How to Give Money YouTube for my Channel?

KrishSel All in All

How to Give Money YouTube for my Channel? 

யூடியூப் எப்படி நமக்கு பணம் தருகிறார்கள். 💶💶$$$$$$

YouTube Money


அதற்கு நாம் செய்ய  வேண்டிய அடிப்படையானது என்ன என்பதைப் பற்றிய முழு தகவல்கள் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

பொதுவாக யூடியூப் சேனல் தொடங்கி அதன் மூலம் பணம் சம்பாதித்துக் கொள்ள முடியும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாக உள்ளது.

ஆனால் எப்படி யூடியூப் நமக்கு பணம் தருகிறார்கள் அதற்கு நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய முழு தகவல் புதிதாக யூடியூப் சேனல் தொடங்கும் நபர்களுக்கு அல்லது தொடங்க நினைப்பவர்களுக்கு பெரும்பாலும் தெரிவதில்லை.

யூடியூப் பற்றி சற்று தெரிந்தவர்கள் யூடிபில் சேனல் ஒன்று தொடங்கி அதில் நமது வீடியோ பதிவுகளை, பதிவிடுவதன் மூலம் பணம் சம்பாதித்துக் கொள்ள முடியும் என்ற விஷயங்களை மட்டுமே தெரிந்து இருக்கின்றனர்.

ஆனால் இது மட்டும் கிடையாது இன்னும் பல விஷயங்கள் நாம் யூடியூப் சேனல் மூலம் பணம் சம்பாதித்துக் கொள்ள, செய்ய வேண்டியவை இருக்கின்றன என்பது தான் உண்மை.

இங்கு நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் நிறைய பேர் தவறாக நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயம் என்னவென்றால் யூடியூப் சேனலில் வீடியோ பதிவிட்டால் அதற்காக பணம் வரும் என்பதே.

ஆனால் உண்மையில் நாம் பதிவிடும் வீடியோவிற்க்காக பணம் கொடுக்கவில்லை,  வீடியோவில் காட்டப்படும் விளம்பரத்திற்காகவே பணம் கொடுக்கிறார்கள்.

இதைப் பற்றிய முழு தகவல் ஆரம்பம் முதல் கடைசி வரை என்னென்ன அமைப்புகளை நாம் செய்ய வேண்டும். மற்றும் சட்டதிட்டங்களை கடை பிடிக்க வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.

Start YouTube Channel:

*முதலில் உங்களுக்கான சேனலை யூட்யூபில் தொடங்க வேண்டும்.

How to open new YouTube Channel?

👉👉Open new channel

*பிறகு அதில் நீங்கள் வீடியோவை பதிவிட ஆரம்பிக்கலாம்.

 மேலும் பல முக்கியமான உள் அமைப்புகள் இருக்கின்றன.

அவற்றை தனிப்பட்ட ஒரு பதிவில் பார்க்கலாம்.

Reach Monetization Eligiblelity:

வீடியோ பதிவிடுவது மூலம் உங்களுடைய யூடியூப் சேனலில் கடைசி 12 மாதத்தில் அதாவது 365 நாட்களில் உங்களின் சேனலில் 1000 சந்தாதாரர்கள் (Subscribers) 4000 மணி நேர பார்வையாளர்களையும் (watching Hours) பெற்றிருக்க வேண்டும்.

இந்த தகுதியை உங்க சேனல் பெற்ற பிறகு நீங்கள் பணம் ஆக்குதலுக்கு  (Monetization) Apply செய்யலாம்.

இவ்வாறு நீங்கள் அப்ளை செய்வதன் மூலம் யூடியூப் தரப்பிலிருந்து உங்களை முழுமையாக சோதனை செய்த பிறகு உங்கள் சேனல் யூடியூப்பின் அனைத்து சட்ட திட்டங்களுக்கும் தகுந்ததாக இருந்தால் உங்களின் சேனல் பணமாக்குதலுக்கு தகுதியான சேனல் என அறிவிக்கப்படும். 

அதாவது Monetization Enble செய்யப்படும்.

