YouTube Channel Sales Fraud be Alert
யூடியூப் சேனல் விற்கும் அல்லது வாங்கலாம் என்று இருப்பவர்கள் கவனிக்க முக்கியமான தகவல்கள்.
இவற்றையெல்லாம் கவனிக்காமல் உங்களுடைய சேனலை விற்கவோ வாங்கவோ செய்யாதீர்கள்.
யூடியூப் சேனலை விற்க/வாங்குவதற்கு முன் உங்களின் சேனல் எந்த நிலையில் உள்ளது என்பதை கவனித்து பிறகு விற்கவோ/வாங்கவோ செய்ய வேண்டும்.
கீழே நாம் குறிப்பிட்டிருக்கும் அடிப்படை தகவல்களை சோதித்து பார்த்துக் கொண்டு பிறகு உங்களின் சேனல் எந்த விலைக்கு விற்கலாம் அல்லது என்ன விலைக்கு வாங்கலாம் என்பதை முடிவு செய்யுங்கள்.
பொதுவாக யூடிபில் பணம் சம்பாதிக்கவே தற்போது அதிகமான வேர் சேனலை தொடங்குகிறோம் இவ்வாறு இருக்கையில் இன்றைய சூழ்நிலையில் ஒரு சேனலை தொடங்கி அதில் வருமானத்தை எடுக்க வேண்டும் என்றால் ரொம்பவே சிரமமான விஷயம்தான்.
அதற்கு முதலில் பணம் சம்பாதிப்பதற்கு தகுதியான $ Monetization கிடைப்பதற்கு அதிக நாட்கள் எடுத்து கொள்கின்றன.
1000 Subscribers, 4000 watching hours கொண்டு வருவதற்கு மிகவும் சிரமமாக இருக்கிறது.
எனவேதான் சிலர் ஒரு யூடியூப் சேனலை தொடங்கி அதில் இந்த monetization தகுதிகளை அடைந்து அதற்கு பின் பணம் சம்பாதிப்பதற்கு பதில் ஒரு குறிப்பிட்ட பணத்தை கொடுத்து நேரடியாக Monetization பெற்ற ஒரு சேனலை வாங்கிவிடலாம் என நினைக்கிறார்கள்.
இவ்வாறு சேனலை வாங்கவோ விற்கவோ நினைக்கிறீர்கள் என்றால் முக்கியமாக சிலவற்றை இங்கு கவனிக்க வேண்டியது உள்ளது அவற்றை பார்க்கலாம்.
சேனலை விற்கலாம் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை.
உங்கள் சேனல் வாங்க வருபவர்கள் உண்மையான ஆளா, உண்மையாக சேனல் வாங்கதான் நினைக்கிறார்களா என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
ஏனென்றால் சேனல் வாங்குவதாக சொல்லி உங்கள் சேனலை Hack செய்து அவர்களின் பெயரில் மாற்றி விடலாம்.
அதன் பிறகு உங்களின் சேனலை மீட்டு எடுப்பது மிகவும் கடினமானது.
எனவே முதலில் சேனல் வாங்க வருபவர்களை உண்மையான ஆளாக தேர்வு செய்வது உறுதி படுத்திக் கொள்ளுங்கள்.
அடுத்தது கவணிக்க வேண்டி விஷயங்கள்.
சேனல் விற்பனை விலை எப்படி முடிவு செய்வது:
உங்கள் சேனல் எந்த விலைக்கு விற்றால் சரியானதாக இருக்கும்.
சேலையின் விலை பொதுவாக ஒரே மதிப்பீட்டில் மதிப்பிட முடியாது ஒவ்வொரு சேனலுக்கும் உள்ள தகுதியை பொருத்து இருக்கும் நிலை பொருத்து விலையை மதிப்பீடு செய்துகொள்ள வேண்டும்.
அவை:
👉சேனலின் Subscribers
👉Copyright Strike
👉Copyright Claim
👉Avarage views
👉 Monetization
👉Avarage Traffic
👉Adsense Connect
👉 Adsense CTR issue
👉Monthly income
மேலே கொடுக்கப்பட்டுள்ள வற்றை உங்களது சேனலில் சரியாக சோதித்த பிறகு இதன் அடிப்படையில் உங்கள் சேனல் எந்த நிலையில் உள்ளது என்பதைப் பொருத்து சேனலின் விலை மதிப்பை நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம்.
*மேலே உள்ளவற்றில் அனைத்தும் சரியான முறையில் இருக்கிறது.
*அதிகமான வருமானமும் மாதந்தோறும் வருகிறது.
இந்த நிலையில் நீங்கள் சேனலை விற்கும் நிலையில் உள்ளீர்கள் என்றால் கண்டிப்பாக அதிகமான விலை மதிப்பை வைத்து நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
இதற்கு குறைவான விலையில் கொடுத்தால் அவர்களும் அது உங்களுக்கு முற்றிலும் நஷ்டத்தை உண்டாக்கும் உங்களது இதுவரையிலான உழைப்புக்கேற்ற பணம் கிடைக்காமல் போகும்.
