Top 15 YouTube Channel in Tamilnadu with Million Subscribers

KrishSel All in All

Top 15 YouTube Channel in Tamilnadu with Million Subscribers

தமிழ்நாட்டின் மிகப்பெரிய 15 யூடியூப் சேனல்கள்

Top 15 Tamil Youtubers
Top 15 Tamil Youtubers

Top 15 YouTube Channels

1. Village Cooking Channel
2. Mic Set
3. Madhan Gowri
4. Village Food Factory
5. Madras Samayal
6. Black Sheep
7. Nakkalites
8. Minutes Mystery 
9. Eruma Sani
10. Parithabangal
11. Tamil Tech
12. RishiPidia
13. Jump Cuts
14. My Country Food
15. Top 10 Tamil

இந்த 15 யூடியூப் சேனல்கள் தான் தற்போது Subscribers அளவில் தமிழ்நாட்டில் பொருத்த வரை மிகப்பெரிய சேனல்கள்.

இதில் Cooking Channel, Tech Channel, Review Channel, information sharing Channel, Entertainment Channel, Mystery Channel, என அனைத்து வகையான சேனல்களும் இருக்கிறது.

பொதுவாக Top Level Channels பற்றி பதிவிடுபவர்கள் பெண்கள் நடத்தும் யூடியூப் சேனல்களை வரிசை படுத்துவதில் சேர்ப்பதில்லை.

ஆனால் நான் இந்த பதிவில் அனைத்து வகையான சேனல்களையும் குறிப்பாக பெண்கள் சேனல்களையும் சேர்த்து வரிசைப்படுத்தி உள்ளேன்.

1. Village Cooking Channel 

முதல் இடத்தில் உள்ள மிகப் பெரிய யூடியூப் சேனலான village Cooking Channel - 6,7700,000 Millions Subscribers இருக்கிறார்கள்.

இது அனைவருக்கும் பிடித்த ஒரு சமையல் சேனல்.
கிராமத்து சமையல்கள் அனைத்தும் மிகவும் அருமையாக, பெரிய அளவில் தாத்தாவுடன் சேர்ந்து பேரன்கள் சமைத்து அசத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

2. Mic Set - Entertainment Channel

இரண்டாவது இடத்தில் உள்ள mic Set யூடியூப் சேனல் - 5,730,000 Millions  Subscribers .

இந்த சேனலில் Entertainment வீடியோக்கள் போடப்படுகிறது.
School, collage students பற்றிய போடப்படும் பொழுதுபோக்கு வீடியோக்கள் அனைத்தும் மக்களிடையே அதிக அளவில் views-ஐ பெற்று தந்துள்ளது.

Mic set Sri Ram என்றாலே அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. அந்த அளவிற்கு இந்த சேனல் அனைவர் மனதிலும் இடம் பிடித்தது உள்ளது.


3. Madan Gowri - information sharing

மூன்றாம் இடத்தில் உள்ள Madan Gowri யூடியூப் சேனல் கண்டிப்பாக அனைவருக்கும் தெரிந்து இருக்கும்.
இந்த சேனலின் Subscribers - 4,340,000 Millions

இந்த சேனலை பற்றி அனைவருக்கும் தெரிந்து இருக்கும் நாட்டின் அனைத்து முக்கியமான சம்பவங்களையும் தகவல்களாக மக்களுக்காக வீடியோ வடிவில் கொடுத்துக் கொண்டு இருக்கிறார் - மதன் கௌரி.

4. Village Food Factory

நான்காம் இடத்தில் உள்ள village food factory சேனல் கண்டிப்பாக பெரும்பாலும் மக்களுக்கு தெரிந்து இருக்கும். இந்த சேனலின் Subscribers - 4,230,000 Millions இருகிறார்கள்.

தற்போது இந்த சேனலில் முன்பு போல் வீடியோக்கள் பதிவிடுவது இல்லை.
இதன் காரணமாக Subscribers மற்றும் Channel Reach சற்று குறைந்து காணப்படுகிறது.

Daddy ஆறுமுகம் என்றாலே அனைவருக்கும் கண்டிப்பாக தெரிந்து இருக்கும்.
அதிக அளவிலான உணவு (bulk food) சமைத்து வெற்றி பெற்ற முதல் சேனல் தமிழில் Village food factory தான்.