இவ்வாறு உங்களின் சேனலுக்கு Monetization Enble செய்யப்பட்டால் தான் உங்களின் வீடியோக்களில் விளம்பரங்கள் காட்டப்படும்.

இதுபோல் விளம்பரங்கள் காட்டப்படுவது தன் மூலமாகவே உங்களின் சேனல்களுக்கு யூடியூப் தரப்பிலிருந்து பணம் கொடுக்கப்படுகிறது.

உங்களுடைய வருவாயிலிருந்து யூட்யூப் தனக்கான குறிப்பிட்ட பங்கு பணத்தை எடுத்துக்கொண்டு பிறகு உங்களுக்கான பங்கை கொடுப்பார்கள்.

அவை, உதாரணமாக:

பொதுவாக 40 % யூடியூப் 60% சதவீதம் சேனலுக்கும் என்ற முறையில் இருக்கும்.

இவ்வாறு நாம் ஒவ்வொரு மாதமும் சம்பாதிக்கும் பணத்தை அடுத்த மாதம் கூகுள் ஆட்சென்ஸ் அக்கவுண்டிற்கு அனுப்புவார்கள்.

இந்த கூகுள் ஆட்சென்ஸ் அக்கௌன்ட் என்றால் என்ன?

நாம் நமது உடைய சேனலை பணமாக்குதலுக்கு அப்ளை (Monetization apply) செய்யும் பொழுது 3 படிகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

அவை:

படி:1 YouTube partner program policy

படி:2 Google Adsense Account

படி:3 Monetization

மேலே குறிப்பிட்டுள்ள இந்த மூன்று படிகளை கடந்து வந்தால் தான் உங்களது சேனல் முழுமையான பணம் ஆக்குதல் தகுதியை பெற்று இருக்கும்.

இதில் இரண்டாம் படி தான் கூகுள்

*Google Adsense Account:

இந்த கூகுள் ஆட்சென்ஸ் அக்கௌன்ட் என்னவென்றால் நாம் யூடியூபில் சம்பாதிக்கும் பணத்தை இந்த அக்கவுண்ட் மூலமாகவே நமது பேங்க் அக்கவுண்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டு நாம் எடுத்துக்கொள்ள முடியும்.

மேலே குறிப்பிட்டுள்ளது போல் ஒவ்வொரு மாதமும் நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை அடுத்த மாதம் 10 -ம் தேதியில் இருந்து 13 ஆம் தேதிக்குள் உங்களுடைய கூகுள் ஆட்சென்ஸ் அக்கவுண்டிற்கு அனுப்பி வைக்கப்படும்.

பிறகு உங்களுடைய ஆக்சன்ஸ் அக்கவுண்டில் இருந்து 20ஆம் தேதிக்கு மேல் உங்களுடைய பேங்க் அக்கவுண்டிற்கு அனுப்பி வைக்கப்படும்.

இவ்வாறு நீங்கள் ஆட்சென்ஸ் அக்கௌன்ட் மூலம் பணம் பெறுவதற்கு,

*Id Verification

*Address Verification

 (pin number)

*Submit Payment details

 (bank account)

 உங்களது ஆட்சென்ஸ் அக்கவுண்டில் 10 டாலர் வந்தபிறகு உங்களுடைய ஐடி வெரிஃபிகேஷன் Address வெரிஃபிகேஷன் செய்திருக்க வேண்டும்.

அதை செய்த பிறகு (100$  வந்த பிறகு) உங்களுக்கு வேண்டிய பேங்க் அக்கவுண்டை Adsense account உடன் இணைத்து வைத்திருக்க வேண்டும்.

இதுபோல் அனைத்து அமைப்புகளையும் முடித்த பிறகு உங்களுடைய Adsense அக்கவுண்டில் 100 டாலர் வந்தபிறகு தான், நீங்கள் யூடிபில் சம்பாதித்த பணம் Adsense ஆக்கவுண்ட் மூலமாக எந்த வங்கி கணக்கில் இனைத்து உள்ளீர்களோ அந்த வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பி வைக்கப்படும்.

அதன் பின் எப்போது வேண்டுமானாலும் வழக்கம் போல் உங்களுடைய வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை நீங்கள் எப்போதும் போல எடுத்து பயன்படுத்திக்கொள்ள முடியும்.

