How to Calculate YouTube Earnings in Tamil | How to Calculate your Income on YouTube
YouTube Earnings Calculate Basic
உங்கள் யூடியூப் சேனலின் வருமானத்தை எவ்வாறு கணக்கிட்டு தெரிந்து கொள்வது என்பதைப் பற்றி இந்த பதிவில் தெளிவாகப் பார்க்கலாம்.
![]() |
How Calulating YouTube Income |
பொதுவாக யூடியூப் சேனல் வைத்திருக்கும் அனைவருக்கும் அவர்களின் ஆரம்ப காலத்தில் வரக்கூடிய வருமானத்தை எவ்வாறு கணக்கிட்டு தருகிறார்கள் என்பதில் மிகுந்த குழப்பங்கள் இருக்கும்.
இன்னும் சொல்லப்போனால் சிலருக்கு நாம் சம்பாதிக்கும் பணம் முழுவதுமாக நமக்கு வருகிறது என்று நினைத்துக் கொண்டு இருப்பார்கள்.
உங்கள் யூடியூப் சேனல் பணம் எவ்வாறு கணக்கிட்டு கொடுக்கிறார்கள்.
எங்கு எங்கு பங்கு கொடுக்கப்படுகிறது 🤔🤔 அப்போ முழு பணம் நமக்கு கிடைக்காதா?
முழு தகவல்கள் இதோ:
அதாவது நமது சேனலில் உள்ள ஒவ்வொரு வீடியோவுக்கும் வரக்கூடிய பணம் முழுவதுமாக ஒவ்வொரு மாதமும் கொடுக்கப்படும்.
இப்படி கொடுக்கப்படும் பணம் நமது சேனலில் இருந்து வரக்கூடிய பணத்தின் ஒரு பங்கு சதவீதம் மட்டுமே.
யூடியூப் அவர்களுக்கான பங்கை எடுத்துக்கொண்டு பிறகுதான் நமக்கான பங்கை கொடுப்பார்கள்.
அது 55% நமக்கு என்றும் 45% யூடியூப் நிறுவனங்களுக்கு என்றும் ஒதுக்கப்பட்டிருக்கும்.
உதாரணமாக:
நாம் நமது யூடியூப் சேனல் மூலமாக சம்பாதித்த பணம் 100 ரூபாய் என்று வைத்துக் கொண்டால் அதில் 55 ரூபாய் நமக்கு என்றும் 45 ரூபாய் யூடியூப் நிறுவனத்திற்கு என்றும் பிரிக்கப்படும்.
இதே ஆயிரம் ரூபாய் என்று எடுத்துக்கொண்டால் அதில் 55 சதவீதம் என்ற அடிப்படையில் 550 ரூபாய் நமக்கு என்றும் 45% என்ற அடிப்படையில் 450 ரூபாய் யூடியூப் நிறுவனத்திற்கு என்றும் எடுத்துக் கொள்ளப்படும். (550+450=1000)
இப்போது உங்களுக்கு தெளிவாக புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
இதே போல தான் உங்களுடைய பணம் எந்த அளவு குறைவாக இருந்தாலும் அல்லது எந்த அளவு அதிகமான அளவில் இருந்தாலும் பங்கு சதவீதம் பிரிக்கப்படும்.
இவ்வாறு பிடிக்கப்பட்ட உங்களின் 55% பங்கு சதவீதம் மட்டுமே Adsense அக்கவுண்டில் மூலம் உங்களின் பேங்க் அக்கவுண்ட்-க்கு அனுப்பப்படும்.
Bank Transaction Fees: Calculate YouTube Earnings
அங்கும் உங்களுக்கு பணம் அனுப்பப் படுவதற்கான பரிவர்த்தனை கட்டணம் (உங்களின் வருமாத்தை தொகையை பொருத்து) எடுத்துக்கொண்டு பிறகுதான் உங்களின் வருமான பணம் உங்கள் அக்கவுண்டிற்கு அனுப்பப்படும்.
இந்த பரிவர்த்தனை கட்டணம் அவ்வளவு அதிகமான தொகையாக இருக்காது பத்தாயிரம் ரூபாய்க்கு அதிகபட்சமாக 100 லிருந்து 200 ரூபாய்க்கு உள்ளாக தான் இருக்கும்.
இது நீங்கள் பயன்படுத்திக் கொள்ளும் Bank பொறுத்து அமையும்.
இதற்கு மேலும் உங்களது பேங்கில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகை கொடுக்கப்படும்.
அது உங்களின் வருமான தொகை அதிகபட்சமாக இருக்கும் பொழுது நடக்கும்.
அதாவது உங்களின் யூடியூப் வருமானம் அதிகபட்சமாக இருக்கும் பொழுது எடுக்கப்படும் அந்த பணம் வருமான வரி ஆகும்.
YouTube Earnings Income Tax:
for Calculate and get final Earnings
யூடியூப் மூலமாக வருமான வரி கட்டும் அளவிற்கு அதிகமாக நீங்கள் சம்பாதிக்கிறீர்கள் என்றால் அப்போது யூட்யூப்பில் இருந்து அனுப்பப்படும் பணத்திற்கு வருமானவரி தொகையை வங்கிகள் எடுத்துக் கொண்ட பிறகுதான் மீதி பணம் உங்கள் கைக்கு வந்து சேரும்.
