How to Earn Extra More Money on YouTube Other 12 Ways

KrishSel All in All

How to Earn More Money on YouTube Other 12 Ways

12 way to make money from YouTube:

யூடியுப் மூலம் 12 வழிகளில் பணம் சம்பாதித்துக் கொள்ள முடியும் அந்த வழிகள் என்ன என்பதைப் பற்றி தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

Earn money from YouTube Other 12 Ways

பொதுவாக யூடியூப்பில் பணம் சம்பாதித்துக் கொள்வது எப்படி என்றால் வீடியோ அப்லோட் செய்து அதன் மூலம் பணம் சம்பாதித்துக் கொள்ள முடியும் என்பது மட்டுமே அனைவரும் அடிப்படையாக தெரிந்து வைத்திருக்கும் தகவல். 

இதை தவிர்த்து மற்ற பல வழிகளில் யூடியுப் மூலம் உங்களால் பணம் சம்பாதித்துக் கொள்ள முடியும்.

 அது என்னென்ன வழிகள் என்பதைப் பற்றி தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

1. Get money from Ads:

யூடியூபில் வீடியோ அப்லோட் செய்வது அதில் விளம்பரங்கள் வாங்கிக்கொண்டு விளம்பரங்கள் காட்டப்படுவது மூலம் பணம் சம்பாதித்துக் கொள்ளும் அடிப்படை முறை.

2. Sponsorship:

Earn money From Sponsorship with YouTube

ஸ்பான்சர்ஷிப் யூட்யூப் தரப்பில் இருந்து கொடுக்கப்படும் வழிகள் அல்லாமல் வெளியில் இருந்து நாம் பெற்றுக் கொள்ளும் பணம் சம்பாதிக்கும் முறைகளில் இதுவும் ஒன்று.

ஸ்பான்சர்ஷிப் என்பது ஒரு நிறுவனம் ஒரு இலாப நோக்கற்ற நிகழ்வு அல்லது திட்டத்திற்கு குறிப்பிட்ட விளம்பர நன்மைகளுக்கு ஈடாக பணம் அல்லது வளங்களை செலுத்துவது. அதன் மையத்தில், ஸ்பான்சர்ஷிப் என்பது சேவைகளுக்கான பண பரிமாற்றம் ஆகும்.

இந்த முறை அனைவரும் அறிந்திருக்கலாம் ஆனால் ஸ்பான்சர்ஷிப் என்பது அனைத்து சேனலுக்கும் கிடைத்துவிடாது.

இதற்கு உங்கள் சேனலில் குறிப்பிட்ட அளவு பார்வையாளர்களை கண்டிப்பாக நீங்கள் பெற்றிருக்க வேண்டும்.

ஆனால் சப்ஸ்கிரிபர் என்பது ஒரு முக்கியமானதாக இல்லை என்றாலும் பெரிய  யூடியூப் சேனலுக்கு (Subscribers + Views) தான் அதிகப்படியான பெரிய அளவிலான ஸ்பான்சர்ஷிப் கிடைக்கும்.

இந்த முறையில் பணம் சம்பாதித்துக் கொள்ள உங்களுடைய சேனலுக்கு  Monetization கிடைத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

எனவே இந்த வழிகளிலும் யூடியூப் சேனலில் பணம் சம்பாதித்துக் கொள்ள முடியும். இந்த முறையை பயன்படுத்தி பெரிய யூடியூப் சேனல்கள் அதிகபடியான பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

3. Affiliate Marketing:

Earn Money From Affiliate marking with YouTube

ஒரு நிறுவனத்தின் பொருட்களை உங்கள் யூடியூப் சேனல் மூலம் Promote அல்லது Review செய்து அதை மற்றவர்களும் (உங்கள் பார்வையாளர்கள்) வாங்குவதன் மூலம் ஒரு குறிப்பிட்ட பங்கு பணம் (அதாவது கமிஷன்) பெற்றுக் கொள்ள முடியும்.

இதற்கு முதலில் அந்த குறிப்பிட்ட நிறுவனத்தில் Affiliate Account உருவாக்கி கொண்டு.

