Online Earning Best Options - how to use Blogger and Wordpress In Best Way?

KrishSel All in All

Online Earning Best Options - how to use Blogger and Wordpress In Best Way?

இந்த பதிவில் ஆன்லைன் மூலமாக சிறந்த இரண்டு வழிகள் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.

எப்படி சரியான முறையில் உங்கள் Online Earnings ல் வெற்றி பெறுவது  என்ற Best Tips-ம் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இது போன்ற முக்கியமான தகவல்களை உங்களுக்கு யாரும் சொல்லிக் கொடுத்திருக்க மாட்டார்கள்.

Blogger and wordpress websites More Earnings best Method

ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம் என்றாலே இப்போதைய சூழ்நிலையில் அனைவரும் முதலில் தேர்வு செய்வது யூடியூப்-ஆகா இருக்கும்.

யூடியூபில் சாதாரணமாக ஒரு மெயில் ஐடி பாஸ்வேர்ட் இருந்தாலே அக்கவுண்ட் ஓபன் செய்து அதன் மூலம் யூடியூப் சேனலை உருவாக்கி வீடியோக்கள் அப்லோட் செய்து பணம் சம்பாதிக்கலாம். 

இந்த முறை எளிமையாக இருப்பதால் அனைவரும் இந்த முறையை தேர்வு செய்தார்கள். 

ஆனால் இதிலும் சில சட்டதிட்டங்கள் பணம் சம்பாதிப்பதற்கு ஏகப்பட்ட நிபந்தனைகள் கண்டுபிடிக்க வேண்டி இருப்பதால் மக்கள் வேறு வழிகளை தேடி செல்லும் நிலை உள்ளது.

எனவே இந்த பதிவில் YouTube தவிர்த்து வேறு எந்தெந்த வழிகளில் பணம் சம்பாதித்துக் கொள்ள முடியும் என்ற இரண்டு சிறந்த வழிகளை பார்க்கலாம்.

இந்த வழிகளை பயன்படுத்தி உங்கள் யூடியூப் சேனலுக்கு அதிகமான ஒரு பார்வையாளர்களை கொண்டு வந்து கொள்ளவும் முடியும். 

உங்கள் சேனலையும் இதன் மூலமாக வளர்த்துக் கொள்ள முடியும் என்பது பலருக்கும் தெரியாத ஒரு விஷயமாக இருக்கிறது.

இந்த பதிவின் மூலம் இந்த விஷயங்கள் அனைத்தையும் நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.

 உங்களால் யூடியூப் சேனல் மட்டுமல்லாமல் இந்த இரண்டு வழிகளிலும் பணம் சம்பாதித்துக் கொள்ள முடியும்.

இந்த முறை யூடியூப் சேனல் நடத்தும் பலபேர் கடைப்பிடிக்கும் ஒரு வழி ஆகும். 

இருப்பினும் புதிய Youtubers-க்கும் மட்டும் அல்லாமல் இன்னும் Online-ல் பணம் சம்பாதிக்க நினைக்கும் பலருக்கும்  இந்த விஷயம் தெரியாமல் இருக்கின்றன.

என்னவென்றால், உங்களுக்கு என ஒரு இணையதளத்தை உருவாக்கி அதன் மூலம் பணத்தை சம்பாதித்துக் கொள்ள முடியும்.
 அந்த இணையதளத்தை உங்கள் யூடியூப் சேனல் வளர்ச்சிக்கும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இந்த இணைய தளத்தை உருவாக்குவதற்கு,  வேர்ட்பிரஸ், பிளாக்கர் என்ற இரண்டு கூகுள் தளத்தையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பிளாகர், வேர்ட்பிரஸ் இந்த இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை நாம் அடுத்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

ஆனால் இந்த இரண்டிலுமே உங்களுடைய பதிவுகளை எழுத்து வடிவில் கொடுத்து அதன் மூலம் பார்வையாளர்களை பெற்றுக்கொள்வதன் மூலம் பணம் சம்பாதித்துக் கொள்ளலாம்.

இங்கும் யூடியூப் போலவே உங்களுக்கு எந்த அளவுக்கு பார்வையாளர்களை நீங்கள் பெற்று கொள்கிறீர்களோ அந்த அளவிற்கு பணம் சம்பாதித்துக் கொள்ள முடியும்.

ஆனால் யூடியூபில் வீடியோ வடிவில் கொடுக்கும் உங்கள் கருத்துக்களை இங்கு எழுத்து வடிவில் கொடுக்க வேண்டியதாக இருக்கும்.