யூடியூப் சேனலின் மூலம் அதிக அளவில் வளர்ச்சி பெற்று மக்கள் மனதில் இடம் பெற்றதால், பெரிய தொலைக்காட்சியில்  தனது சமையல் வீடியோக்கள் தனி நிகழ்ச்சியாக ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. இந்த பெருமையும் இந்த சேனலுக்கு தான் சேரும்.


5. Madras Samayal

ஐந்தாம் இடத்தில் உள்ள இந்த சேனல் ஒரு சமையல் சேனல் Subscribers - 4,010,000 Millions தனிப்பட்ட முறையில் ஒரு பெண் நடத்தும் யூட்யூப் சேனல் என்பதில் மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது.

இந்த சேனலும் மற்ற பெரிய யூடியூப் சேனல்கள் போலவே பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

சமையல் என்றாலே Madras Samayal சேனலில் பாருங்கள் என் சொல்லும் அளவிற்கு மக்கள் இடத்தில் சென்றடைந்து உள்ளது.

6. Black Sheep - Entertainment

ஆறாம் இடத்தில் உள்ள இந்த சேனல் ஒரு Entertainment அடிப்படையில் இயங்கும் சேனல் இதில் 3,440,000 Millions Subscribers இருக்கிறார்கள்.

இந்த சேனல் புதிய இளம் திறமையாளருக்கு வாய்ப்பளிக்கும் வகையில் அனைத்து விதமான முயற்சிகளும் கொண்டதாக இருக்கிறது.

சமுக பிரச்சினைகளை காமெடி வடிவில் மக்களிடையே கொண்டு சேர்கின்றனர்.


7. Nakkalites - Entertainment Channel

ஏழாம் இடத்தில் உள்ள இந்த சேனல் Entertainment Channel இந்த சேனலின் Subscribers - 3,360,000 Millions
இந்த சேனலும் கண்டிப்பாக அனைவருக்கும் தெரிந்து இருக்கும்.
பெரிய குடும்பமாக சேர்ந்து அனைவரும் இந்த சேனலில் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அதிகமான நபர்களை கொண்டு வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

8. Minutes Mystery 

எட்டாம் இடத்தில் உள்ள இந்த சேனல் இரண்டு சகோதரர்கள் சேர்ந்து நடத்தும் சேனல்.
இந்த சேனலில் 3,430,000 Millions Subscribers கொண்டுள்ளது.

தனது குரல் திறமையால் பெரும்பாலான மக்களை கவர்ந்து அதிக அளவில் views-ஐ பெற சேனல்.
தமிழில் முதல் பெரிய mystery சேனலும் இது தான். இந்த சேனலை முன்மாதிரியாக கொண்டு பல புதிய சேனல்கள் தொடங்கப்பட்டு இருக்கிறது.

9. Eruma Sani - Entertainment

ஒன்பதாம் இடத்தில் உள்ள இந்த சேனலும் கண்டிப்பாக அனைவருக்கும் தெரிந்து இருக்கும். 
இந்த சேனலில் 3,160,000 Millions Subscribers இருக்கிறார்கள்.

 Mic Set Sri Ram போல Eruma Sani vijai என்று தனி அடையாளம் பெற்றுக் கொடுத்து இருக்கிறது இந்த சேனல். 

மற்றும் இது போல் வித்தியாசமான பெயர் பெற்று அதிக அளவில் மக்கள் மனதில் அதிக இடம் பிடித்துள்ளது குறிப்பிட்டத் தக்கது.

10. Parithabangal - Entertainment

பத்தாம் இடத்தில் உள்ள பரிதாபங்கள்  சேனல் பற்றி சொல்லவே தேவையில்லை இல்லை என நினைக்கிறேன்.
 கண்டிப்பாக அனைவருக்கும் தெரிந்து இருக்கும்.
இந்த சேனலின் Subscribers - 2,570,000 Millions இருக்கிறார்கள்.

