How to Check Other YouTube Channels Earnings? In Tamil

KrishSel All in All

How to Check Other Youtubers Channel Earnings 

மற்றவர்களின் யூடியூப் சேனல் வருமானம் எவ்வளவு என்பதை எப்படி பார்த்து தெரிந்து கொள்வது?

How to check big youtubers Earnings
Other Youtubers Earnings Check

உங்கள் யூடியூப் சேனலில் வருமானம் சுலபமாக உங்களால் பார்த்துக் கொள்ள முடியும்.

ஆனால் உங்கள் நண்பர்கள் சேனல் அல்லது பெரிய யூடியூப் சேனலுக்கு எவ்வளவு வருமானம் வருகிறது என்பதை தெரிந்து கொள்ள பலர் ஆர்வமாக இருப்பார்கள்.

ஆனால் மற்ற சேனல்களில் வருமானத்தை சரியான முறையில் யாரும் வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள்.

எனவே மற்ற யூடியூப் சேனல்களில் அதுவும் பெரிய சேனல்களில் எவ்வளவு வருமானம் வருகிறது என சரியான அளவை தெரிந்து கொள்ள முடியாது.

ஆனால் இந்த ஒரு இணைய தளத்தை பயன்படுத்தி மற்ற சேனல்கள் மட்டும் இல்லாமல் உங்களுடைய யூட்யூப் சேனலுக்கும் எவ்வளவு வருமானம் வருகிறது என்பதை மிகவும் சுலபமாக பார்த்துக் கொள்ள முடியும்.

அந்த இணைய தளம் "Social Blade" என்ற தளம். இதை பெரும்பாலும் சில புதிய யூடியூப்பர்கள் தெரிந்து வைத்திருப்பார்கள்.

இந்த இணையதளத்தில் மிக எளிமையாக எந்த சேனலின் விவரங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமோ முக்கியமா வருமானம் தெரிந்து கொள்ள வேண்டிய சேனலின் பெயரை உள்ளிட்டு Search செய்தால் போதும், அந்த சேனல் வந்து விடும். 

Check other Channels earnings on Social Blade

[மேலே படத்தில் காட்டப்பட்டுள்ளது போல அனைத்து தகவல்களும் வந்து விடும்.]

பிறகு அந்த குறிப்பிட்ட சேனலை தேர்வு செய்தால் அந்த சேனலின் வருமானம் மட்டும் இல்லாமல் மொத்த விவரங்களும் வந்து விடும்.

இந்த இணையதளத்தை பயன்படுத்தி *மற்ற சேனல்களின் வருமானம் மட்டும் இல்லாமல் சேனலில் எவ்வளவு Views வந்து இருக்கிறது, 

*உங்கள் சேனல் Rank என்ன, 

*உங்கள் சேனல் எந்த Catogory -ஐ சார்ந்து இருக்கிறது,

*எவ்வளவு முன்னேற்றம் அடைந்து வருகிறது, 

*அடுத்து அடுத்து எந்த அளவிற்கு முன்னேற வாய்ப்புகள் இருக்கிறது என அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள முடியும். 

இதுபோல மேலும் பல முக்கியமான தகவல்களை இந்த இணையதளத்தை பயன்படுத்தி தெரிந்து கொள்ள முடியும்.

இவை அனைத்தும் "Subscribers, மற்றும் Views பொருத்து" ஒரு "கணிப்பின்" அடிப்படையில் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கும்.

இந்த தளத்தை மற்ற யூடியூப் சேனல்களின் வருமானத்தை மட்டும் பார்த்து தெரிந்து கொள்ள பயன்படுத்தாமல்.

உங்களின் சேனல் எந்த நிலையில் உள்ளது. எவ்வளவு வளர்ச்சி பெற்று வருகிறது என்பதை பற்றி தகவல்கள் தெரிந்து கொண்டு மேலும் உங்களின் சேனலை மேம்படுத்திக் கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


ஆனால் இதில் சில குறைகளும் இருக்கிறது. அதையும் நீங்கள் முக்கியமாக கவனித்துக் கொள்ள வேண்டும்.

1. இது போல மற்ற சேனலின் வருமானத்தை பார்க்க வேண்டும் என்றால், அதற்கு அந்த சேனலின் Subscribers -ஐ மறைத்து வைக்காமல் இருக்க வேண்டும்.

2. அடுத்த முக்கியமாக உள்ள ஒரு தவறான விஷயம் என்ன என்றால்?!

Monetization Enble ஆகாத சேனலுக்கும்  அந்த சேனலின் Subscribers, மற்றும் View's பொறுத்து (Earnings) குறிப்பிட்ட வருமானம் வருகிறது என்பது போல காட்டும்.

இது முற்றிலும் தவறான தகவல். Monetization Enble ஆகாத ஒரு யூடியூப் சேனலுக்கு பணமே வராது என்பதே உண்மை. இது அனைவரும் அறிந்ததே.

எனவே இதுபோல வருமானத்தை Check செய்து பார்பதற்கு முன்னாள், அந்த குறிப்பிட்ட சேனலுக்கு Monetization Enble ஆகிவிட்டதா என்பதை தெரிந்து கொண்டு பிறகு வந்து வருமானம் எவ்வளவு வருகிறது என சோதித்து பாருங்கள்.



Tags