இதுதான் அடிப்படை செயல்முறைகள் இதன்பின் ஒவ்வொரு குறிப்பிட்ட வீடியோவிற்கு மான உங்கள் வருமானம் எப்படி கணக்கிடப்படுகிறது என்பதை பார்க்கலாம்.
இது தான் யூடியூப் சேனல் நடத்தும் பெரும்பாலான நபர்களுக்கு சரியான முறையில் புரியாமல் இருக்கும் அல்லது அவர்கள் தெரிந்து கொள்ளாமல் இருப்பார்கள்.
சிலருக்கு அதில் குழப்பங்கள் இருக்கலாம்.
எப்படி இவர்கள் இதைக் கணக்கிட்டு கொடுக்கிறார்கள் என்பதில்
அல்லது எப்படி ஒவ்வொருவருக்கும் வேறுபட்ட முறையில் பணம் வருகிறது என்ற வகையிலோ அல்லது
How much Earnings for Thousand Views?
ஆயிரம் views வந்துவிட்டாலே எனக்கு ஒரு டாலர் வந்துவிடும் அல்லது 2 dollers வந்து விடும் 5 டாலர்கள் வந்துவிடும் என சில யூடியூப் சேனலில் சொல்வதை வைத்துக்கொண்டு இவர்கள் கற்பனையில் கோட்டை கட்டி கொண்டு இருப்பார்கள்.
அது போல் ஏதும் இல்லை உங்களின் யூடியூப் சேனல் வீடியோக்களுக்கு கொடுக்கப்படும் பணம் ஆயிரம் வியூஸ் வந்தால் இவ்வளவு பணம் என்பது அடிப்படையில் தான் பணம் கொடுக்கிறார்கள்.
ஆனால் ஆயிரம் views வந்துவிட்டாலே இவ்வளவு பணம் வந்துவிடும் என்ற நிரந்தர மதிப்பு எதற்குமே நிர்ணயிக்கப்படவில்லை என்பதை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்.
உங்களின் சேனல் உள்ள ஒவ்வொரு வீடியோ விற்கும் தனிப்பட்ட முறையில் CMP என்ற ஒன்று மதிப்பீடு செய்யப்பட்டிருக்கும்.
What is CPM on YouTube?
CPM - Cost Per Mille (Thousand)
Cost - பணம்
Mille / Thousand - ஆயிரம்
அதாவது ஆயிரம் பார்வையாளர்களுக்கு எவ்வளவு பணம்.
இது நிரந்தரமாக இருக்காது ஒவ்வொருமுறையும் மாறிக்கொண்டிருக்கும்.
எனவே ஒவ்வொரு வீடியோவுக்கும் தனிப்பட்ட முறையில் இந்த CMP-ன் மதிப்பு எந்த அளவில் கொடுக்கப்பட்ட இருக்கிறதோ அதைப் பொறுத்து உங்களுக்கு வருமானம் வரும்.
What is RPM? For Youtube earnings Calulating?
தற்போது RPM என்ற புதிய update கொண்டு வரப்பட்டுள்ளது.
நாம் எந்த வகையிலும் போய் கணக்கீடு செய்து அதை ஆராய்ந்து பார்த்து தெரிந்து கொள்ள தேவையில்லை.
அவர்களே மதிப்பீடு செய்து RPM என்ற இடத்தில் உங்களுக்கான வருவாய் பண மதிப்பை கொடுத்திருப்பார்கள்.
அதை பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.
அல்லது - இல்லை இதில் கொடுக்கப் பட்டிருக்கும் வருமானத் தொகை சரியாக கணக்கிடப்பட்டு உள்ளதா? என தெரிந்து கொள்ள வேண்டும் என்றாலும்.
நீங்களும் தனியாகவும் கணக்கீடு செய்து தெரிந்து கொள்ளலாம் அதற்கான முறை என்ன என்பதையும் இந்த பதிவில் கண்டிப்பாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
அதாவது ஆயிரம் பார்வைக்கு எவ்வளவு டாலர் என்ற அடிப்படையில் ஒவ்வொரு வீடியோ விற்கும் தனிப்பட்ட முறையில் மதிப்பீடு செய்யப்பட்டு இருக்கும் அதை பொறுத்து தான் உங்களுக்கு பணம் வரும்.
இதுபோல ஒவ்வொரு வீடியோ விற்கும் மாறுபட்டு காணப்படுவதற்கான காரணம் அந்த வீடியோவில் Catogory இருக்கலாம்.
What is Ad Rates on YouTube Videos? For earning Calulating
விளம்பரதாரர்கள் தான் விளம்பரங்களை தங்களது யூடியூப் சேனலின் வீடியோக்களில் காட்டுவதற்காக பணங்களை தருகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
எனவே விளம்பரதாரர்கள்
அவர்களின் விளம்பர மதிப்பீட்டு செய்து, (அதாவது எவ்வளவு பணம் - Ad Rate, எந்த வகையான கேட்டகிரி - Video Catogory) யூடியூப் நிறுவனத்திற்கு கொடுக்கிறார்கள்.
