YouTube பணம் Adsense Account-க்கு எப்போது வரும்?
உங்கள் யூடியூப் சேனலில் நீங்கள் சம்பாதித்த பணம் எப்போது Adsense Account-க்கு வரும் என்பதில் புதிய யூடியூபர்கள் அனைவருக்கும் பெரிய குழப்பம் இருக்கும்.
இதில் நிறைய பேர் அவர்களின் சேனலில் பணம் வந்த உடனே Adsense Account-லும் பணம் வந்து விடும் என நினைத்துக் கொள்கின்றனர்.
எனவே, உடனே அட்சென்ஸ் Account -ற்கும் சென்று பணம் வந்து விட்டதா என Check செய்கின்றனர்.
பிறகு அங்கு பணம் வராமல் இருப்பதை கண்டு மிகவும் பயந்து விடுகின்றனர்.
எனவே, இதுபோல் இருக்கும் புதிய யூடியூப்பர்கள் அனைவருக்கும் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
யூடியூபில் நீங்கள் சம்பாதிக்கும் பணம் மாதம் முழுவதும் சேர்க்பட்டு அடுத்த மாதம் தான் உங்கள் Adsense Account க்கு அனுப்பி வைக்கப்படும்.
ஒவ்வொரு மாதமும் யூடியூபில் நீங்கள் சம்பாதிக்கும் பணம் அடுத்த மாதம் 10ம் தேதியில் இருந்து 13ம் தேதிக்குள் உங்கள் அட்சென்ஸ் அக்கவுண்ட்ற்கு அனுப்பப்படும்.
இதில் சில நபர்கள் 10ம் தேதியில் உடனே சென்று check செய்து பார்த்துவிட்டு இன்னும் பணம் வரவில்லை என்பார்கள்.
இங்கு நீங்கள் சரியான முறையில் புரிந்து கொள்ளுங்கள்.
10-13ம் தேதி என்றால் இந்த நாட்களில் பணம் வரும் என்பது தான்.
அதாவது 10, 11, 12, 13 இதில் எந்த நாளில் வேண்டும் என்றாலும் பணம் Update ஆகும்.
அதிகபட்சமாக 11 அல்லது 12ம் தேதியில் பணம் வந்துவிடும்.
மேலும் இதை பற்றிய முழு விவரங்கள் வீடியோ வடிவில் தெரிந்து கொள்ள கீழே உள்ள நமது சேனல் வீடியோவை பார்த்துக் கொள்ளுங்கள்.
👇👇👇👇