How to reach 4K watching hours on YouTube?

KrishSel All in All

How to Reach 4K watching hours on YouTube?

புதிய யூடியூப் தொடங்கி சேனல் நடத்தும் அனைவருக்கும் இருக்கக்கூடிய முக்கியமான கவலை அவர்களின் சேனலுக்கு Monetization பெறுவது.

4000 watching hours


ஒரு யூடியூப் சேனலுக்கு பணமாக்குதல் அம்சம் (Monetization) கிடைக்க வேண்டுமென்றால் அதன் தகுதியான ஆயிரம் சப்ஸ்கிரிபர்ஸ் (1000 Subscribers) மற்றும் 4000 ஆயிரம் மணி நேரம் (watching hours )பெறவேண்டும்.

எனவே புதிய யூடியூபில் அனைவருக்கும் முக்கியமான கவலை இந்த தகுதியை அடைய வேண்டும் என்பதே அதாவது ஆயிரம் சப்ஸ்கிரைபரை (Subscriber) அடைந்துவிட வேண்டும் அதேபோல் 4000 மணிநேரத்தை அடைய வேண்டும் என்பதே.

இதில் இந்த ஆயிரம் சப்ஸ்கிரைபர் என்பதைக்கூட எளிதில் பெற்றுவிட முடிகிறது. ஆனால் 4000 மணி நேரம் என்பதை அடைவதற்கு ஒரு புதிய சேனல் மிகவும் சிரமப்பட வேண்டியதாக உள்ளது.

எனவேதான் உயிராக சேனல் தொடங்கிய அனைவரும் தங்களின் செயலுக்கான பாவை நேரத்தை அதிகப் படுத்திக் கொள்ள நிறைய முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு மாற்று வழி ஏதேனும் இருக்கிறதா என்ன தேடிக்கொண்டிடு இருக்கிறார்கள்.

உண்மையை சொன்னால் யூடியூப் தரப்பிலிருந்து கொடுக்கப்படும் சிறப்பு அம்சங்களை நாம் பயன்படுத்திய மிக விரைவில் இந்த 4000 பார்வை நேரங்களை எளிதில் பெற்றுவிட முடியும்.

இந்த அம்சங்களை பயன்படுத்திய நீங்கள் மிக விரைவில் உங்களின் சேனலுக்கு காண அந்த 4000 பார்வை நேரங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

இதை சரியான முறையில் நீங்கள் பயன்படுத்திக் கொண்டால் அதிகபட்சமாக ஒரு வாரத்தில் கூட உங்களால் இந்த 4000 மணி நேரத்தை பெற்றுவிட முடியும்.

மிக விரைவிலேயே 4000 Watching Hours பெறுவது எப்படி?

அவை:

* Live Streaming

* Upload Primiere Video

ஆயிரம் சந்தாதாரர்களை (Subscribers) நீங்கள் பெற்று விட்டாலே உங்களுக்கு உங்களின் சேனலில் லைவ்  (live streaming) செய்துகொள்ள சிறப்பு அம்சம் கொடுக்கப்படும்.

இந்த யூடியூப் தரப்பிலிருந்தே கொடுக்கப்படும் லைவ் ஆப்ஷனை பயன்படுத்தி மிக விரைவிலேயே உங்களுடைய சேனலுக்கு Monetization -க்கு தேவையான பார்வை மணிநேரத்தை அடைய முடியும்.

மேலே குறிப்பிட்டுள்ளது போல் நீங்கள் எந்த அளவிற்கு இதை சரியான முறையில் பயன்படுத்தி கொள்கிறீர்களோ அதை பொருத்து மிக மிக குறைவான நாட்களில் உங்களால் இந்த 4000 மணி நேரத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

அடுத்த அம்சம் யூடியூப் பிரீமியர் வீடியோ. இந்த அம்சத்தை ஆயிரம் சப்ஸ்கிரிபர் பெற்ற சேனல்கள் மற்றும் ஆயிரம் சப்ஸ்கிரைப் பெறாத மிகவும் புதிய யூடியூப் சேனல்கள் அனைவருமே இந்த அம்சத்தை பயன்படுத்தி கொள்ள முடியும்.

இந்த யூடியூப் பிரீமியர் வீடியோ அம்சத்தை பயன்படுத்துவதன் மூலமும் உங்கள் வீடியோவுக்கான watching hours சற்று விரிவாகவே அதிகப்படுத்திக் கொள்ள முடியும்.

இந்த பிரிமியர் அம்சத்தை பயன்படுத்துவதன் மூலம் லைவ் ஸ்ட்ரீமிங் செய்வது போல அதிகப்படியான பார்வை மணிநேரத்தை பெற முடியவில்லை என்றாலும், உங்கள் சேனலில்  வழக்கமாக வரும் watching hours-ல் 20- 30% வரை அதிகப்படுத்திக் கொள்ள முடியும்.

ஆனால் லைவ் செய்வதன் மூலம் நிச்சயமாக உங்களால் மிகவும் குறைந்த நாட்களில் அதுவும் மேலே குறிப்பிட்டுள்ளது போல் கண்டிப்பாக ஒரே வாரங்களில் உங்களால் அந்த 4000 பார்வை மணிநேரத்தை பெற முடியும்.

எவ்வளவு நேரம் லைவ் செய்யலாம் என்பதில் எந்த ஒரு நிபந்தனையும் கிடையாது. நீங்கள் எவ்வளவு நேரம் ஆனாலும் உங்கள் சேனலில் லைவ் செய்து கொள்ளலாம்.

அதன் மூலம் அதிகமான பார்வையாளர்களை பெற்று அதிகமான பார்வை மணி நேரங்களையும் மிக விரைவில் பெற்றுக்கொள்ள முடியும்.

என்னுடைய யூடியூப் சேனலிலும், நான் இதையே கடை பிடித்தேன் எனது 4000 மணி நேரம் அடைவதற்கு லைவ் அதிகமாக செய்து பெற்றுக் கொண்டேன்.

எனது சேனலில் ஆயிரம் சப்ஸ்கிரிபர்  பெற்றுவிட்டேன். ஆனால், அந்த 4000 மணி நேரம் என்பதை என்னால் சாதாரணமாக வீடியோ அப்லோட் செய்வதன் மூலம் பெற முடியவில்லை. 

பிறகு தினமும் ஒரு லைவ் என்ற முறையில் நிறைய லைவ் செய்த பிறகே என்னால் அந்த 4000 மணி நேரத்தை அடைய முடிந்தது.

எனவே, எனது சொந்த அனுபவத்தை கொண்டே இந்த கட்டுரையை நான் பதிவிடுகிறேன், உங்களின் யூடியூப் சேனலுக்கும் இது கண்டிப்பாக இது பயன்படும் என நம்புகிறேன்.


Tags