பிறகு அதன் மூலம் கிடைக்கும் Link-ஐ உங்கள் யூடியூப் சேனலில் பயன்படுத்தி இந்த Affiliate முறையில் பணம் சம்பாதித்துக் கொள்ள முடியும். 

எனவே இந்த முறை Sponsorship, Products Review இவற்றுடன் தொடர்பு உடையதாக உள்ளது.

இந்த முறைக்கும் உங்களுடைய சேனலுக்கு Monetization கிடைத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

4. Products Review:

Earn money From Products Review with YouTube

Products Review மூலமும் யூட்யூபில் அதிகப்படியான பணம் சம்பாதித்துக் கொள்ள முடியும்.

இந்த முறைக்கும் உங்களுடைய சேனலுக்கு Monetization கிடைத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை

எந்த சேனல்கள் வேணாலும் பொருள்களை தனது சொந்த பணத்தை செலவு செய்து வாங்கி ரிவ்வியூ செய்யலாம்.

ஆனால் இவ்வாறு செய்யும்பொழுது அதற்கான பணம் என்பது உங்களுக்கு தனிப்பட்ட முறையில் கிடைக்காது.

ஆனால் ஒரு தனிப்பட்ட நிறுவனம் தானாக  முன்வந்து தனது நிறுவனத்திற்கான ஏதோ ஒரு பொருளை உங்களது சேனலில் ரிவ்யூ செய்ய சொல்லி கொடுக்கிறார்கள் என்றால் அந்த பொருளை Review செய்வதற்கான பணமும் கிடைக்கும் அதே வேளையில் அந்த வீடியோவிற்கான பணம் உங்களுக்கு வந்து விடும்.

அதேபோல் அந்த பொருளின் வாங்குவதற்கான லிங்கை உங்களது சேனலின் வீடியோவில் கொடுப்பதன் மூலம் அந்த லிங்கை க்ளிக் செய்து உங்களுடைய பார்வையாளர்கள் அந்த பொருளை வாங்கினால் அதன் மூலம் உங்களுக்கு குறிப்பிட்ட பங்கு கிடைக்கும் அதாவது கமிஷன் கிடைக்கும்.

எனவே இந்த முறையும் Sponsorship, Affiliate Marketing இவற்றுடன் தொடர்பு உடையதாக இருக்கும்.

5. Merchandise:

Earn money From Merchandise with YouTube

*YouTube Merchandise:

Merchandise என்பது வணிகம்,விற்பனைப் பொருள்கள்; வணிகச் சரக்கு.

வாடிக்கையாளர் உங்கள் கடையில் வந்தவுடன் உங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தவும் விற்கவும் நீங்கள் செய்யும் அனைத்தும் வணிகமயமாக்கல் ஆகும்.

யூடியூப் merchandise என்பது யூட்யூப் தரப்பிலிருந்து கொடுக்கப்படும் சில நிறுவனங்களின் மூலம் உங்களுடைய சொந்த design ல் உருவாக்கத்தில் கொண்டுவரப்பட்ட சில Products  டீ-சர்ட், டீ-மக் போன்ற பொருள்களை ஒரு கடை போல் உருவாக்கி கொள்ளலாம்.

பிறகு உங்களது யூடியூப் சேனல் மூலமாக அதனை விற்பனை செய்து கொடுப்பதே அதுபோல் விற்பனை செய்யும் பொழுது அதில் உங்களுக்கு குறிப்பிட்ட பங்கு கிடைக்கும் அதாவது கமிஷன் கிடைக்கும். 

இந்த அமைப்புகள் முழுவதும் யூட்யூப் சேனல் மூலமாகவே கொடுக்கப்படும். இதில் வரும் கமிஷன் பணமும் யூடியூப் தரப்பில் இருந்து எடுத்துக் கொண்டு பிறகு நமக்கு ஒரு பங்கு தரப்படும்.

ஆனால் எந்த அளவு உங்களுக்கு அதில் கமிஷன் கிடைக்க வேண்டும் என்ற அமைப்பை நீங்களே அமைத்துக் கொள்ளலாம்.

