what happens if you don't get 1000 subs in the last 12 months ?
யூடியூப் சேனல் தொடங்கி ஒரு வருடம் முடிந்தும் 1000 Subscribers, 4000 Watching Hours வரவில்லை என்றால் என்ன ஆகும்.
![]() |
What happen not reaching Monetization Eligiblelity |
உங்கள் சேனலுக்கு அதன் பிறகு Monetization கிடைக்குமா? கிடைக்காதா?
கண்டிப்பாக கிடைக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.
இதை பற்றிய தெளிவான தகவல்கள் இந்த பதிவில் பார்க்கலாம்.
யூடியூப் Policy படி ஒரு சேனல் தொடங்கி கடைசி 12 மாதத்திற்குள் Monetization Eligiblelity அடைந்திருக்க வேண்டும்.
இவ்வாறு இருக்கும் சேனல் மட்டுமே Monetization செய்து கொள்ள தகுதியை பெற்று இருக்கும்.
சரி, இதுபோல் 365 நாட்களில் இந்த தகுதியை அடையாத சேவைகள் என்ன செய்வது? இனி Monetization-னே கிடைக்காத? என்று கேட்டால்.
அப்படி எல்லாம் ஏதும் இல்லை என்பதே உண்மை.
அதாவது, கடைசி 12 மாதம் என்பதே கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
கடைசி 356 நாட்கள் என்றும் சொல்லலாம்.
உங்கள் சேனல் 1000 Subscribers, 4000 watching Hours பெறுவதற்க்கு முதல் 12 மாதம் முடிந்து, அதற்கு மேலும் நாட்கள் ஆகிறது என்றால் கடைசியாக சேர்ந்த நாட்கள் கணக்கில் எடுத்துக்கொண்டு, ஆரம்ப நாட்கள் கழிக்கப் படும்.
அதாவது மாத கணக்கில் எடுத்துக் கொண்டால், 12 மாதம் என்ற கணக்கில்.
உங்கள் சேனல் தொடங்கி 14 மாதம் ஆகிவிட்டது எனில், முதல் 2 மாதங்கள் (1,2) நீக்கப்பட்டு கடைசியாக சேர்ந்த 2 மாதங்கள் (13,14 மாதம்) கணக்கில் எடுத்துக் கொள்ளபடும்.
இப்போது 12 மாதம் என்ற கணக்கில் (3,4,5,6,7,8,9,10,11,12,13,14 = 12 மாதம்)
கடைசி மாதங்கள் கணக்கில் எடுத்துக் கொண்டு அந்த மாதங்களில் நீங்கள் பெற்றுள்ள Subscribers மற்றும் watching hours மட்டுமே Monetization-க்கு சேர்த்துக் கொள்வார்கள்.
நீக்கப்பட்ட மாதங்களில் நீங்கள் பெற்ற Subscribers மற்றும் Watching Hours-ம் கழிக்கப்படும் அதாவது நீக்கப்படும்.
உதாரணமாக:
ஒரு யூடியூப் சேனலை ஜனவரி-1 2020 ல் தொடங்கி இருக்கிறேன் என வைத்துக் கொள்ளலாம்.
இப்போது 2020 வருடம் முழுவதும் முடிந்து விட்டது.
2021 - மார்ச்-1 மாதம் வந்து விட்டது என வைத்துக் கொள்வோம்.
இப்போது பாருங்கள் மொத்தம் 14 மாதங்கள் கணக்கில் வரும். (2020ல் - 12 மாதங்கள் + 2021ல் -2 மாதங்கள்)
இப்போது எப்படி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்றால், கடைசி 12 மாதம் என்ற அடிப்படையில் 2021ல் -2 மாதமும் + 2020ல் - கடைசி 10 மாதமும் எடுத்துக் கொள்ளப்படும்.
அதாவது, 2020- ஜனவரி, பிப்ரவரி மாதம் கணக்கில் வராது.
2020 மார்ச் மாதம் முதல் 2021 பிப்ரவரி மாதம் வரை எடுத்து கொள்ள வேண்டும்.
இப்போது கணக்கிட்டு பாருங்கள் 12 மாதம் சரியாக வரும்.
*இப்படியாகத்தான் ஒவ்வொரு மாதமும் நீங்கள் கடந்து செல்ல செல்ல ஆரம்பத்தில் உள்ள மாதங்கள் கழிந்து,
*கடைசியாக உள்ள மாதங்கள் சேர்த்துக்கொண்டு அந்த 12 மாதங்களில் நீங்கள் பெற்ற Subscribers மற்றும் Watching Hours கணக்கில் எடுத்துக் கொண்டு,
*Monetization-க்கு தேவையான அந்த ஆயிரம் Subscribers மற்றும் 4000 வாட்சிங் hours எந்த கடைசி 12 மாதத்தில் நீங்கள் பெற்றுக் கொள்கிறார்களோ அப்போதே உங்கள் சேனலில் Monetization Apply செய்ய தகுதி Option கொடுக்கப்படும்.
எனவே நீங்கள் சேனல் தொடங்கி எவ்வளவு வருடம் ஆகி இருந்தாலும் அதைப்பற்றி எந்த கவலையும் பட வேண்டாம்.
நீங்கள் தொடர்ந்து வீடியோக்களை பதிவிடலாம்.
எனவே, உங்கள் சேனல் எப்போது ஆயிரம் Subscribers மற்றும் 4000 watching hours அடைகிறதோ அப்போது உங்கள் சேனலுக்கு Monetization Apply செய்து கொள்ள முடியும்.
இந்தப் பதிவின் மூலம் நிச்சயமாக இது தொடர்பான சந்தேகங்கள் இருந்தால் அனைத்தும் தீர்ந்து இருக்கும் என நம்புகிறேன்.
மேலும் இதில் ஏதேனும் உங்களுக்கு தனிப்பட்ட முறையில் சந்தேகங்கள் இருந்தால் கீழே கமெண்டில் குறிப்பிடலாம்.
அல்லது நம்முடைய Krish Tech Tamil யூடியூப் சேனலில் Follow செய்து கொள்ளுங்கள் அங்கும் வந்து உங்களுடைய கேள்விகளை கேட்கலாம்.