கோபி, சுதாகர் இந்த இரண்டு பேரின் மிகப்பெரிய ரசிகர்களால் மிக விரைவிலேயே அதிக Subscribers பெற்ற சேனல் இது.
ஏனென்றால் முன்பு மெட்ராஸ் சென்ட்ரல் சேனலில் தான் இந்த இருவரும் இருந்தார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
அதிலிருந்து வெளியே வந்து புதிதாக தொடங்கப்பட்ட சேனல் தான் இந்த parithabangal சேனல்.

மெட்ராஸ் சென்ட்ரல் சேனலில் போட பட்டு அதிக Reach அடைந்த வீடியோ என்றால் அது பரிதாபங்கள் என்ற தலைப்பில் போடப்பட்ட வீடியோக்கள்.

எனவே தான் Parithabangal என்ற பெயரில் புதிதாகக் சேனல் தொடங்கினார்கள் என்று சொல்லலாம்.

இந்த இருவரின் காமெடி மற்றும் நடிப்பிற்க்காகவே இந்த சேனல் அதிக அளவில் Reach அடைந்தது.



11. Tamil Tech 

Tech சேனலில் முதல் இடத்தில் உள்ள தமிழ் டெக் சேனல் Subscribers அடிப்படையில் 11-ம் இடத்தில் உள்ளது.

இந்த சேனலில் Subscribers- 2,390,000 Millions இருக்கிறார்கள்.


தமிழ் டெக் சேனல் தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.

பல புதிய சேனல்கள் தமிழ் டெக் போல் வரவேண்டும் என, ஒரு முன் மாதிரியாக (Roll Model) எடுத்துக் கொண்டு சேனல் தொடங்கி இருக்கிறார்கள்.

இவரை பின் தொடர்வது மட்டும் அல்லாமல் காப்பி அடித்து அப்படியே வீடியோ போடும் சேவைகளும் இருக்கிறது.

New phone review, App review, All Tech News and more அனைத்தும் சிறப்பாக செய்து வரும் சேனல் அனைவருக்கும் பிடித்த தமிழ் டெக் சேனல்.

12. RishiPidia - Mystery Channel


RishiPidia 12-ம் இடத்தில் உள்ள இந்த சேனலில் 2,300,000 Millions Subscribers இருக்கிறார்கள்.
 Rishi என்ற தனது சொந்த பெயரை கொண்டு மர்மமான மற்றும் அமானுஷ்யம் நிறைந்த  உண்மையில் உலகில் நடந்த சம்பவங்களை வீடியோவாக கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.
இந்த சேனலும் அதிகமான பேருக்கு ஒரு பிடித்த சேனல். இவருக்கு என தனி Followers இருக்கிறார்கள்.

Mystery வீடியோக்கள் போடுவதால் யூட்யூப் தரப்பில் இருந்து சேனலுக்கு நிறைய பிரச்சினை காரணமாக இடையில் வீடியோக்கள் போடுவதை நிறுத்திவிட்டார்.
நிறைய இடையூறுக்கு பிறகு மீண்டும் தற்போது வீடியோ பதிவிட்டு வருகிறார்.

13. Jump Cuts - Entertainment Channel

13-ம் இடத்தில் உள்ள jump Cuts சேனல் 2,150,000 Millions Subscribers கொண்டு உள்ளது.
மிகவும் கடினமான உழைப்பை இந்த சேனலில் பார்க்க முடியும். 

ஏன் அப்படி சொல்கிறேன் என்றால், தமிழில் எனக்கு தெரிந்த வரையில் முதல் முறையாக ஒரே நபர் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் மாறி மாறி தானே நடித்து வீடியோக்களை போடுவார். 
அதன் மூலம் வெற்றிகரமாக சேனலை millions கணக்கில் Followers பிடித்துள்ளது என்பது மிகவும் பெருமையான விசியம் தானே. 

இதற்கு முழு காரணம் அவரின் நடிப்பு திறன், மற்றும் வீடியோ Edit செய்யும் விதமாக தான். 

14. Sothanaigal 

14-ஆம் இடத்தில் உள்ள Sothanaigal சேனலில் 1,870,000 மில்லியன் Subscribers கொண்டு உள்ளது.

இந்த சேனலில் Entertainment வீடியோக்கள் போடப்படுகிறது.
School, collage students பற்றிய போடப்படும் பொழுதுபோக்கு வீடியோக்கள் அனைத்தும் போடுகின்றனர்.