மேலும் யூடியூப் போலவே நீங்கள் உங்களுக்கென்று ஒரு தளத்தை உருவாக்கி அதில் உங்களுடைய கட்டுரைகளை பதிவிட்டு வந்த பிறகு,

அதில் பணம் சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்றால் google adsense -ல்  ஒப்புதல் வாங்க வேண்டியதாக இருக்கும்.

கூகுள் ஆட்சென்ஸ் ஒப்புதல் வாங்கிய பிறகே உங்கள் இணையதளத்திற்கு விளம்பரங்களில் காட்டப்படும் அதன் மூலமாகவே பணம் சம்பாதித்துக் கொள்ள முடியும்.

நீங்கள் பதிவிடும் கட்டுரைகள் எது சம்பந்தமாக வேணாலும் இருக்கலாம். ஆனால் உங்களுடைய சொந்த பதிவாக இருக்க வேண்டும்.

வேர்ட்பிரஸ் போலவே இப்போது பிளாக்கர் தளத்திலும் அப்டேட் செய்யப்பட்டு அதிகமான அமைப்புகளை கொண்டு உள்ளது. 

இதன் மூலம் எளிமையாக வேர்ட்பிரஸ் போலவே உங்களால் பதிவை போட்டுக் கொள்ள முடிகிறது.

பிளாக்கர் மற்றும் வேர்ட்பிரஸ் வெப்சைட்டுக்கு உள்ள முக்கியமான வேறுபாடு என்ன என்றால்.

பிளாக்கரில் domain name, hosting வாங்காமலே உங்களால் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஆனால் வேர்ட்பிரஸ் இல் உங்களுக்கான domain name மற்றும்  hosting பணம் கொடுத்து முதலில் வாங்கிய பிறகே அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

பிளாகர் மற்றும் வேர்ட்பிரஸ் எதுவாக இருந்தாலும் சரி உங்களுக்கு என ஒரு இணையதளத்தில் விருப்பமான பிரிவுகளில் கட்டுரைகளை பதிவிட்டு அதன் மூலம் பணத்தை சம்பாதித்துக் கொள்ள முடியும்.

ஆனால் யூடியூப் போலவே இதிலும் காப்பிரைட் என்பது போன்ற விஷயங்கள் இருக்கிறது.

அதனால் உங்களுடைய சொந்த கட்டுரைகள் பதிவுகளை மட்டுமே போட வேண்டும்.

அடுத்தவர்களின் கருத்துக்களையும் பதிவுகளையும் போடுவதனால் உங்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கான உரிமம் கிடைக்காது.
அதாவது ஆட்சென்ஸ் அக்கவுண்டில் அப்ரூவல் கிடைக்காமல் போகலாம்.

உண்மையை சொல்லப்போனால் யூடியூப் சேனலில் நமக்கு கிடைக்கும் வருமானத்தை விட இணையதளத்தில் அதிகமாக பணம் சம்பாதிக்க முடியும் என்பதே உண்மை.

எனவேதான் யூடியூப் சேனல் வைத்திருக்கும் அதிகபட்ச பெரிய யூடியூப் சேனல் உரிமையாளர்கள் அவர்களுக்கென தனி ஒரு இணையதளத்தையும் உருவாக்கி வைத்து இருப்பார்கள்.

ஒரு சில வீடியோக்களில் தங்களது இணையதளத்தையும் அத்துடன் இணைத்து இருப்பார்கள் அதன் மூலம் அவர்களின் இணைய தளத்தையும் மேம்படுத்திக் கொள்வார்கள், இணையதளத்தின் மூலம் அவர்களின் யூடியூப் சேனலில் மேம்படுத்திக் கொள்வார்கள்.

இதன் மூலம் இவர்களுக்கு இவர்களின் இணைய தளத்திற்கும் பலன்களை பெற்றுக்கொள்ள முடியும். 

அதே சமயம் சேனலையும் மேம்படுத்திக்கொள்ள முடியும். 
அதிகமான பார்வையாளர்களை பெற்று இரண்டு இடங்களிலும் பணம் சம்பாதித்துக் கொள்ள முடியும்.

இணையதளத்தின் மூலம் யூடியூப் சேனல்- சேனல் மூலமாக இணைய தளம் என மாறி மாறி விளம்பர (Promote) படுத்திக்கொள்ள முடியும்.