ஒவ்வொரு பொருளுக்கும் தனிப்பட்ட முறையில் விலையை மதிப்பிடும் போது உங்களுக்கான கமிஷனை நீங்கள் தேர்வு செய்து அதில் வைத்துக் கொள்ளலாம்.

6. Third-party Merchandise:

இந்த Third-party Merchandise என்பது யூடியூப் தரப்பிலிருந்து கொடுக்கப்படாமல் நாமாகவே தனிப்பட்ட முறையில் தனிப்பட்ட நிறுவனங்களில் நமக்கு என்று ஒரு தனிப்பட்ட Merchandise ஆக்கவுண்ட் உருவாக்கிக் கொண்டு.

அந்த இணையத்தில் நமக்கு என்ன முழு அமைப்புகளும் செய்துகொண்டு அதாவது Merchandise கடையை அமைத்துக் கொண்ட பிறகு.

அந்த இணையத்தின் நமது Merchandise கடைக்கான promotion நமது சேனல் மூலம் செய்வதனால் அதிகமான வாடிக்கையாளர்களை அந்த பொருளை வாங்க வைப்பதன் மூலம் பணத்தை சம்பாதித்துக் கொள்ள முடியும்.

இதுபோல் தனிப்பட்ட Merchandise -ல் யூடியூப் க்கு எந்த ஒரு பங்கும் கிடைக்காது முழுவதும் நமக்கு தான் கிடைக்கும்.

7. Paid Promotion:

Earn money From Paid Promotion with YouTube

Paid Promotion இதில் Sponsorship,product placement இது போன்றவைகள் யூடியூப் தரப்பில் அனுமதிக்கப்படும் Promotions.

இதுபோல் பெற்று மோஷன் செய்வதன் மூலமும் பணம் சம்பாதித்துக் கொள்ள முடியும்.

மற்றும் தனிப்பட்ட முறையிலும் மற்ற யூடியூப் Channel புரமோட் செய்வதற்கும் பணம் பெற்றுக்கொண்டு செய்து தரப்படுகிறது.

8. Own Promotion:

உங்களின் மற்றொரு யூடியூப் சேனல்கள் இருந்தாலும் இந்த Promote Option மூலமாக உங்களின் மற்ற சேனல்களையும் நீங்களே புரமோட் செய்துக்கொள்ள முடியும்.

இதை தவிர சிறு சிறு தொழில் செய்பவர்கள் தங்களது தொழிலை மேம்படுத்தி கொள்ள இது போன்று யூடியூப் சேனல்களில் Promote செய்தும் தங்களின் தொழிலிலை மேம்படுத்திக் கொள்கின்றனர்.

அதற்கான குறிப்பிட்ட பணத்தை அந்த சேனலுக்கு கொடுக்கின்றனர் எனவே இது போன்ற புரமோஷன் செய்வதிலும் பணம் கிடைக்கிறது.

9. Super Chat / Stickers:

சூப்பர் ஸ்டிக்கர் சூப்பர் ஷாட் என்பது யூட்யூப் தளத்தில் இருந்து கொடுக்கப்படும் ஒரு ஒரு சிறப்பு அம்சமாகும்.

 இது Monetization கிடைத்த சேனல்கள் லைவ் ஸ்ட்ரீமிங் (Live Streaming) செய்யும்பொழுது மற்ற சேனல்கள் அவர்களின் கேள்விகள் தனித்து தெரிவித்து பதில் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக பணம் செலுத்தி கேள்விகள் கேட்டுக்கொள்ளலாம்.

இதை  இவ்வாறாக பயன்படுத்தாமல் ஒரு குறிப்பிட்ட சேனல் பிடித்திருந்தால் அவர்களுக்கு சூப்பர் சாட் (Super chat ) மூலம் அல்லது சூப்பர் ஸ்டிக்கர்ஸ் (super stickers) மூலமாக பணம் கொடுப்பார்கள் இது போலவே இப்போது பெரும்பாலும் நடக்கிறது.

இந்த முறைகளிலும் நாம் பணம் சம்பாதித்துக் கொள்ள முடியும்.

