YouTube Channel 1000 Subscribers and 4000 watching hours Reaching Fast Tips

KrishSel All in All

YouTube Channel 1000 Subscribers and 4000 watching hours Reaching Fast Tips in Tamil

உங்கள் யூடியூப் சேனல் தொடங்கி பல மாதங்கள் ஆகியும் இன்னும் 1000 Subscribers மற்றும் 4000 Watching Hours வரவில்லையா?

Reach fastly 1k Subscribers 4k watching hours
How to Fastly Reach More Subscribers, Watching Hours


இந்த Tips and Tricks ஐ Follow செய்து கொள்ளுங்கள் கண்டிப்பாக நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

அவை:

            *Upload Trending Contents  

            *Upload Regular Videos -  

                •Upload Consistently                                •Schedule Same Timing                      *Share Social Media 

            *Use Collaboration          

            *Use promotion           

            *Subscribe Others Channels                      (Followers Channel also)


*Upload Trending Content:

உங்கள் சேனலில் அனைத்து settings ம் சரியான முறையில் செய்யபட்டு. தினமும் வீடியோ அப்லோட் செய்தும் சேனல் வளர்ச்சி அடையவில்லை என்றால்.

நீங்கள் பதிவிடும் வீடியோக்கள் Content சற்று மக்களுக்கு தேவை இல்லாததாக இருக்கலாம் அல்லது பிடிக்காமல் இருக்கலாம். 

எனவே எப்போதும் பதிவிடும் Content க்கு பதில், இப்போது எதை மக்கள் அதிகமாக தேடுகின்றனர் என்பதை கண்டறிந்து அதை மையமாக கொண்டு உங்கள் சேனலின் Catogory க்கு ஏற்ப வீடியோவை (Trending Content with your Channel Catogory) போடுங்கள்.

இவ்வாறு போட்டும் சரியான views வரவில்லை என்றால், வீடியோ போடும் முறையை (Video Percentage) சற்று மாற்றி போட முயற்சி செய்யுங்கள்.


*Video Upload Consistently:

உங்களது சேனலில் தொடர்ந்து வீடியோக்களை பதிவிடுங்கள்.

மேலும் ஒரு தொடர்ச்சியான முறையில் பதிவிடுவது ரொம்ப முக்கியமான ஒரு விஷயம்.

1.Upload regularly

அதாவது தினந்தோறும் ஒரு வீடியோ என்றளவில் பதிவிடலாம்.

அல்லது வாரம் ஒரு முறை என்றோ வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் என்றோ இது போல் ஒரு அட்டவணையை வைத்துக்கொண்டு அதை பின்பற்றி வீடியோ பதிவிடுவது நல்லது.

மேலும் எந்த நாட்களில் வீடியோ பாரு விடுகிறோம் என்பதை அட்டவணை செயல் வைத்துக் கொள்வது போல எந்த நேரத்தில் வீடியோ அப்லோட் செய்கிறோம் என்பதையும் அட்டவணைப்படுத்தி கொள்வது மிகவும் நல்லது.

2. Timing

அதாவது வாரத்திற்கு ஒரு முறை வீடியோ என்றாலும் தினந்தோறும் ஒரு வீடியோ என்றமுறையில் பதி விட்டாலும் அந்த வீடியோவை எந்த நேரத்தில் அப்லோட் செய்கிறீர்கள் என்பதை முடிவு செய்து கொண்டு அதே நேரத்தில் நீங்கள் எப்போது வீடியோக்கள் செய்தாலும் அட்டவணைப்படுத்துக நேரத்தில் வீடியோ அப்லோட் செய்யுங்கள்.

உதாரணமாக:

காலை 6 மணி அளவில் வீடியோ அப்லோட் செய்தால் தொடர்ந்து இனி நீங்கள் செய்யும் அனைத்து வீடியோக்களையும் 6:00 என்ற அளவில் upload செய்யுங்கள்.

ஒரு நாளைக்கு 2 வீடியோ அல்லது 3, 4 வீடியோ அப்லோட் செய்தாலும், காலை, மதியம், மாலை என்ற  வகையில்;  எந்த மணி நேரத்தில் என்பதை  அட்டவணையை போட்டு அதை பின்பற்றி வீடியோக்கள் upload செய்வது, மிகவும் உங்கள் சேனலின் வளர்ச்சிக்கு பெரிதும் பயனுள்ளதாக அமையும்.

அப்போதுதான் உங்களின் பார்வையாளர்களுக்கு ஒரு புரிதலை கொடுத்து அடுத்தடுத்து இந்த நாட்களில் அல்லது இந்த மணி நேரத்தில் (Time) கண்டிப்பாக வீடியோ வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள்.

