YouTube Very General Two Content Videos - பொதுவான 2 பதிவு முறைகள்
யூடியூபில் மிகவும் பொதுவான இரண்டு வகையான வீடியோ பதிவேற்றங்கள் (Content) இருக்கின்றன.
இதன் பொருட்டு உங்கள் சேனலின் ஒரு பதிவை போட்ட உடன் அதிகமான பார்வையாளர்களை பெறுவதும் அல்லது குறைவான பார்வையாளர்களை பெறுவதும் அமையும்.
![]() |
YouTube Generel 2 Types Content |
யூடியூபில் சேனல் வைத்திருக்கும் அனைவரும் கண்டிப்பாக இதை தெரிந்து கொள்வது, உங்கள் சேனல் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
எது மாதிரியான / எது சம்பந்தப்பட்ட வீடியோக்கள் போடலாம் என்று ஒரு யோசனை பெற முடியும்.
அதாவது எது மாதிரியான Content போட வேண்டும் என்பதை நீங்களே முடிவு எடுத்துக் கொள்ள இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சில வீடியோக்கள் போட்ட உடனே அதிகமான views-ஐ பெற்றுவிடும்.
சில வீடியோக்கள் போட்டோவுடன் ஒரு சில views மட்டும் வரும் அதன் பின் அப்படியே கிணற்றில் போட்ட கல்லாக இருக்கும்.
இதற்கு காரணம் இந்த இரண்டு வகை கண்டெண்ட் முறையே ஆகும்.
அவை:
*Trending Content
*Every Green Content
இதில் இந்த ட்ரெண்டிங் Content எனப்படுவது,
இன்றைய சூழலில் மக்கள் எதை அதிகமாக தேடுகின்றனர் என்பதை அறிந்து அதை பற்றி பதிவை போடுவது.
அவை:
*எது இப்போது ஒரு பிரச்சினையாகவோ அல்லது மக்களுக்கு இப்போது சூழலில் தேவைப்படும் விஷயமாகவோ நமது சமூகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அதை முன்வைத்து ஒரு பதிவை நாம் போடும் பொழுது அது கண்டிப்பாக அதிகமான மக்களால் தேடப்பட்டு அதிகமான views- ஐ பெறும்.
மற்றும் இதேபோல *விழாக்காலங்களில் அது தொடர்பான பதிவை போடுவதன் மூலமும் கண்டிப்பாக அதிகமான பார்வையாளர்களை பெற முடியும்.
உதாரணமாக:
தீபாவளி பொங்கல் புத்தாண்டு போன்ற முக்கியமான விழாக்களை முன்வைத்து பதிவை போடுவதன் மூலம் கண்டிப்பாக அதிக மக்களால் அது தேடப்பட்டு அதிக views- ஐ பெற முடியும்.
இவ்வாறு விழாக்காலங்களில் போடப்படும் வீடியோ பதிவு அல்லது இணையதள கட்டுரை பதிவு மற்றும்
சாதாரணமான ஒரு வாழ்த்து பதிவாக இருந்தாலும் அது அதிகபட்சமாக whatsapp, instagram, மற்றும் இது போன்ற மற்ற நிறைய App-க்கள் மூலமாகவும் மக்களால் தேடப்பட்டு அதிகபட்சமாக ஷேர் செய்யப்படும்.
எனவே கண்டிப்பாக அதிக அளவில் views-ஐ பெற முடியும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
ஆனால் போட்ட உடனே 10, 20 என்றோ அல்லது 100, 200 என்ற அளவில் ஒரு சில views மட்டும் வரும் இது போன்ற கண்டன்ட் இருக்கிறது.
இது அப்போதைக்கு views வரவில்லை என்றாலும் கண்டிப்பாக வரும் காலங்களில் மக்களால் அதிகம் தேடப்பட்டு அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும்.
ஆனால் அதற்கு நீங்கள் எவர்கிரீன் (Every green) Content என்ற வகையில் அந்த வீடியோ பதிவு இருக்கும் படி பதிவிட்டு இருக்க வேண்டும்.
இந்த எவர்கிரீன் Content என்னவென்றால் ஒருசமயங்களில் மட்டுமே views-ஐ பெற்று தாராமல் எப்போதுமே views பெற்று தரும் Content தான் Every green Content என்று குறிப்பிடுவார்கள்.
இந்த எவர்கிரீன் Content மக்களுக்கு இப்போது தேவையானதாக இல்லாமல் இருக்கலாம்.
அதாவது மேலே குறிப்பிட்டுள்ளது போல் Trending Topics / Content -ஆகா இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் வரும் காலங்களில் மக்களால் அடுத்து அடுத்து தேடப்படும் பதிவாக இருக்க வேண்டும்.
அதாவது மக்களின் அன்றாட வாழ்வில் தேவைப்படும் பதிவாக இருக்கும் பட்சத்தில் இப்போது தேவை இல்லை என்றாலும்,
வாழ்நாளில் திரும்ப எப்ப வேண்டுமானாலும் இந்த ஒரு விஷயம் தேவைப்படலாம், அப்போது தேடுவார்கள் - என்ற வகையில் உங்களுடைய பதிவை உருவாக்கி கொண்டால்.
நிச்சயமாக வாழ்வில் ஒரு முறையாவது ஒருவர் இந்த பதிவை பற்றி தேடி வர வேண்டும் என்ற வகையில் இருக்கும் பொழுது,
உங்களுடைய பதிவு ( Every Time ) அதிகப்படியான views- ஐ பெற்றுக் கொள்ள முடியும்.
அதாவது வீடியோ பதிவு செய்து ஆறு மாதம் கழித்து அல்லது ஒரு வருடம் கழித்து, இரண்டு வருடம் கழித்தும் கூட அதிகப்படியான பார்வையாளர்களை ( views- ஐ ) அந்த குறிப்பிட்ட பதிவு பெற்றுக் கொடுக்கும்.
ஆனால் ஒருசில பதிவு ட்ரெண்டிங் Content இல்லாமலும், இதுபோன்ற எவர்கிரீன் Content-ஆகவும் இல்லாமல் சிலர் தேவையற்ற பதிவை போடுவார்கள். அதற்கு views வரவில்லை என்று புலம்புவார்கள்.
அதுபோன்ற பதிவிற்கு ஏதும் தீர்வு கிடையாது views-ம் வருவதற்கான எந்த ஒரு வாய்ப்பும் இருக்காது.
உதாரணமாக:
Trending Topics ல் போட்ட ஒரு வீடியோ உடனே 1000 views போகிறது என்றால்
Every Green Topics ல் போட்ட வீடியோவிற்கு 100 views என்ற அளவில் மட்டுமே views வந்து இருக்கும்.
ஆனால் Trending Topics க்கு திரும்ப views வருமா என்றால் சந்தேகம்தான்.
ஆனால் Every green Content வீடியோவிற்கு அதற்கு பிறகும் 100 வியூஸ் என்பது ஆயிரம் ஆகலாம் ஆயிரம் என்பது பத்தாயிரம், லட்சம் என்ற கணக்கில் கூட views வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
எனவே புதிதாக யூடியூப் சேனல் தொடங்கி வீடியோவை போட இருக்கும் நண்பர்கள் இந்த இரண்டு வகையில் உங்களுடைய பதிவை தெரிவு செய்துகொண்டு பதிவிட்டால் உடனே நியூஸ் பெறுவதற்கான வாய்ப்பும்,
வீடியோ பதிவிட்ட பிறகு வரும் காலங்களில் அதிகமான views-ஐ பெற்றுக் கொள்ளவும் சரியான முறையில் பதிவை தேர்வு செய்து போடுவதற்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.