எனவே விளம்பரதாரர்கள் தங்களின் விருப்பத்திற்கு எந்த வகையான கேட்டகிரியில் உள்ள வீடியோக்களுக்கு தனது நிறுவனத்தின் விளம்பரங்களை கொடுக்க வேண்டும் என சில நிபந்தனைகளை கொடுத்திருப்பார்கள்.
How to Showing ads on YouTube Videos?
அதை பொறுத்தே யூடியூப் நிறுவனம் அதற்கேற்ப வீடியோக்களை தேர்வு செய்து விளம்பரங்கள் காண்பிக்கப்படுகிறது.
இது மட்டுமில்லாமல் பார்வையாளர்களின் ஆர்வத்தைப் பொறுத்தும் விளம்பரங்கள் காட்டப்படும்.
எனவே ஒவ்வொரு விளம்பரத்திற்கும் தனித்தனி ad Fix செய்யப் பட்டிருக்கும்.
இதைப் பொறுத்து தான் உங்கள் வீடியோக்களில் அதிகமான Ad Rate Fix செய்யப்பட்ட விளம்பரங்கள் காட்டப்பட்டால் அதிகமான வருமானமும்,
குறைவான Ad Rate Fix
செய்யப்பட்ட விளம்பரங்கள் காண்பிக்கப்பட்டால் குறைவான வருமானம் வருகிறது.
How to fix Ad Rates?
இந்த Ad Rate எவ்வாறு மதிப்பீடு செய்யப்பட்டிருக்கும் என்றால்,
மேலே குறிப்பிட்டுள்ளது போல் ஆயிரம் பார்வையாளர்களுக்கு இவ்வளவு மதிப்பு அதாவது இவ்வளவு பணம் என மதிப்பீடு செய்யப்பட்டிருக்கும்.
இது போல் காட்டப்படும் விளம்பர வடிவமைப்பிலும் பல வகைகள் இருக்கிறது.
அவை:
YouTube Ad Formating Types
1. Display Ads
2. Pop-up Ads
3. Overlay Ads
4. Sponsored cards
5. Bumper Ads
6. Skippable Ads
7. Non Skippable Ads
(மேலே குறிப்பிட்டுள்ள வகைகளில் சிலரது பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கலாம் அல்லது தற்போது நீக்கப் பட்டு இருக்கலாம்)
இந்த வகைகளில் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியான வகையில் விளம்பர மதிப்பு (Ad Rates) இருக்கிறது.
எனவே உங்களின் வீடியோக்களில் எந்த வகையான விளம்பரங்கள் ( Ad Formats) கட்டப்பட்டது என்பதை பொருத்தும் வருமானம் அதிகரிக்கலாம் அல்லது குறையலாம்.
இப்போது உங்கள் யூடியூப் சேனலில் உள்ள ஒரு குறிப்பிட்ட வீடியோவிற்கான பண மதிப்பை அதாவது வருமானத்தை எப்படி கணக்கிடு செய்வது என்பதை பார்க்கலாம்.
How to Calculate your Channel Earnings?
அதற்கு முதலில் நீங்கள் கவனிக்க வேண்டியது உங்கள் சேனலில் அந்த குறிப்பிட்ட வீடியோவிற்கு எவ்வளவு
CPM மதிப்பு கொடுக்கப் பட்டிருக்கிறது என்பதைத்தான்.
அடுத்து அந்த வீடியோவிற்கு எவ்வளவு பார்வையாளர்கள் வந்துள்ளார்கள் என்பதை குறித்துக் கொள்ளுங்கள்.
இப்போது நீங்கள் கணக்கிட ஆரம்பிக்கலாம்.
அதற்கான சூத்திரம் என்னவென்றால்,
Earnings Calulating Farmula/method
[ விளம்பரங்களின் மதிப்பீடு ×
உங்களில் பார்வையாளர்கள் ÷ ஆயிரம் ]
Ad Rate × Views ÷ 1000
உதாரணமாக:
உங்கள் ஒரு குறிப்பிட்ட வீடியோவின் Views 5000 என வைத்துக் கொள்வோம். அதற்கு Ad Rate 1.5 doller என வைத்துக் கொள்வோம்.
இப்போது கணக்கிடலாம்,
[Ad rate × views ÷ 1000]
1.5 × 5000÷1000 = 7.5 doller
இது போல தான் உங்களுடைய யூடியூப் சேனல் வீடியோக்களுக்கு வருமானம் கணக்கிடப்பட்டு உங்களுக்கு கொடுக்கப் படுகிறது.
How much youtube pay per 1000 views depending YouTube Channel Catagory?
யூடியூப் எந்த, எந்த Catagory ஐ சார்ந்த யூடியூப் சேனல்களுக்கு 1000 Views க்கு எவ்வளவு பணம் கொடுக்கிறது
👉👉👉👉 How much income