முதல் முறை நீங்கள் யூட்யூப்பில் இருந்து பணம் எடுக்கும்போது மட்டும் உங்களுடைய வங்கி கணக்கில் பணம் வந்து அடைய சில நாட்கள் தாமதம் ஆகலாம்.

மேலே குறிப்பிட்டுள்ள அமைப்புகளும் ஒவ்வொரு படிமுறைகளும் ஒவ்வொரு நாட்டு சட்டதிட்டங்களுக்கு ஏற்ப சற்று மாறுபட்டு காணப்படும்.

உதாரணமாக: 

இந்தியாவில் பொருத்தவரை கூகுள் ஆட்சென்ஸ் அக்கவுண்டில் 100 டாலர்கள் வந்த பிறகுதான் உங்கள் பணம் வங்கிக்கு அனுப்பப்படும்.

இதை விட குறைவான பணம் இருந்தால் அனுப்பப்பட மாட்டார்கள் ஆனால் அதிகமான அளவை நீங்கள் மாற்றி வைத்துக்கொள்ள முடியும்.

ஆனால் மற்ற நாடுகளில் சிலவற்றில் 100 டாலருக்கும் குறைவான அளவு அதாவது 60 டாலர் என்ற அளவில் இருந்தாலே அவர்களால் பணத்தை பெற்றுக் கொள்ள முடியும்.

இதுபோல் நிறைய சட்டதிட்டங்களும் படிமுறைகளும், மற்ற நாடுகளுக்கு சற்று மாறுபட்டு காணப்படும்.

மேலே குறிப்பிட்ட இந்த முறைகளில் தான் யூட்யூபில் பணம் சம்பாதித்துக் கொள்ள முடியும்.

இதில் நீங்கள் சேனலில் செய்ய வேண்டிய அமைப்புகள் இன்னும் நிறைய இருக்கின்றன.

Monetization அப்ளை செய்து அதை பெற்ற பிறகுதான் உங்களுக்கு இன்னும் அதிகப்படியான கவனம் தேவை அதேபோல் அமைப்புகளும் நிறைய இருக்கிறது. 

அதில் மிகவும் முக்கியமான ஒன்று உங்களில் சேனலில் போடப்பட்ட அனைத்து வீடுகளுக்கும் தனிப்பட்ட முறையில் Monetization On செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அப்போதுதான் ஒவ்வொரு Video-விற்கும் தனிப்பட்ட முறையில் விளம்பரங்களில் காட்டப்படும்.

 இவ்வாறு விளம்பரங்கள் காட்டப்படுவது மூலமாக மட்டுமே தான் உங்கள் விடியோ களுக்கு YouTube -ல் இருந்து பணம் கொடுக்கப்படுகிறது. இதுதான் முக்கியமான விஷயம் யூடிபில் நாம் பணம் சம்பாதிப்பதற்கான அடிப்படை விஷயமாக இருப்பதும் இதுதான்.

இதைத் தவிர்த்து விளம்பரங்களில் பல வகைகள் இருக்கின்றன அவற்றையெல்லாம் பின்வரும் பதிவுகளில் தனித்தனியாகப் பார்க்கலாம்.

YouTube partner program policy:

மேலும் முக்கியமான தகவல் என்னவென்றால் நீங்கள் போடக்கூடிய வீடியோக்கள் கண்டிப்பாக யூடியூப் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

மேலும் முக்கியமானது விளம்பரங்கள் காட்டுவதற்கு தகுதியான வீடியோக்களாக போட வேண்டும்.

இல்லையென்றால் உங்கள் வீடியோக்களுக்கு பணமாக தகுதி கொடுக்கப்படாது. அந்தக் குறிப்பிட்ட வீடியோவிற்கு பணம் சம்பாதிக்க முடியாது.

அதற்கான விதிமுறைகளை நீங்கள் YouTube மூலமாகவே தெரிந்துகொள்ள முடியும். அதற்கான பதிவுகள் அனைத்தையும் அவர்களின் சொந்த இணைய தளங்களிலே பதிவிட்டு வைத்து இருக்கிறார்கள்.


Tags