Google Adsense id Verification எப்படி சரியான முறையில் கொடுப்பது?

KrishSel All in All

How to correctly verification Your ID Proof on Google Adsense Account?

Google Adsense id Verification எப்படி சரியான முறையில் கொடுப்பது:

பொதுவாக யூடியூபில் Channel வைத்திருக்கும் அனைவரும் Adsense Account  மூலம்தான் தனது பணத்தை எடுத்துக்கொள்ள முடியும்.

இது அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

இதுபோல் பணம் எடுப்பதற்கு முன்னாடி உங்களுடைய Adsense ஆக்கவுண்டை நீங்கள் வெரிஃபிகேஷன் செய்து கொள்ள வேண்டும்.

Adsense account பொதுவாக ID வெரிஃபிகேஷன், Address வெரிஃபிகேஷன், மற்றும் payment details கொடுத்து முடித்த பிறகுதான் உங்களால் பணம் எடுத்துக் கொள்ள முடியும்.

இதனடிப்படையில் நீங்கள் முதலில் செய்யவேண்டியது ஐடி வெரிஃபிகேஷன் செய்ய வேண்டும்.

உங்கள் ஆட்சென்ஸ் அக்கவுண்டில் பத்து டாலர் வந்த பிறகு இந்த ஆய்வு செய்யுமாறு கேட்கப்படும்.

Google Adsense id Verification


இதுபோல் நீங்கள் ஐடி வெரிஃபிகேஷன் செய்துகொள்ள யூடியூப் தரப்பிலிருந்து 3 அல்லது சில சமயங்களில் மட்டும் நான்கு முறை வாய்ப்புகள் அளிக்கப்படும்.

இந்த கொடுக்கப்பட்ட வாய்ப்பை தவற விட்டு நீங்கள் மூன்று முறை அல்லது நான்கு முறையும் தவறான முறையில் ஐடி வெரிஃபிகேஷன் செய்துவிட்டால், அதாவது உங்களால் ஐடி வெரிஃபிகேஷன் செய்ய முடியவில்லை என்றால், திரும்ப மீண்டும் உங்கள் ஐடி வெரிஃபிகேஷன் செய்ய முயற்சிக்க முடியாது. இதற்கான ஆப்ஷன் அங்கிருந்து நீக்கப்படும்.

நீங்கள் மேலும் வெரிஃபிகேஷன் செய்ய வேண்டுமென்றால், நாம் யூடியூப் இடம் ஈமெயில் செய்து  யூடியூப் Support-ல்  தொடர்பு கொண்டு பேசிய பெற முடியும். அது மிகவும் கொஞ்சம் கடினமாகவே இருக்கும்.

எனவே கொடுத்திருக்கும் வாய்ப்பை பயன்படுத்தி சரியான முறையில் உங்கள்  id verification செய்து கொள்ள வேண்டும்.

இது மிகவும் சுலபமான விஷயம் தான் அதில் ஒரு சில நேரங்களில் மட்டும் நமது சரியான ஐடி ப்ரூப் இல்லாத சமயங்களில் சற்று குழப்பம் ஏற்படலாம்.

கீழே நான் சொல்லக்கூடிய விஷயங்களை சரியாக நீங்கள் கடைபிடித்தால் கண்டிப்பாக முதல் முறை Apply செய்யும்போதே உங்களால் கண்டிப்பாக வெற்றிகரமாக verification செய்து கொள்ள முடியும்.

ஐடி வெரிபிகேஷன் செய்யும் பொழுது நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்:

உங்களின் ஐடி ப்ரூப் அதாவது நீங்கள் கூகுள் ஆட்சென்ஸ் Account  வெரிஃபிகேஷன் செய்வதற்கு எடுத்து வைத்திருக்கும் ஐடி ப்ரூப் கண்டிப்பாக கிளியரா இருக்க வேண்டும். 

*போட்டோ கிளியரா இருக்கும், *எழுத்துக்கள் தெளிவாக இருக்க வேண்டும்.