ஏனென்றால் இன்றைய சூழலில் யூடியூப் சேனல்  அனைவருமே ஆரம்பித்து இருப்பதனால் அதில் வரும் பணம் மிகவும் குறைவானதாகவே இருக்கிறது.

 ஒரு யூடியூப் சேனலில் வரும் பணத்தை வைத்து மட்டுமே போதுமானதாக இருக்காது.

இதுபோன்று மற்ற வழிகளிலும் அவருடைய வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள தயார் செய்து கொள்ள வேண்டும்.

இதிலும் நிறைய வகைகள் உள்ளன.
இணையதளத்தை உருவாக்குவதிலும் நிறைய வழிகள் உள்ளன.

உதாரணமாக:

1. நாவல்கள், கதைகள் (Story Blogs)
எழுதும் இணையதளம்

 2. தகவல்களை (information blog) மட்டும் சொல்லும் இணையதளம்

3. செய்திகளை (News blog) சொல்லும் இணையதளம் 

4. E-commerce (மின் வணிகம்) என்று சொல்லக்கூடிய இணையதளம் இது போன்று பல வகையான இணையதளங்கள் இருக்கின்றன.

இதில் உங்களுக்கு எது விருப்பமோ அது சம்பந்தமான இணையதளங்களை உருவாக்கி நீங்கள் பணத்தை சம்பாதித்துக் கொள்ள முடியும்.

மேலே குறிப்பிட்டுள்ள வகைகள், உங்களுக்கு புரியும் வகையில் மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்.

E-commerce போன்ற இணையதளங்களில் அதிகமான ஆன்லைன் ஷாப்பிங் சம்பந்தமான, மக்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கான கட்டுரைகளை பதிவிடுவதன் மூலம் அதிகமான பார்வையாளர்களைப் பெற முடியும்.

இதன் மூலம் நமது இணையதளத்தில் பார்வையாளர்களை அதிக நேரம் இருக்க வைக்க முடியும். இதன் மூலம் உங்களுக்கு அதிகமான பணமும் கிடைக்கும்.

அதேசமயம் அந்த இணையதளத்தின் மூலம் நீங்கள் இணைத்திருக்கும் பொருட்களை வாங்குவதன் மூலம் அதிலிருந்து உங்களுக்கு குறிப்பிட்ட கமிஷனும் கிடைக்கும்.

இது போன்ற இணைய தளங்களை உருவாக்குவதன் மூலம் உங்களுக்கு ஒரு கல்லில் மூன்று மாங்காய் என்பது போல; அந்த பொருட்களை மக்கள் வாங்குவதன் மூலம் உங்களுக்கு கமிசன் கிடைக்கும்.

உங்கள் இணையதளத்தின் மூலம் மாத வருமானம் கிடைக்கும். 

அதேவேளையில் இணையதளத்தை உங்கள் யூடியூப் சேனலில் குறிப்பிடுவதன் மூலம் யூடியூப் சேனல் வீடியோக்களுக்கும் அதிக (Views) பார்வையாளர்களை பெற்றுக்கொண்டு யூடியூப் சேனலில் அதிகமான வருமானத்தை பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த ஒரு உதாரணம் மூலம் உங்களுக்கு தெளிவாக புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

 யூடியூப் சேனல் நடத்தும் பெரும்பாலான பெரிய யூடியூப் சேனல்கள் ஏன் இணையதளத்தை தனக்கென ஒன்று கட்டாயம் உருவாக்கி வைத்திருக்கிறார்கள் என்று.

பெரும்பாலும் பெரிய யூடியூப் சேனல்கள் அப்ளியகேட் மார்க்கெட்டிங் தங்களது இணையதளத்தில் இணைத்து வைத்திருப்பார்கள்.

ஏனென்றால் மேலே குறிப்பிட்டது போல் அந்த இணையதளத்தில் அதிக வருமானம், கிடைக்கும் கமிசன் கிடைக்கும் அதன்மூலம் யூடியூப் சேனலுக்கு அதிகமான பார்வையாளர்களை பெற்றுக்கொள்ள முடியும்.

எனவே பிளாக்கரை விட வேர்ட்பிரஸ் வெப்சைட் ஒரு அதிகமான பலனைக் கொடுக்கக் கூடியது இருந்தாலும் தற்போது Blogger -ம்  வெப்சைட்டுக்கு இணையாக நிறைய அப்டேட்களை கொண்டு வந்துள்ளனர்.