இதை தவிர்த்து மாதந்தோறும் ஒரு குறைவான வருமானமே வருகிறது என்றால் அதற்கு ஏற்ற வகையில் உங்களது சேனலில் விலை மதிப்பை நீங்கள் முடிவு செய்து அந்த விலையில் பெற்றுக் கொள்ளலாம்.
அதேபோல நீங்கள் சேனலை விற்கும் பொழுது கூகுள் ஆட்சென்ஸ் அக்கௌன்ட் உடன் சேர்த்து விற்பனை செய்கிறார்களா அல்லது யூடியூப் சேனலை மட்டும் விற்பனை செய்கிறார்களா என்பதைப் பொருத்தும் விற்பனை பணத்தை முடிவு செய்து கொள்ளுங்கள்.
அடுத்து கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் மேலே குறிப்பிட்டுள்ளது போல் சேனலை முழுமையாக கை மாற்றும் வரை அல்லது உங்களுக்கு உண்டான பணம் உங்கள் கைக்கு கிடைக்கும் வரை சேனலின் மெயில் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் கொடுக்க வேண்டாம்.
சேனலை வாங்க நினைக்கும் நபர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்.
சேனலை விற்கும் பொழுது என்னென்ன விஷயங்களை எல்லாம் நாம் கவனிக்க வேண்டும் அதையேதான் சேனலை வாங்கும் பொழுதும் நாம் கவனித்தாக வேண்டும்.
ஒரு சேனலை நீங்கள் வாங்க இருக்கிறீர்கள் என்றால் அதற்கான பண மதிப்பை மேலே குறிப்பிட்டுள்ள வற்றை அடிப்படையில் அதற்கான விலையை நீங்கள் மதிப்பீடு செய்ய முடியும்.
அதன் அடிப்படையில் விற்கும் நபர் கூறும் பணம் அதற்கு ஏற்றதா என்பதை சோதித்துப் பார்த்து வாங்கி கொள்ளுங்கள்.
இப்ப வேலை செய்பவரை விட வாங்குவார் இன்னும் சற்று கவனமாகவே இருக்க வேண்டும் ஏனென்றால் மேலே குறிப்பிட்டுள்ளது போல் வேறு ஒருவரின் சேனலை ஹேக் செய்து கொண்டுவந்து அவர்கள் பெயருக்கு மாற்றி அதை பணத்திற்காக விற்பனை செய்யலாம்.
இதுபோல் செய்யும் பொழுது நீங்கள் ஹேக் செய்யப்பட்ட ஒரு சேனலை வாங்கி மாட்டிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.
சேனலில் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான தகவல்: Hacking
ஹேக் செய்து உங்களிடம் வெற்றி விட்டு பணத்தை வாங்கி கொண்டு அந்த நபர் சென்றுவிடுவார்கள் நீங்கள் வாங்கிய சேனல் அதனுடைய உண்மையான ஓனர் யூடியூப்பில் முறையிட்டு அதை திரும்பப் பெற்றுக் கொண்டால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
அதே சமயம் நீங்கள் கொடுத்த பணமும் வீணாகப் போகும் நிலை வந்துவிடும்.
அதேபோல உண்மையான சேனலாக இருந்தாலும் சேனலில் ஏதேனும் காப்பிரைட் இருக்கும் பட்சத்தில் அல்லது சரியாக நியூஸ் வராத காரணத்தினாலும் அல்லது அதிகமான வருமானம் வரவில்லை என்ற இதுபோன்ற காரணங்களால் சேனலை விற்கலாம்.
ஏனென்றால் நன்றாக வருமானம் வரும் சேனலை அதிகபட்சமாக எந்த ஒரு நபரும் விற்க முன்வரமாட்டார்கள்.
சேனலில் உள்ள பிரச்சினை:
எனவே இது போல சேனல் ஏதேனும் பிரச்சனை இருந்தால் மட்டுமே விற்பதற்கு அதிகமாக கொண்டு வருவார்கள் இந்த நிலையில் நாம் சேனலை சோதிக்காமல் எந்த நிலையில் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளாமல் அவர்கள் குறிப்பிடும் பணத்தை கொடுத்து வாங்கி விடக்கூடாது.
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து விஷயங்களையும் சோதித்து பார்த்து பிறகுதான் இந்த சேனலுக்கு எவ்வளவு பணம் கொடுத்தால் உரியதாக இருக்கும் அடுத்து அந்த சேனல் மூலம் நமக்கு வருமானம் வருமா அந்த சேனல் மூலம் அடுத்து எந்த பிரச்சனையும் வராமல் இருக்குமா என்பதை எல்லாம் ஆராய்ந்த பிறகே சேனல் வாங்க ஒப்புக் கொள்ள வேண்டும்.