மிகவும் முக்கியமான விஷயம் நீங்கள் Adsense அக்கவுண்டில் கொடுக்கப்படும் பெயரும் id verification-க்கு கொடுக்கப்படும் id proof-ல் இருக்கும் பெயரும் ஒன்றாக இருக்க வேண்டும். இதில் எந்த ஒரு மாற்றமும் இருக்கக்கூடாது.

உதாரணமாக:

*உங்கள் ஐடி-ல்  இருக்கும் பெயர் இரண்டாக கொடுத்து இருந்தீர்கள் என்றால் - இரண்டாக கொடுங்கள். *பெரிய எழுத்துக்களில் கொடுத்திருந்தால் - பெரிய எழுத்துக்களில் கொடுங்கள்.

* சிறிய எழுத்துக்கள் இருந்தால் - சிறிய எழுத்துக்களில் கொடுங்கள்

 *இன்சியல் இருந்தால் - இன்சியல் கொடுங்கள்.

இது போல உங்களது ஐடி ப்ரூப்-ல் இருப்பது போலவே பெயரை அப்படியே உங்களது அக்கௌண்டில் கொடுத்துக் கொள்ள வேண்டும். இதை நீங்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம்.

அடுத்தது உங்களது ஐடி ப்ரூப் எப்படி போட்டோ எடுக்க வேண்டும் :

முன்பு எல்லாம் ஐடி proof qulatiy-ஆகா இருக்க வேண்டும் என்றால் online-ல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள், அதை தான் கொடுக்க வேண்டும்.

அப்போதுதான் Success ஆகும் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். இப்போது அது மாதிரி எதுவும் தேவையில்லை.

முக்கியமாக என்னுடைய அனுபவத்தின் படி நீங்கள் உங்களுடைய ஐடி proof-ஐ தயவுசெய்து டவுன்லோட் செய்து அதை கொடுக்காதீர்கள்.

உங்களின் தொலைபேசி மூலமாகவே நீங்களே அதை கையில் பிடித்து கொண்டோ அல்லது கீழே தரையில் வைத்தோ ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள்.

அந்த போட்டோ மேலே குறிப்பிட்டுள்ளது போல் கிளியர் ஆக இருக்க வேண்டும். id-ல் உள்ள போட்டோ கிளியராக இருக்க வேண்டும், ஐடி-ல் இருக்கும் எழுத்துக்கள் கிளியராக தெரிய வேண்டும்.

இதுபோல் Clear-ஆகா இருக்கும் வகையில் அந்த போட்டோவை எடுத்துக் கொள்ளுங்கள்.

மேலும் போட்டோ எடுக்கும் போது முக்கியமாக நீங்க கவனிக்க வேண்டிய விஷயம் உங்கள் ஐடி ப்ரூப் இன் 4 கார்னர் பகுதியும் தெரியும்படி எடுக்க வேண்டும்.

மேலும் இதை நீங்கள் Submit செய்யும் பொழுதும் Crop செய்கிறேன் என்ற பெயரில் அந்த நான்கு முனைப் பகுதியும் cut செய்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் ஒரு முக்கியமான என்னுடைய அனுபவத்திலிருந்து சொல்லக்கூடிய டிப்ஸ் என்னவென்றால் உங்கள் ஆட்சென்ஸ் அக்கவுண்டிற்கு கொடுக்கப்படும் ஐடி ப்ரூப் முன்பகுதி மட்டும் போட்டோ எடுத்து அனுப்புங்கள் போதுமானது பின்பகுதியை அனுப்ப வேண்டாம்.

பின்பகுதியில் அனுப்பினால் கிடைக்காது என்பதை இல்லை. பின்பகுதி அனுப்பினால் சில பிரச்சினைகள் வரக்கூடும். என்னவென்றால் பின்பகுதியில் உங்களுடைய அட்ரஸ் அதாவது முகவரி கண்டிப்பாக இருக்கும். 

