கூகுள் ஆட்சென்ஸ் அக்கவுண்ட் என்றால் என்ன?
கூகுள் ஆட்சென்ஸ் அக்கவுண்ட் என்பது Google சம்பந்தப்பட்ட அனைத்து தளங்களில் இருந்தும் நீங்கள் ஆன்லைன் மூலம் சம்பாதிக்கும் பணத்தை ஆட்சென்ஸ் அக்கவுண்டில் மூலமாகத்தான் எடுத்துக்கொள்ள கொள்ள முடியும்.
குறிப்பாக யூடியூப் மற்றும் வெப்சைட் பிளாக்கர் போன்ற இணையதளங்களை உருவாக்கி அதன் மூலம் பணம் சம்பாதித்துக் கொள்ள வேண்டு என்றால் முதலில் Adsense அக்கவுண்டில் உங்களுடைய யூடியூப் சேனலை அல்லது இணையதளத்தை இணைத்துக் கொள்ள வேண்டும்.
கூகுள் ஆட்சென்ஸ் அக்கௌன்ட் என்பது ஒருவருக்கு அதாவது ஒரு தனிப்பட்ட நபருக்கு வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே கணக்கை உருவாக்கி கொள்ள முடியும்.
ஒன்றுக்கு மேற்பட்ட கணக்கை உருவாக்கினால் உங்களுடைய ஆட்சென்ஸ் கணக்கு முடக்கப்படும். அல்லது அதில் இணைக்கப்பட்டுள்ள உங்களின் யூடியூப் சேனல் அல்லது இணையதளமும் சேர்த்து முடக்கப்படும்.
இவ்வாறு சரியான முறையில் உங்களுக்கு என்ற தனிப்பட்ட கூகுள் ஆட்சென்ஸ் கணக்கை உருவாக்கிய பிறகு அதில் உங்களுடைய இணையத்தளம் / யூடியூப் சேனலை உங்களால் இணைத்துக்கொள்ள முடியும்.
Adsense Account -ல் அனுமதி பெற்ற பிறகுதான் உங்களுடைய இணையதளம் / யூடியூப் சேனலில் விளம்பரங்கள் காட்டப்படும்.
அப்படி விளம்பரங்கள் காட்டுவதன் மூலமே உங்களால் பணம் சம்பாதித்துக் கொள்ள முடியும்.
கூகுள் ஆட்சென்ஸ் அக்கவுண்டில் உங்களுடையது இணையதளத்தையும் யூடியூப் சேனலில் Add செய்து அனுமதி பெற்ற பிறகு நீங்கள் பணம் சம்பாதிக்க தொடங்குவீர்கள்.
பிறகு உங்களின் Adsense Account-ல் 10$ வந்த பிறகு ஐடி வெரிஃபிகேஷன் (id verification) செய்ய வேண்டும்.
அதற்கு சரியான அடையாள அட்டையை வைத்து நீங்கள் வெரிஃபிகேஷன்(verification) செய்துகொள்ளவேண்டும்.
பிறகு நீங்கள் வெரிஃபிகேஷன் (verification) செய்த முகவரிக்கு Address வெரிஃபிகேஷன் -க்காக ஒரு லெட்டர் அனுப்பிவைக்கப்படும்.
அதில் குறிப்பிட்டுள்ள எண்ணை நீங்கள் திரும்ப Adsense அக்கவுண்டில் கொடுத்து Address வெரிஃபிகேஷன் செய்துகொண்ட பிறகே உங்களின் Adsense Account வெரிஃபிகேஷன் முடியும்.
[ இந்த ஆட்சென்ஸ் ஆக்கவுண்ட் வெரிஃபிகேஷன் செய்யும் முறைகள் ஒவ்வொரு நாட்டின் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப சற்று மாறுபட்டு காணப்படும். ]
அதன் பிறகுதான் உங்களின் வங்கி கணக்கை கூகிள் ஆட்சென்ஸ் அக்கவுன்டுடன் இணைத்து கொள்ள முடியும்.
[உங்களின் வங்கிக் கணக்கை இணைக்க, அதற்கான தகுதி உங்களின் Adsense அக்கவுண்டில் 100 டாலர்கள் வந்திருக்கவேண்டும் சில நேரங்களில் இது மாறுபடலாம்.]
நீங்கள் எந்த வங்கிக் கணக்கைத் இனைத்து உள்ளீர்களோ அந்த வங்கிக்கு உங்களின் இணைய தளத்திலோ அல்லது யூடியூப் சேனலில் சம்பாதித்த பணம் ஒவ்வொரு மாதமும் அனுப்பி வைக்கப்படும்.
ஆனால், ஒவ்வொரு மாதமும் நீங்கள் 100 டாலர் என்ற இலக்கை அடைய வேண்டும். இல்லாவிட்டால் அனுப்பி வைக்கப்படாது.
இந்த 100 டாலர் என்ற இலக்கை நீங்கள் அதிகமாக்கிக் கொள்ள முடியும் 300 டாலர்கள் என்பது போல நீங்கள் அதிகமாக மாற்றி வைத்துக் கொள்ளலாம்.
ஆனால் குறைவான அளவில் வைத்துக் கொள்ள முடியாது. குறைந்தபட்ச அளவு 100 டாலர்கள் இருக்க வேண்டும்.
அப்படி சம்பாதித்த பணத்தை முதலில் உங்களுடைய தளத்திலிருந்து கூகுள் ஆட்சென்ஸ் அக்கவுண்டிற்கு அனுப்பி வைக்கப்படும் பிறகுதான் ஆக்கவுண்ட் இல் இருந்து உங்களுடைய வங்கி கணக்கிற்கு அனுப்பப்படும்.