can i monetize whatsapp status videos on youtube?
And How to Earn Money From This Channel -Trick and Tips
யூடியூபில் சுலபமாக Views மற்றும் Subscribers கொண்டு வந்து கூடிய ஒரு கண்டெண்ட் என்றால் அது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோக்கள் தான்.
![]() |
Whatsapp Status Videos Earnings Tricks |
இதற்குக் காரணம் ஸ்டேட்டஸ் சாங்ஸ் வீடியோக்களில் நிச்சயமாகத் திரைப்படங்களின் பாடல்கள் இடம் பெற்று இருப்பதால் மக்கள் அதிகமான வகையில் இது போன்ற வீடியோக்களை விரும்பிப் பார்க்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல் வீடியோ பார்ப்பதற்கும் மிகக் குறுகிய நேரமாகவும், பொழுது போக்காவும் இருப்பதும் ஒரு முக்கியமான காரணமாக உள்ளது.
இதைத் தங்களின் வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம், Telegram போன்ற மற்ற சமூக வலைதளங்களிலும் தனது நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் அதிகமாகப் பகிர்ந்து மகிழ்வதற்காக அதிகபட்ச பேர் இதே போன்ற ஸ்டேட்டஸ் சாங்ஸ் வீடியோ களையே விரும்புகின்றனர்.
குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் டிக்டாக் போன்ற பொழுதுபோக்கு ஆப் வந்தது பிறகு இது போன்ற வீடியோக்களைக் காண தாக்கம் இன்னும் மக்களிடையே அதிகம் ஆகிவிட்டது.
எனவே சாதாரண மக்களிலிருந்து திரையில் நடிக்கும் சின்னத்திரை வெள்ளித்திரை என்று எல்லா திரை நட்சத்திரங்களும் இந்த டிக் டாக் மூலம் தனது வீடியோக்களைத் திரைப்பட பாடல்களுக்கு வீடியோவாக எடுத்து,
Whatsapp, instagram போன்ற சமூக வலைதளங்களில் அதை அதிகமாக ஷேர் செய்வது வருகிறார்கள்.
தற்போது டிக்டாக் முடக்கம் செய்யப்பட்டு இருக்கலாம் ஆனால் இதே போலவே ஏகப்பட்ட செயலிகள் வந்துவிட்டது.
இன்னும் சுலபமாகச் சொல்லப் போனால் காலையில் தனது நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் ஒரு காலை வணக்கம் சொல்லவே இந்த ஸ்டேட்டஸ் வீடியோவை Share செய்வதன் மூலமே சொல்கின்றனர்.
எனவே தான் மக்கள் இது போன்ற வீடியோக்களை அதிகமாகத் தேடி வருவதினால், யூடியூபில் இது போன்ற ஸ்டேட்டஸ் வீடியோக்களைப் பதிவிட்டால் உடனே அதிகமான பார்வையாளர்களையும் (Views) மற்றும் Subscribers-ம் பெற்றுக் கொள்ள முடிகிறது.
எனவேதான் யூடியூப் சேனல் புதிதாக் தொடங்கும் அதிகபட்ச நபர்கள் இது போன்ற வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோக்களைப் பதிவிடுகின்றனர்.
உண்மையில் இது போன்ற ஸ்டேட்டஸ் வீடியோ சேனல் உங்களுக்குக் கைகொடுக்குமா? உங்களால் இது போன்ற சேனலில் பணம் சம்பாதித்துக் கொள்ள முடியுமா? என்று கேட்டால் இல்லை என்பதே உண்மை.
ஸ்டேட்டஸ் வீடியோ சேனல் தொடங்கிய உடனே நீங்கள் வீடியோ பதிவிட்ட உடனே உங்களுக்கு அதிகமான Views மற்றும் Subscribers வருவது என்னமோ உண்மைதான்.
ஆனால் அது உங்களின் சேனலுக்குப் பணம் சம்பாதித்துக் கொள்ள Monetization-க்கு Eligible செய்வதற்கு தகுதியான ஒரு Content -டா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை.
காரணம் உங்களுக்கே தெரிஞ்சிருக்கும் ஸ்டேட்டஸ் சாங்ஸ் வீடியோக்களில் கண்டிப்பாகத் திரைப்பட பாடல்களை நாம் பயன்படுத்துவோம்.
அப்படி இல்லை என்றாலும் ஏதேனும் ஆல்பம் சாங் பயன்படுத்த வேண்டியதாக இருக்கும்.
இதுபோல் அடுத்தவர்களின் சாங்கை (Content) பயன்படுத்தும்பொழுது கண்டிப்பாக Copyright வரும் இது YouTube Policy க்கு ஏற்றதாக இருக்காது.
அதனால் உங்களின் குறிப்பிட்ட வீடியோக்கள் அல்லது ஒட்டுமொத்த சேனலும் Monetization Eligiblelity தகுந்ததாக இருக்காது.
உங்கள் உழைப்பு அனைத்தும் வீணாகப் போகும்.
அதனால் இது போன்ற செயலைத் தொடங்கும் முன் ஒருமுறைக்கு பலமுறை யோசனை செய்து பிறகு தொடங்குங்கள்.
நான் ஏற்கனவே இதுபோல் சேனலைத் தொடங்கி அதில் அதிகமான Subscribers மற்றும் Views-ம் வைத்துள்ளேன்.