நீங்கள் கொடுத்திருக்கும் முகவரியும் உங்கள் ஐடியில் இருக்கும் முகவரியும் மாறுபட்டு காணப்பட்டால் சில சமயங்களில் அதன் காரணமாகவும் உங்களது ஐடி reject ஆகலாம்.

எனவே தான் என்னுடைய யூடியூப் சேனல் பார்வையாளர்கள் அனைவருக்கும் நான் கொடுக்கும் முக்கியமான தகவல் அல்லது டிப்ஸ் என்றால் இதுதான் முன்பகுதியை மட்டும் போட்டோ எடுத்து கொடுங்கள் என்பது மட்டுமே.

மேலே நான் குறிப்பிட்டுள்ள இந்த முறைகளில் நீங்கள் கடைபிடித்து ஐடி வெரிஃபிகேஷன் க்கு அப்ளை செய்தால் கண்டிப்பாக உங்களுக்கு id வெரிஃபிகேஷன் success ஆகும்.

ஒருவேளை உங்களுக்கு,  நீங்கள் id வெரிஃபிகேஷன் செய்யும்பொழுது பிழை இருக்கிறது என்று ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்து விட்டார்கள் என்றால்.

திரும்பத் திரும்ப வேறு முறைகளிலும், குறிப்பாக வேற வேற ஐடியை கொண்டும் அப்ளை செய்யாதீர்கள்.

அதற்கு சரியான ஒரு ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டு அதன் பின் திரும்ப அப்ளை செய்ய முயற்சி செய்யுங்கள்.

யூடியூப் மூலமாகவோ அல்லது நண்பர்கள் மூலமாகவோ சரியான ஆலோசனைகளை பெற்றுக் கொண்டு நீங்கள் என்ன தவறை செய்திருக்கிறார்கள். என்ன காரணத்திற்காக யூட்யூப் நிராகரித்து இருக்கிறது என்பதை உற்று நோக்கி அதை சரி செய்து பிறகு Apply செய்ய முயற்சி செய்யுங்கள்.

ஏனென்றால் மூன்று முறை மட்டுமே உங்களுக்கு வெரிஃபிகேஷன் செய்து கொள்ள வாய்ப்புகள் வழங்கப்படும் சில சமயங்களில் அது நான்கு முறையாக இருக்கும். 

இந்த நான்கு மூறைகளையும் நீங்கள் தவறாக பயன்படுத்திக் கொண்டால் திரும்ப நீங்கள் Apply செய்ய முடியாது. மேலே குறிப்பிட்டுள்ள போல வாய்ப்புகள் வழங்கப்படாது.

சில நேரங்களில் உங்கள் ஆட்சென்ஸ் அக்கவுண்டில் நீங்கள் கொடுத்திருக்கும் பெயரும், id proof -ல் இருக்கும் பெயரும்  ஒன்றாக போல சரியான முறையில் கொடுப்பதில் குழப்பம் ஏற்படலாம்.

அது உங்களின் ஐடி ப்ரூப் இல் இருக்கும் பெயர் இப்பொழுது சற்று மாறுபட்டு காணப்படும் சில பேர் அவர்களின் ஐடி ப்ரூப் அப்பாவின் பெயர் அல்லது கணவரின் பெயரை இணைத்து கொடுத்து இருப்பார்கள்.

அது போல் கொடுத்திருக்கும் போது சற்று அதில் குழப்பம் ஏற்படும் இது போல் குழப்பத்தில் இருந்தால் என்னுடைய யூடியூப் சேனல் நீங்கள் தொடர்பு கொண்டு சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளலாம். 

👉👉👉Krish Tech Tamil

எதுபோல் பெயர் இருக்கிறது, நாம் எதுபோல் கொடுக்க வேண்டும் என்பதை நீங்கள் கேட்டு தெளிவுபடுத்திக் கொண்டு பிறகு நீங்கள் கொடுத்துக் கொள்ளலாம்.

இதை தெளிவு படுத்தாமல் அப்ளை செய்து மூன்று வாய்ப்பையும் இழக்க வேண்டாம்.

 

Tags