பணம் செலவு செய்து உங்களால் இணையதளத்தை உருவாக்க முடியவில்லை என்றால், தொடக்க நிலையில் இருக்கும் அனைவருக்கும் பயன்படக்கூடியது பிளாகர் இணையதளம். 
இதை நீங்கள் முழு வதுமாக இலவசமாக பயன்படுத்தி கொள்ள முடியும்.

மேலும் ஒரு முக்கியமான குறிப்பை சொல்ல விரும்புகிறேன்:
 யூடியூப் சேனல் ஆக இருந்தாலும் சரி, இணையதளமாக இருந்தாலும் சரி, எந்த ஒரு தளத்திலும் உடனே நமக்கு அதிகமான வருமானமும், உடனே பணமோ கிடைத்து விடாது.

அதற்கான உழைப்பை நாம் கொடுக்கும் பட்சத்தில் அதை சரியான வழியில் பயன்படுத்திக் கொண்டால் கண்டிப்பாக பலன் கிடைக்கும்.

சில நண்பர்கள் யூடியூப் சேனலை மட்டுமே தொடங்கி வைத்துக்கொண்டு எனக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை என்று புலம்புகிறார்கள்.

 சில நண்பர்கள் இணையதளம் பற்றி அதிகமான தகவல் தெரியாமல் தொடங்கி விட்டு அதில் எப்படி பணம் சம்பாதித்துக் கொள்வது என்று தெரியாமல் குழம்பி நிற்கிறார்கள்.

இது போல இல்லாமல் முழுமையான தகவலை தெரிந்து கொண்டு மேலே நான் குறிப்பிட்டுள்ளது போல்,
 யூடியூப் சேனல் மூலமாக இணையதளத்தையும் இணையதளத்தின் மூலம் யூடியூப் சேனலை வளர்த்துக்கொள்ள  முயற்சி செய்யுங்கள்.

அதிலும் Product Review மற்றும் அப்பிளிகேட் மார்க்கெட்டிங் இதுபோன்ற தளத்தையும் உங்கள் தளத்தில் இணைத்துக் கொண்டு உங்களால் அதிகப்படியான வருமானத்தை எளிமையாக பெற்றுக்கொள்ள முடியும். 

அதற்கு தகுந்த முறையில் நாம் வேலை செய்வதன் மூலம் அதிகமான பணம் குறுகிய காலத்தில் சம்பாதித்துக் கொள்ள முடியும் என்பதே உண்மையான விஷயம்.

இதுபோன்ற விஷயங்களை கண்டிப்பாக உங்களுக்கு யாரும் சொல்லிக் கொடுத்திருக்க மாட்டார்கள்.

இந்த வழிகளில் உங்களது உழைப்பை செலுத்துங்கள் கண்டிப்பாக பலன் கிடைக்கும்.

எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் ஹார்டுவொர்க் பண்ணாமல் ஸ்மார்ட் வொர்க் செய்தால் கண்டிப்பாக அதிகமான உளைச்சல் இல்லாமல் உழைப்பிற்கேற்ற பலனை விரைவில் அடைய முடியும்.

ஒரே ஒரு தளத்தை மட்டும் பிடித்துக் கொண்டு ஒரே ஒரு இடத்தில் மட்டும் பிடித்துக் கொண்டு அதில் முழுவதுமாக உழைப்பை செலுத்தி பலன் கிடைக்காமல் போவதற்கு பதில்;

ஒரு தளத்தின் மூலம் இன்னொரு தளத்தையும் இன்னொரு இடத்தின் மூலம் மற்றோரு இடத்திலும்,
நமது உழைப்பை நாம் சொந்தமாக விளம்பரப்படுத்திக் கொள்வதன் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்துவதன் மூலமும் அதிகமான பலன் விரைவில் கண்டிப்பாக பெற முடியும்.

இதுபோன்ற பதிவுகள் அடுத்தடுத்து பார்க்கலாம் பிளாக்கர் பற்றி தனி கட்டுரைகளும் வேர்ட்பிரஸ் இணையதளத்தை பற்றி தனிப்பட்ட வகையிலும் அடுத்தடுத்து வரும் நமது பதிவில் பார்க்கலாம்.

உங்களுக்கு மேலும் இதில் எதைப்பற்றியாவது தனிப்பட்ட கட்டுரைகள் தேவைப்பட்டால் கமெண்டில் குறிப்பிடலாம்.