இந்த முறைகளிலும் யூடியூப் தனக்கென ஒரு பங்கை எடுத்துக் கொண்டு பிறகு தான் நமக்கான பணத்தை கொடுப்பார்கள்.

10. Crowdfunding:

Get money From Crowdfunding with YouTube

Crowdfunding என்பது ஒரு பெரிய எண்ணிக்கையிலான மக்களிடமிருந்து சிறிய அளவிலான அல்லது ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை திரட்டுவதன் மூலம் ஒரு திட்டத்திற்கு அல்லது துணிகரத்திற்கு , (துணிந்து முயற்சி செய்யும் ஒரு நல்ல காரியத்திற்கு)

பொதுவாக இணையம் வழியாக நிதியளிக்கும் நடைமுறை ஆகும்.

இந்த முறையின் மூலமும் யூடியூப் சேனல் மூலமாக பணத்தை சம்பாதித்துக் கொள்ள முடியும்.

இதை சம்பாதித்துக் கொள்ள முடியும் என்று சொல்வதைவிட மக்களிடமிருந்து உதவியாக பெற்றுக்கொண்டு அந்த பணத்தை வைத்து உங்களுக்கு தேவையான விஷயங்களை செய்து கொள்ள முடியும்.

இதை என்ன செய்யப்போகிறீர்கள் எதற்காக என்பதை எல்லாம் மக்களிடம் தெரிவித்து உதவியாக நீங்கள் பெற்றுக்கொள்ளமுடியும்.

அது திருப்பிக் கொடுப்பதாகவும் இருக்கலாம் அல்லது வெறும் உதவியாக மட்டும் பெறுவதாகவும் இருக்கலாம்.

11. Promote Own Business:

Earn Money From Promote your Own Business with YouTube

யூடியூப் சேனல் வைத்திருக்கும் அனைவரும் தனக்கென ஒரு சொந்த தொழில் இருந்தால் அதில் கண்டிப்பாக மிக எளிமையாக யூடியூப் சேனல் மூலமாக விரைவில் மேம்படுத்திக்கொள்ள முடியும்.

அதேபோல் உங்களது தொழில் மூலம் யூடியூப் சேனலையும் மிக அழகாக விரைவில் அதையே சந்தாதாரர்களை பெற்றுக் கொண்டு பணம் சம்பாதிக்க தகுதியானவர்களாக மாற்றிக்கொள்ள முடியும்.

எனவே யூடியூப் சேனல் மூலமாக உங்கள் தொழிலையும் தொழிலின் மூலம் உங்களது விசாரணையும் இரண்டு வழிகளில் மிக விரைவாகவே மேம்படுத்திக் கொண்டு பணம் சம்பாதித்துக் கொள்ள முடியும்.

இன்றைய சூழலில் சாதாரணமாக ஒரு தொழில் தொடங்கினால் அதற்கு விளம்பரம் என்பது நிச்சயமாக தேவையான ஒன்று.

அப்படி விளம்பரப்படுத்திக் கொள்ள வேண்டுமென்றால் சோசியல் மீடியா என்பது மிகவும் உதவிகரமாக இருக்கும்.

இப்போது சூழலில் தனது சொந்த தொழிலில் மேம்படுத்திக் கொள்ள பெரிய தொழில் செய்பவர்கள் அனைவரும் கண்டிப்பாக தனக்கென ஒரு இணையதளத்தை உருவாக்கி அதன் மூலம் தங்களது தொழிலை மேம்படுத்தி கொள்வார்கள்.

இணைய தளத்தில் விளம்பரப் படுத்திக் கொள்வார்கள் அல்லது தொலைக்காட்சியில் தங்களது தொழிலுக்கான விளம்பரம் கொடுத்து அதன் மூலம் தங்கள் தொழிலை அல்லது நிறுவனத்தை மேம்படுத்திக் கொள்வார்கள்.

ஆனால் சிறு அளவில் தொழில் செய்பவர்கள் சொந்த தொழில் செய்யும் தனிப்பட்ட நபர்களுக்கு அதிக அளவில் பணம் கொடுத்து விளம்பரப்படுத்தவும் அல்லது தனக்கென்று ஒரு இணையதளத்தை உருவாக்கி கொள்ளவும் முடியாது.

