாய் மதிப்பில் மாற்றி வைத்துக் கொண்டால். இன்னும் சரியான அளவில் உங்களால் Check செய்து பார்த்துக் கொள்ள முடியும்.

How to change Doller to Indian Rupee on YouTube Studio

1. உங்கள் யூடியூப் சேனலை open செய்து கொள்ளுங்கள்.
2. இடது புறம் கீழே Settings கீர்👉 ⚙️ option இருக்கும்.
*அதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
3. இதில் முதல் Option-னே இது தான்
[Generel - default unit - Curreny ]
இந்த Currency Option ஐ கிளிக் செய்து அதில் உங்களுக்கு தேவையான Currency-ஐ தேர்வு செய்து கொள்ளுங்கள். (Indian rupee)

* இதில் Default ஆகா USD $ இருக்கும், அதை மாற்றி விட்டு INR ₹ - Indian Rupee வைத்துக் கொள்ளுங்கள்.

அவ்வளவு தான் இப்போது உங்கள் யூடியூப் வருமானம் இந்திய ரூபாய் மதிப்பில் காட்டப்படும்.

இதைப் பற்றிய மேலும் வீடியோ வடிவிலான தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.👇👇👇👇


Tags