இவ்வாறு செய்கையில் உங்களில் பார்வையாளர்களுக்கு நோட்டிபிகேஷன் அனுப்பப்பட்டால் தினந்தோறும் இந்த சேனலில் இருந்து ஏதோ ஒரு வீடியோ வந்துகொண்டே இருக்கிறது, அப்படி என்னதான் போடுகிறார்கள் என்று பார்ப்பது சில பார்வையாளர்களை நாம் பெறமுடியும்.


*Share Other Social Media:

மேலே குறிப்பிட்டுள்ளது போல் உங்களது சேனலில் அனைத்து செட்டிங்ஸ்-ம் செய்து சரியான முறையில் வீடியோவை பிரசன்ட் செய்து அதை யூடியூபில் அப்லோட் செய்து அதற்கான அனைத்து உழைப்பையும் போட்டும் அதற்கான பலன் எதுவும் கிடைக்கவில்லை என்றால்.  அதற்கு முக்கியமான காரணம் உங்களின் சேனலை அல்லது ஒரு வீடியோவை இன்னும் மற்றவர்களுக்கு தெரியவில்லை அல்லது தெரியப்படுத்தவில்லை என்பதே.

எனவே ஒவ்வொரு முறை நீங்கள் உங்களின் சேனலில் வீடியோ upload செய்த பிறகும் மற்ற சமூக வலைதளங்களிலும் அதை ஷேர் செய்து உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்.

அப்போதுதான் என்னிடம் இதுபோல் ஒரு சேனல் இருக்கிறது அதில் இது போன்ற பதிவுகளை நான் போட்டு வருகிறேன் என்ற ஒரு தகவலை அவரிடம் கொண்டு சேர்க்க முடியும். 

இவ்வாறு செய்யும்பொழுது தான் உங்களின் சேனல் மற்றவர்களுக்கும் தெரிய வரும். அவர்களுக்கு நீங்கள் போடும் பதிவு பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ அது அவர்களுக்குத் தேவையான பதிலோ அல்லது தேவையில்லையோ முதலில் இதுபோல் ஒரு சேனல் இருக்கிறது அதில் பதிவுகளை போட்டு வருகிறேன் என்ற ஒரு செய்தியாவது தெரிவிக்க வேண்டும்.  எனவே சமூக வலைதளங்களை பயன்படுத்தி அதிகமாக  வீடியோக்களை ஷேர் செய்யுங்கள்.

ஏனென்றால் சமூக வலைதளம் தான் நம்மளுடைய நண்பர்களை காட்டிலும் மற்ற நபர்களும் அதிகமாக பயன்படுத்தும் ஒரு தளம்.

எனவே நீங்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்தி உங்களுடைய வீடியோவை ஷேர் செய்யும் பொழுது அதிகமான பேருக்கு அது சென்றடையும்.

அப்போதுதான் அதிகமான பார்வையாளர்களை மிக சுலபமாக உங்களால் அடைய முடியும்.


* Use Collaboration:

புதிதாக யூடியூப் சேனல் தொடங்க இருக்கும் பல நபர்களுக்கும் இந்த ஒருமுறை யூடிபில் இருக்கிறது என்று தெரிவதற்கு வாய்ப்பில்லை.

அது என்னவென்றால் சேனல் Collaboration.

Collaboration என்ன என்றால் ஒரு யூடியூப் சேனல் மற்றொரு சேனல் இடம் பேசி இரண்டு சேனலும் ஒப்பந்தம் செய்துகொண்டு இணைந்து ஒரே வீடியோ பதிவாக போடுவது. 

அதாவது ஒரே வீடியோவை இரண்டு நம்பரும் தனது கேமராவின் மூலம் பதிவு செய்துகொண்டு அதை தனித்தனியாக அவரவர் சேனலில் பதிவிட்டு கொள்ள முடியும்.

உதாரணமாக: 

டெக் சேனல் அதிகமாக இதை செய்கின்றனர். Product review channel, food review, vlog channel சேனல் போன்ற சேனல்கள் இதை மிக எளிமையாக செய்யலாம்.

மற்ற எந்த வகை செயலாக இருந்தாலும் உங்களின் Catogory சேர்ந்த ஒரு சேனலுடன் சேர்ந்து ஒரு வீடியோ பதிவை எடுத்துக்கொண்டு அதை உங்க சேனலிலும் சரி நீங்கள் இணைந்து வீடியோ எடுத்த அந்த (Collaboration) சேனலிலும் சரி ஒரு வீடியோ பதிவை பதிவிட்டு கொள்ள முடியும்.

இவ்வாறு Collaboration பதிவு போடும் பொழுது உங்களின் வீடியோ தலைப்பில் Collaboration வீடியோ என்ற வார்த்தையை இணைத்துக்கொள்ள வேண்டும்.

மேலும் நீங்கள் Collaboration செய்யும் சேனலின் பெயரையும் குறிப்பிடலாம். 