Mic set Channel இந்த சேனலில் இருந்து பிரிந்து தான் தொடக்கப்பட்டது. 

இது இந்த சேனல் Followers அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

எனவே, Mic set மற்றும் Sothanaigal சேனல்களில் சில வீடியோக்கள் ஒரே உள்ளடக்கத்தைக் (Content) கொண்டதாக இருப்பதை பார்க்கலாம்.

15. My Country Food

15-ஆம் இடத்தில் உள்ள My Country Food சேனலில் 1,540,000 மில்லியன் Subscribers கொண்டு உள்ளது.
சமையல் சேனல் என்பது சேனல் பெயரை பார்க்கும் போதே உங்களுக்கு தெரிந்து இருக்கும். 
ஆனால், முழுக்க முழுக்க கிராமத்து பாரம்பரிய உணவுகளை சமைத்து அசத்திக் கொண்டு இருக்கும் சேனல் இது.

மொத்த குடும்பமும் சேர்ந்து சமைத்து வீடியோக்களை பதிவிட்டுவார்கள்.

முக்கியமான விஷயம் என்னவென்றால் பாரம்பரிய உணவுகளை அனைவருக்கும் திரும்ப நினைவூட்டும் வகையிலும், வரும் கால தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையில் இருப்பது மிகவும் முக்கியமான பாராட்ட வேண்டிய சந்தோஷமான விஷயம் ஆகும்.

இந்த சேனலுக்கு எனவும் தனி Followers இருக்கிறார்கள். 
My country food என்ற இந்த பெயர் தெரியாதவர்கள் கூட ஆனந்தி என்ற பெயரை சொன்னாலே தெரியும் அந்த சேனல் எனக்கும் பிடிக்கும் என சொல்லும் அளவிற்கு மக்கள் மனதில் இடம் பிடித்து உள்ள சேனல்.
எனக்கும் இந்த சேனல் பிடித்த ஒரு சேனல்.

16. Top 10 TamilApp Review


கடைசியாக, Top 16 Youtubers Channels Tamil  வரிசையில் 16-ம் இடத்தில் உள்ள சேனல் டாப் 10 தமிழ் சேனல் இந்த சேனலில் 1,440,000 Millions Subscribers இருக்கிறார்கள்.

Subscribers அடிப்படையில் தான் இந்த சேனல் 16-ம் இடத்தில் உள்ளது.
ஆனால் Tech சேனலில் முதல் 5 அல்லது 10 இடத்தில் இருக்கிறது.

இந்த சேனலும் அதிகமான Followers ஐ கொண்டு இருக்கும் சேனல்.
App Review செய்யும் சேனலில் முதல் இடத்தில் இருக்கிறது.

புதிதாக வரும் பயனுள்ள அனைத்து வகையான App களையும் உடனுக்குடன் சிறந்த முறையில் ரிவ்யூ செய்து வீடியோக்கள் போடப்படுகிறது இந்த சேனலில்.

App review மட்டும் இல்லாமல் மற்ற Product review-ம் செய்யப்படுகிறது.
தற்போது இரட்டையராக வந்து கலக்கி கொண்டு இருக்கிறார்.


இந்த Top 15 Youtubers Channels  தவிர இதே போல அதிக தனக்கென தனி Followers - ஐ கொண்டு இயங்கும் நிறைய சேனல்கள் இருக்கின்றன.

subscribers அடிப்படையாக கொண்டு மட்டுமே இதை வரிசைப்படுத்தி உள்ளேன்.

மேலும் இந்த Top 16 தமிழ் சேனல்களும் தனது கடின உழைப்பால் மட்டுமே இவ்வளவு பெரிய உயரத்தை அடைந்து இருக்கிறார்கள்.

மேலும், நான் இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது Top 15 YouTube Channels பற்றிய ஒரு சில விஷயங்களை மட்டுமே. 
ஒவ்வொரு சேனலுக்கும் தனிப்பட்ட முறையில் சிறப்பு அம்சங்களை கொண்டு சேனலை நடத்துகின்றனர்.
எனவே தான் அவர்களுக்கு என தனி Followers-ம் இருக்கிறார்கள்.





Tags