YouTube Not Monetization Eligiblelity Content Types
YouTube Monetization Eligiblelity - புதிய யூடியூபர்கள் செய்யக்கூடாது முக்கியமான தவறுகள்.
![]() |
Monetization Not Eligiblelity Contents |
யூடியூபில் வீடியோ போடும் போது இந்த தவறுகளை செய்து விடாதீர்கள்.
உங்களின் சேனலுக்கு Monetization கிடைக்காமல் போகும்.
யூடியூபில் வீடியோ போடும் பொழுது முக்கியமாக நீங்கள் இவற்றை எல்லாம் கவனிக்க வேண்டும்.
*Copyright Content
பொதுவாக யூடிபில் நாம் போடக்கூடிய வீடியோக்கள் நமது சொந்த வீடியோவாக இருக்க வேண்டும். அடுத்தவர்களின் பதிவை திருடி அதாவது copy (download) செய்து போடக்கூடாது.
இவ்வாறு நீங்கள் அடுத்தவர்களின் வீடியோவை பதிவிறக்கம் செய்து உங்கள் சேனலில் போட்டுக்கொண்டால் அந்த குறிப்பிட்ட வீடியோவிற்கு யூடியூப் தரப்பிலிருந்து copyright strike கொடுக்கப்படும்.
ஒரு குறிப்பிட்ட வீடியோவின் மூலம் ஸ்ட்ரைக் வந்தாலும் அது சேனலுக்கான Strike-ஆக தான் கொடுக்கப்படும்.
இது பொதுவாக யூட்யூபில் சேனல் வைத்திருக்கும் அனைவரும் தெரிந்திருக்கும் அடிப்படை தகவல் அப்படி தெரியவில்லை என்றால், அனைத்து யூடியூப் சட்டதிட்டங்களையும் தெரிந்துகொள்ளுங்கள்.
யூடியூப்பில் ஸ்டிரைக்கில் இரண்டு விதம் இருக்கிறது.
ஒன்று 1.Copyright Strike மற்றும் 2.Commnutiy Guideline Strike.
*காப்பிரைட் ஸ்ட்ரைக் என்பது மற்ற வீடியோ உரிமையாளர்களிடம் இருந்து உங்களுக்கு கொடுக்கப்படும் ஸ்ட்ரைக்.
*Commnutiy ஸ்ட்ரைக் என்பது யூடியூப் தரப்பிலிருந்து கொடுக்கப்படும் ஸ்ட்ரைக்.
இது பொதுவாக யூடியூபில் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு வீடியோ போடவில்லை எனில் கொடுக்கப்படும் ஸ்ட்ரைக் ஆகும்.
எனவே யூட்யூபில் சேனல் தொடங்கி வீடியோ பதிவிட ஆரம்பித்திருக்கும் புதிய Creators அனைவரும் கண்டிப்பாக இந்த அடிப்படை சட்டத்தை தெரிந்து கொண்டு பிறகு வீடியோ உருவாக்க ஆரம்பியுங்கள், பின் upload செய்யுங்கள்.
மேலே குறிப்பிட்டுள்ள அடிப்படை சட்டங்கள் கண்டிப்பாக அனைவரும் தெரிந்திருக்க வேண்டிய ஒன்று. அதிகபட்சமாக அனைவரும் தெரிந்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
ஆனால் இப்போது சமீபகாலமாக இதைத் தவிர்த்து இன்னும் இரண்டு பிரச்சனைகள் புதிதாக யூடியூப் சேனல் நடத்தும் நண்பர்கள் அதிகபட்சமாக சந்திக்கின்றனர்.
அவை என்னவென்றால்;
1. Reused Content
2. Repeated Content
Reuse கண்டெண்ட் என்றால் ஏற்கனவே வேற ஒரு சேனலில் போட்டு இருக்கக்கூடிய வீடியோவின் மூல கருத்தை மட்டும் எடுத்துக்கொண்டு அதை வைத்துக் கொண்டு அவர்கள் எப்படி வீடியோ செய்து இருக்கிறார்களோ அதே போல தானும் செய்து வீடியோ பதிவிடுவது.
இது உழைப்பே இல்லாமல் முழுவதுமாக அப்படியே திருடி போடாமல்,
அவர்களின் வீடியோவை பார்த்துவிட்டு முழுவதுமாக அவர்கள் என்ன செய்கிறார்களோ அதே போல் தானும் ஒரு வீடியோவை உருவாக்கி தனது சேனலில் போடுவது.
எனவே தான் இது Copyright Content-ல் வராமல் Reused Content-ல் வருகிறது.
Repeated Content என்பது உங்களின் சேனலிலே ஏற்கனவே போட்ட வீடியோ போலவே திரும்பத் திரும்ப போடுவது Reptead Content ஆகும்.
இதுபோல Reused கண்டன் மற்றும் Repeated கண்டெண்ட் வீடியோ போட்டாலும் உங்கள் சேனலுக்கு Monetization கிடைக்காதது, ஏற்கனவே கிடைத்தது இருந்தாலும் உடனே நிறுத்தப்படும்.