இந்த சேனலை வைத்து ஏதும் செய்ய முடியாதா? என்று கேட்டால் கண்டிப்பாக முடியும்.
அதற்கான 2 வழிகள் இருக்கிறது. இந்த முறைகளைப் பயன்படுத்தி நீங்கள் தனிப்பட்ட முறையிலேயே அதிக பணம் சம்பாதித்துக் கொள்ள முடியும்.
வழி முறை:1 (Trick and Tips-1)
இது போன்ற Status Video சேனலுக்கு
Monetization-க்கு மட்டும் தான் பிரச்சனை இருக்குமே தவிர உங்கள் சேனல் நடத்துவதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது.
எனவே இது போன்ற சேனலைத் தொடங்கி அதன் மூலம் அதிகமான Subscribers மற்றும் பார்வையாளர்களையும் பெற்றுக்கொண்டு பிறகு,
அந்த சேனலை Monetization-க்கு தகுதியான வீடியோக்கள் பதிவிட்டு அதன்மூலம் இந்த சேனலில் Monetization பெற்றுக்கொள்கிறேன் - என்ற வகையில் வேண்டுமென்றால் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆனால் இதிலும் பிரச்சனை இருக்கிறது,
என்ன என்றால் நீங்கள் போடக்கூடிய ஸ்டேட்டஸ் சாங் வீடியோக்களுக்கு எந்த விதமான காப்பிரைட் ஸ்ட்ரைக் (Copyright Strike) வராமல் இருக்கும் வரை உங்களால் தொடர்ந்து சேனலை நடத்த முடியும்.
ஆனால் வீடியோக்களுக்கு Copyright Claims வந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
மேலே குறிப்பிட்டுள்ளது போல் உங்களின் வீடியோக்களுக்குத் தொடர்ந்து மூன்று ஸ்ட்ரைக் வந்துவிட்டது எனில் சேனல் Termination செய்யப்படும்.
அதற்கு மேற்கொண்டு உங்களால் சேனலில் எந்தவிதமான பதிவையும் போட முடியாது. உங்கள் சேனல் மற்றும் உழைப்பு முழுவதும் வீணாகிவிடும்.
எனவே இது போன்ற சேனலைத் தொடங்கி அதில் காபிரைட் Claim வந்தாலும், எந்தவித Strike வராமல் தொடர்ந்து சரியான முறையில் வீடியோக்கள் போட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
இதன்மூலம் Monetization-க்கு தேவையான அந்த ஆயிரம் சப்ஸ்கிரைபர் (1k Subscribers) வந்தவுடன் நீங்கள் போட்டு இருக்கக்கூடிய வீடியோக்களை மாற்றிவிட்டு,
Monetization-க்கு தகுதியான வீடியோ பதிவைப் போட்டு அதன் மூலம் உங்கள் சேனலுக்கு Monetization பெற்றுக்கொள்ள முடியும்.
வழி முறை:2 (Trick and Tips-2)
மேலே குறிப்பிட்டுள்ளது போல் உங்களது சேனலில் எந்த ஒரு மாற்றங்களையும் (Edit, change, remove Some videos, upload New videos) செய்து உங்கள் சேனலுக்கு Monetization பெற முடியவில்லை என்றால்.
உங்கள் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வீடியோக்கள் மூலம் அந்த அதிகமான பார்வையாளர்களையும் Subscribers வைத்துக் கொண்டு உங்களால் வேறொரு முறையில் பணம் சம்பாதித்துக் கொள்ள முடியும்.
அதாவது மற்ற செயல்களைப் புரமோட் செய்து தருவதற்காக இந்தச் சேனலைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு மற்ற சேனல்களை உங்களது சேனலில் பிரமோட் செய்து தருவதற்கு ஒரு குறிப்பிட்ட பணத்தை வாங்கிக் கொண்டு எங்கள் புரமோட் செய்து தரலாம்.
மற்றும் உள்ளூர் வியாபார விளம்பரங்களுக்கும் உங்களது சேனலைப் பயன்படுத்தி அந்த விளம்பரத்திற்காகப் பணம் வாங்கிக் கொண்டு செய்து தரலாம்.
இந்த உள்ளூர் வியாபாரத்திற்கான விளம்பரம் உங்களது சேனலில் காட்டுவதற்கு மட்டும் யூடியூப் உடைய விதிமுறைகளைக் கடைபிடித்து,
அதன்படி செய்து கொள்வது உங்கள் சேனலுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருக்க உதவும்.
இதுபோல் உங்களுடைய வாட்ஸப் ஸ்டேட்டஸ் சேனலில் அதிகமான அளவில் அதாவது லட்சக்கணக்கான சப்ஸ்கிரைபர்ஸ் இருக்கும் ஒரு சேனலாக இருந்தால்.
இது போன்ற முறைகளிலும் சுலபமாக உங்களால் அதிகமான பணம் சம்பாதித்து கொள்ள முடியும்.
அதேபோல உங்களது மற்றொரு சேனல் Promote செய்து கொள்ளவும் அல்லது புதிதாக ஏதேனும் தொடங்கினால்,
அந்த சேனலுக்கான புரமோஷனை உங்களது இந்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் சேனலின் மூலம் Promote செய்து - விரைவாக உங்களது புதிய சேனலை வளர்த்துக் கொள்ள முடியும்.