Collaboration இப்பொழுது நிறைய வகைகளில் செய்து கொண்டிருக்கிறார்கள் அதை ஒரு புரமோஷன் போல பயன்படுத்திக் கொண்டும் இருக்கிறார்கள்.

இதுபோல் செய்யும் பொழுது இரண்டு சேனலின் பார்வையாளர்களை மாற்றி மாற்றி பார்க்க வைக்க முடியும்.

அதாவது, Collaboration செய்த ஒரு சேனலில் ஆயிரம் சப்ஸ்கிரிபர்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

இரண்டாவது சேனலிலும் ஆயிரம் Subscribers இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

இப்போது இதேபோல் Collaboration செய்யும் பொழுது இரண்டு Subscribers -ம் சேர்ந்து இரண்டு சேனலுக்கும் 2000 பார்வையாளர்களாக மாறுவார்கள்.

இந்த சேனல்கள் தனிப்பட்ட முறையில் ஒரு வீடியோ பதிவை செய்தால் ஆயிரம் Subscribers  மட்டுமே அவர்களின் பார்வையாளராக இருந்திருப்பார்கள் அதில் எத்தனை பேர் பார்ப்பார்கள் என்பது இரண்டாம் பட்சம்.

இப்போது Collaboration செய்யும் பொழுது ஆயிரம் பார்வையாளர்கள் என்பது 2000 ஆக மாறி உள்ளார்கள்.

நீங்கள் மேலும் உங்களின் சேனலுக்கு  Subscribers பெறுவதற்கும் views அதிகப்படுத்துவதற்கும் இந்த Collaboration மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Collaboration பற்றிய முழு விளக்கமான தகவல்களை வேறொரு பதிவில் முழுமையாக பார்க்கலாம். தேவைப்பட்டால் கீழே கமெண்ட் செய்யவும்.


*Promotion:

Promotion இதே போல தான் அதாவது மேலே குறிப்பிட்டுள்ள Collaboration போலத்தான்.

ஆனால் Collaboration என்பது இரண்டு சேனலுக்கும் பயனளிக்கக் கூடியது.

ஆனால் புரமோஷன் என்பது ஒரு சிலருக்கு மட்டும் பயனளிக்கக் கூடியது.

அதாவது ஏதேனும் ஒரு குறிப்பிட்ட சேனலில் உங்களின் சேனல் பெயரையோ சேனலின் முழு ரிவ்யூ செய்து தர நீங்கள் கேட்டுக்கொள்ள முடியும்.

அது முழுவதும் ஒரு இலவசமாக உதவியாக இருக்கலாம் அல்லது பணம் வாங்கிக்கொண்டு  (promote)  செய்யலாம்.

அதன் மூலம் உங்களின் சேனலை மற்ற சேனலில் அவர்களின் பார்வையாளர்களுக்கு சொல்லி உங்களது சேனலை பார்க்க சொல்லமுடியும், Subscriber செய்து கொண்டு உங்கள் சேனலுக்கு Support செய்ய சொல்ல முடியும்.

இவ்வாறு சொல்லும் பொழுது எந்த சேனலில் உங்கள் சேனல் புரமோட் செய்யப்படுகிறதோ அந்த சேனலின் பார்வையாளர்களை பொறுத்து அவர்களின் ஆர்வத்தை பொறுத்து உங்கள் சேனலுக்கு பலன் கிடைக்கும்.

நீங்கள் புரமோஷனுக்காக எந்த சேனலை தேர்வு செய்கிறீர்கள் என்பதை பொறுத்து அதன் மூலம் உங்கள் சேனல் விரைவில் வளர்ச்சி அடையும்.


* Subscribe Other Channels:

உங்கள் சேனல் சம்பந்தப்பட்ட மற்ற புதிய சேனல்களை Subscribe செய்து கொண்டால், மாற்றாக அவர்கள் உங்களது சேனலை பெரும்பாலும் Subscribe செய்வார்கள்.

 மேலும்,உங்கள் சேனலி-ன் Subscribe செய்யும் அனைத்து சேனல்களையும் Subscribe செய்து கொள்வது மேலும் உங்களின் Followers அதிகப்படுத்திக் கொள்ள வழிவகுக்கும்.

இதன் மூலம் Subscribers அனைவருக்கும் உங்கள் சேனலில் நம்பிக்கை வரும், மேலும் உங்களின் சேனலை தொடர்ந்து பார்த்து (Support ) வரருவார்கள் அதாவது, தொடர்ந்து Followers ஆக இருந்து வருவார்கள்.

மேலே குறிப்பிட்ட வழிகளை சரியான முறையில் பயன்படுத்தி கொண்டால். மிகவும் சுலபமாகவும் விரைவாகவும் Subscribers மற்றும் Watching Hours-ம் பெற்றுக் கொள்ள முடியும்.


   

Tags