How to Download Free Music for Youtube Totally Free Music and Sound Effects | Use Without Any Copyright 2021
உங்கள் யூடியூப் சேனல் வீடியோக்களுக்கு எப்படி முற்றிலும் இலவச Music மற்றும் Sound Effects Download செய்வது, மற்றும் எந்த வித Copyright-ம் வராமல் எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பொதுவாக புதிய யூடியூப்பர்கள் தங்கள் வீடியோக்களுக்கு மூன்றாம் தரப்பினர் இசைகளையே தேடி எடுப்பார்கள்.
அதாவது google ல் எதாவது Free Music Download இணைய தளத்தை தேடிச் சென்று அதிலிருந்து Music -ஐ பயன்படுத்திக் கொள்கின்றனர்.
இவ்வாறு செய்வதினால் கண்டிப்பாக உங்களுடைய வீடியோக்களுக்கு காப்பிரைட் பிரச்சினை வருவதற்கு அதிகமான வாய்ப்பு இருக்கிறது.
ஏனென்றால் இது போல மூன்றாம் தரப்பு Free Music Download இணையதளத்தில் இருந்து எடுக்கப்படும் இசைகள் முற்றிலும் இலவசமாக இருக்கும் என்று கூற முடியாது.
ஒவ்வொரு இணைய தளத்திற்கும் அவர்களின் சட்டதிட்டங்கள் மாறுபட்டு காணப்படும்.
அவற்றின் நிபந்தனைகளை சரியாக வாசிக்காமல் தெரிந்து கொள்ளாமல் அவர்களின் இசையை எடுத்து பயன்படுத்தி விட்டால்,
தற்போது இலவசம் என்று கொடுக்கப்பட்டிருக்கும் பின்வரும் காலங்களில் அதை பணம் கொடுத்து வாங்குவது என்ற வகையில் அவர்கள் நிபந்தனைகளை மாற்றி விட்டால் கண்டிப்பாக உங்களுடை சேனல் அல்லது வீடியோக்களுக்கு பிரச்சனை வரும்.
எனவே இது போல மூன்றாம் தரப்பு (Third-party) இணைய தளத்திலிருந்து நீங்கள் இலவச இசையை எடுத்து பயன்படுத்த விரும்பினால் அவர்களின் நிபந்தனைகள் மற்றும் சட்டதிட்டங்களை அதாவது அந்த இணையதளத்தின் டிஸ்கிளைமர் (Desclaimer )பகுதியை முற்றிலும் நன்றாக வாசித்து தெரிந்து கொண்டு பயன்படுத்துவது நல்லது.
எனவே இது போன்ற எந்தவித பிரச்சனையும் உங்களது சேனல்கோ அல்லது குறிப்பிட்ட வீடியோக்களுக்கு எந்த வித Copyright பிரச்சினையும் வரக்கூடாது என்று நினைத்தால்.
இது போன்ற தனிப்பட்ட Free music download Website-ஐ பயன்படுத்தாமல்.
யூடியூப் தரப்பிலிருந்தே கொடுக்கப்படும் Free மியூசிக் லைப்ரரி (YouTube Free Music Library) என்ற அந்த ஆப்ஷனை பயன்படுத்திக் கொள்வது நல்லது.
இது Free music and Sound Effects Download செய்து கொள்ள மிகவும் சுலபமான வழிமுறையும் கூட.
உங்களுக்கு தேவையான அனைத்து வகையான மியூசிக் டவுன்லோட் செய்து பயன்படுத்திக்கொள்ள முடியும்.
மேலும் பல வகையான Sounds Effect -ம் இங்கிருந்து Free-ஆகா Download செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும்.
யூடியூப் தரப்பிலிருந்து கொடுக்கப்படும் இந்த Free Music Library ஆப்ஷனும் முற்றிலும் இலவசமாக இருந்தாலும்,
ஒருசில மியூசிக் மற்றும் சவுண்ட் -க்கு நீங்கள் Credit கொடுக்க வேண்டியதாக இருக்கும்.
அதை மட்டும் கவனித்து உங்களுடைய வீடியோ பதிவில் அந்த குறிப்பிட்ட வகை மியூசிக்கை நீங்கள் பயன்படுத்தினால் உங்கள் வீடியோவின் Description-ல் அதற்கான Credit கொடுத்து விட்டால் போதுமானது.
அதாவது அந்த குறிப்பிட்ட வகை மியூசிக் இல் மட்டும் CC என்ற ஐகான் கொடுப்பதற்கு இருக்கும்.
அந்த Music-ல் சில உரிமங்கள் (Licence) கொடுக்கப்பட்டிருக்கும்.
அது மீயூசிக்கான உண்மை Link-ஆக இருக்கும் அல்லது அந்த மியூசிக்கை உருவாக்கிய நபரின் இணைய தளத்திற்கான லிங்க் ஆகவோ அல்லது அவர்களின் Music பற்றிய உரிமத்தின் பற்றிய விவரங்களாக இருக்கும்.
அதை அப்படியே காப்பி (Copy) செய்து கொண்டு வந்து மேலே குறிப்பிட்டுள்ளது போல உங்களின் வீடியோக்களின் description பாக்ஸில் அப்படியே பேஸ்ட் (Past) செய்து கொள்ள வேண்டும்.
இதை நீங்கள் எப்படி அடையாளம் கண்டு கொள்வது என்பதற்காக கீழே கொடுக்கப்பட்டிருக்கும் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த படத்தில் யூடியூப் ஐகான் இருக்கும் மியூசிக் மற்றும் சவுண்ட் Effects-ஐ நீங்கள் எந்தவித Credits-ம் கொடுக்காமல் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆனால் CC என கொடுக்கப் பட்டிருக்கும் Music பயன்படுத்த விரும்பினால், அதில் கொடுக்கப்படும் உரிமத்திற்கான விவரங்களை மேலே சொன்னது போல உங்கள் வீடியோவின் Description-ல் கொடுத்து விடுங்கள்.
அவ்வளவுதான் இது போல் செய்வதன் மூலம் யூடியூப் Free மியூசிக் Library -ல் கொடுக்கப்பட்டிருக்கும் எந்த வகையான மியூசிக்கை வேண்டும் என்றாலும் நீங்கள் எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம். அந்த வீடியோக்களுக்கு எந்தவித Music Copyright பிரச்சனையும் வராது.