ஏனென்றால் தொலைக்காட்சியில் விளம்பரப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றால் அதிகமான பணம் தேவைப்படும்.

சாதாரணமாக ஒரு சிறிய அளவிலான இணையதளத்தை உருவாக்கி கொள்ள வேண்டுமென்றாலும் அடிப்படையாக ஒரு இரண்டாயிரம் ரூபாய் இல்லாமல் இணையதளத்தை உருவாக்கிக்கொள்ள முடியாது.

ஆனால் யூட்யூப் சேனல் தொடங்க எந்த ஒரு ரூபாய் கூட செலவு இல்லை. 

Internet செலவு மட்டுமே அதுவும் நாம் வழக்கமாக மொபைல் உபயோகத்திற்கு பயன்படுத்தும் இன்டர்நெட்டை பயன்படுத்தினால் போதுமானது.

யூடியூப் சேனல் தொடங்கி கொண்டு அதன் மூலம் உங்களது தொழிலை மிக விரைவிலேயே உங்களால் மேம்படுத்திக்கொள்ள முடியும்.

இன்னும் சொல்லப்போனால் இணைய தளதை விட யூடியூப் சேனல் மிக விரைவிலேயே உங்களது தொழிலை மேம்படுத்த அதிக வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்க்கும்.

காரணம் இணையதளத்தில் தேடி சென்று ஒரு தொழில் பற்றிய விவரங்களை கண்டறியும் மக்களைவிட யூடியூப் சேனல் பயன்படுத்தும் மக்கள் அதிகமாக இருக்கின்றனர் இன்றைய சூழ்நிலையில்.

எனவே யூடியூப் சேனல் உங்களுடைய தனிப்பட்ட சிறு அளவிலான தொழிலாக இருந்தாலும் சரி பெரிய அளவிலான தொழிலாக இருந்தாலும் சரி,

 உங்களது தொழிலை மேம்படுத்தி கொள்ள யூடியூப் சேனல் மிகவும் அதிகமான பங்கை கொடுக்கும்.

மிக விரைவிலேயே உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொண்டுவந்து தரும் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை.

அதை நீங்க என்ற அளவில் பயன்படுத்திக் கொள்கிறீர்கள் என்பதை பொருத்து உங்களுக்கு மிக மிக விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

இவ்வாறு தொழில் மேம்படுத்திக் கொள்வதன் மூலம் அதிக வாடிக்கையாளர்கள் பெற்று அதிக வருமானம் பெற்றுக்கொள்ள முடியும்.

அதிக வாடிக்கையாளர்கள் வந்து விட்டாள் கண்டிப்பாக உங்களது 

யூடியூப் சேனலிலும் அதிகமான பார்வையாளர்களை நீங்கள் பெற்றிருப்பீர்கள் அப்போது உங்கள் யூடியூப் சேனல்கள்  மூலமாகவும் பணம் சம்பாதித்துக் கொள்ள முடியும்.

12. Promote Website and Blogger:

Earn Money From Promote your Own Website and Blogger Sites with YouTube

உங்களது தொழிலை எப்படி YouTube channel மூலமாக மேம்படுத்திக் கொள்ள முடியுமோ,

 அதே போல உங்களுடைய தனிப்பட்ட வெப்சைட், பிளாக்கர் இணையத் தளத்தயும் யூடியூப் சேனல் மூலமாக Promote செய்து கொள்ள முடியும்.

அதன் மூலம் அதிகமான வாடிக்கையாளர்களை அல்லது பார்வையாளர்களை பெற்று அதிலும் பணம் சம்பாதித்துக் கொள்ள முடியும்.

நாம் இந்த பதிவில் குறிப்பிட்டுள்ள வழிகளை தவிர்த்து இன்னும் சில வழிகளிலும் பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கலாம். 

அது நாம் பயன்படுத்திக் கொள்ளும் முறையை பொருத்தும் நமக்கு கிடைக்கும் வாய்ப்பை பொருத்தும் இருக்கும்.

கண்டிப்பாக இதை தெரிந்து கொள்ளுங்கள்