பிளாக்கர் வெப்சைட் என்றால் என்ன?

KrishSel All in All

பிளாக்கர் வெப்சைட் என்றால் என்ன?

பிளாகர் இணையதளம் என்பது இலவசமாக நாம் பயன்படுத்திக் கொள்ளும் கூகுள் தரப்பிலிருந்து கொடுக்கப்படும் ஒரு இலவச தளம் ஆகும்.

இதில் நம்முடைய சொந்த கட்டுரைகளை முறையாகப் பதிவு இடுவதன் மூலம்  Google Adsense -ல் அனுமதி பெற்று பணம் சம்பாதித்துக் கொள்ள முடியும்.


What is blogger


கூகுள் Adsense Account-ல் நம்முடைய இணைய தளத்தை இனைத்துக் கொண்ட பிறகு நமது உடைய இணைய தளத்திற்கு விளம்பரங்கள் காட்டப்படும் அதன் மூலமாக நமக்கு பணம் கிடைக்கும்.

பொதுவாக இணைய தளம் என்றால் அதற்கான Domain name மற்றும் Hosting நாம் பணம் கொடுத்து வாங்க வேண்டியதாக இருக்கும்.

ஆனால் பிளாகர் இணைய தளத்தில் domain name மற்றும் Hosting நாம் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

அல்லது டொமைன் நேம் மட்டும், உங்கள் blogger website -க்கு பணம் கொடுத்து தனிப்பட்ட Domain வாங்குவது என்றாலும் வாங்கிக் கொள்ளலாம் அது உங்களின் விருப்பமே.

தனிப்பட்ட டொமைன் நேம் வாங்கினால் மட்டுமே ஆட்சென்ஸ் அக்கவுண்டில் அனுமதி கிடைக்கும் என்பது இல்லை.

*பிளாக்கர் டொமைன் என்றால் என்ன? 

பிளாகர் டொமைன் என்றால் உங்களின் இணையதளத்தின் பெயருக்குப் பின்னால் Blogger என்ற வார்த்தையும் இணைக்கப்பட்டிருக்கும்.

உதாரணமாக:

www.KrishTech.blogger.com

*தனிப்பட்ட டொமைன் என்றால் என்ன?

தனிப்பட்ட டொமைன் நேம் என்பது மேலே குறிப்பிட்டது போல் இல்லாமல் உங்களின் இணையதளத்தில் மட்டும் இருக்கும்.

உதாரணமாக:

www.KrishTech.com

இதுபோல் தனிப்பட்ட முறையில் டொமைன் வாங்க வேண்டும் என்றால் பணம் கொடுத்து வாங்க வேண்டும். இதற்கான சில இணைய தளம் இருக்கிறது அதை பயன்படுத்தி நீங்கள் தனிப்பட்ட Domain Name வாங்கிக் கொள்ள முடியும்.

இதேபோல் உங்களுடைய பிளாக்கர் இணையதளத்தில் ஒரு உண்மையான வெப்சைட் தளம் போல் டிசைன் செய்து கொள்ள முடியும்.

அதற்கு நீங்கள் சில இலவச அல்லது பணம் கொடுத்து வாங்கிய Layout Themes டவுன்லோட் செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.

Layout அல்லது Themes என்றும் குறிப்பிடுவார்கள்.

இவ்வாறு பயன்படுத்துவதன் மூலம் உங்களுடைய பிளாக்கர் இணையதளம் ஒரு முழுமையான உண்மையான இணையதளம் போலவே இருக்கும். 

பிளாகர் இணையதளத்தில் தற்பொழுது நிறைய அப்டேட்களை கொண்டு வந்துள்ளார்கள்.

இதன் மூலம் மிக எளிமையாக உங்களால் நகரை கையாள முடியும்.

அதனால் மிக சுலபமாக உங்களால் Blogger website உருவாக்கி கொண்டு அதன் மூலம் அதிக கட்டுரைகளை பதிவிட்டு பணம் சம்பாதித்து கொள்ளவும் முடியும்.

பிளாக்கர் இணையதளத்திலும் ஒன்றுக்கு மேற்பட்ட  Subdomain (Website) உருவாக்கிக் கொள்ள முடியும்.

இன்றைய அளவிலும் பிளாகர் இணையதளத்தை பயன்படுத்தி அதிகபட்சமான YouTube Channel வைத்திருக்கும் நபர்கள் ஆக இருந்தாலும் சரி, அல்லது தனிப்பட்ட முறையில் Blogger உருவாக்கி பணம் சம்பாதிப்பதாக இருக்கட்டும் அதிகமான நபர்கள் இதன் மூலம் அதிக வருமானத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.






Tags