பணம் எப்போது கொடுக்க வேண்டும்:
அதேபோல சேனலை விற்பவர்கள் எப்படி கைக்கு பணம் வந்தபிறகு சேனலில் முழு உரிமையும் அவருக்கு மாற்றி கொடுக்க வேண்டுமோ அதே போல சேனல் வாங்குபவரும் விற்பவரிடம் முழுமையான நம்பிக்கை வந்தபிறகும் உங்கள் கைக்கு சேனலை முழுமையாக மாற்றி கொடுக்கும் நிலை வந்த பிறகுதான் பணத்தை கொடுக்க வேண்டும் முன்பாகவே பணத்தை கொடுத்து ஏமாந்து விடாதீர்கள்.
ஏனென்றால் சேனலை இல்லாத நபர் கூட என்னிடம் சேனல் இருக்கிறது என்று சொல்லி யூட்யூபில் இருக்கும் ஏதோ ஒரு சேனலில் ஸ்கிரீன்ஷாட் உங்களுக்கு அனுப்பி வைத்து இது என்னுடைய சேனல் இதைத்தான் நான் விற்க உள்ளேன் என்று கூறி நம்ப வைக்கலாம்.
சேனலை விற்கும் நபராக இருந்தாலும் சரி வாங்குபவராக இருந்தாலும் சரி முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் சேனல் மெயில் ஐடி மற்றும் பாஸ்வேர்டை முழுவதுமாக நம்பிக்கை வரும் வரை, சரியான நபர் தான் என்று உறுதி செய்யும் வரை கொடுக்கக்கூடாது.
விற்பனைக்கு தொடர்பு கொள்வதில் கவனம்: தொலைபேசி எண்
அதேபோல் சேனலை விற்கவாங்க தொடர்பு கொண்டு பேச வேண்டும் அது சம்பந்தமான கேள்விகள் கேட்க வேண்டும் என்று கூறி தொலைபேசி எண் கேட்பார்கள் அதிலும் கவனமாக இருக்க வேண்டும். உங்களுடன் இணைப்பு உள்ள தொலைபேசி எண்ணை கொடுத்து விடாதீர்கள் அதன் மூலமாகவும் உங்கள் சேனலை ஹேக் செய்யவோ அல்லது டிரேஸ் செய்யவும் முயற்சிக்கலாம்.
இந்தப் இந்த பதிவு போட முக்கியமான காரணம் நம்முடைய சேனலின் ஒருவருடைய சேனலும் இதேபோல ஹேக் செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் சேனல் விற்பனை என்ற பெயரில் நிறைய மோசடிகள் நடந்து உள்ளன.
நண்பர்கள் போல ஏமாற்றம்:
நம்மிடமே நண்பர் போல் பேசி உங்களைப்போல் சேனலை நானும் உருவாக்க வேண்டும் சாதிக்க வேண்டும் என்று கூறி நமது மனதை மாற்றி நம்மிடமிருந்தே சேனலின் மெயில் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் நாமே கொடுப்பது போல் செய்து விடுவார்கள்.
அதன் மூலம் அவர்கள் நமது சேனலை அவர்களின் பெயருக்கு எளிமையாக மாற்றிவிடுவார்கள்.
பின்பு சேனலில் நமக்கு சம்பந்தப்பட்ட தொலைபேசி எண் முதலிய அனைத்து தகவவ்களையும் அவர்களின் பெயருக்கு மாற்றி விடுவார்கள். பிறகு நாம் என்ன செய்தாலும் நமது சேனலை மீட்டு எடுக்க முடியாமல் நிலைக்கு போய்விடும்.
எனிவே யூடியூப் சேனல் நடத்திக்கொண்டிருக்கும் யாராக இருந்தாலும் சரி அல்லது விற்கலாம் வாங்கலாம் என்று இருப்பவர்களும் சரி கண்டிப்பாக இந்த பதிவை முழுமையாக பார்த்துக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எதிர்காலத்தில் நீங்கள் உங்கள் சேனலை விற்கவோ வாங்கவோ செய்தால் கண்டிப்பாக இந்த விஷயங்களில் கவனித்த பிறகே சேனலை விற்கவோ வாங்கவோ செய்யுங்கள்.
அல்லது வேற காரணத்திற்காக உங்களிடம் யாராவது சேனல் மெயில் ஐடி பாஸ்வேர்ட் கேட்டால் தயவு செய்து கொடுக்க வேண்டாம்.
உங்களுக்கு மிகவும் நம்பிக்கையான நண்பர்கள் உறவினர்கள் இருந்தால் மட்டும் அவசியமான முறையில் மட்டும் கொடுங்கள்.
மற்றும் 👉முக்கியமான தகவல்: யூடியூப் தரப்பிலிருந்து எப்போதும் சேனல் மெயில் ஐடி பாஸ்வேர்ட் கேட்கமாட்டார்கள்.
இந்த பதிவு கண்டிப்பாக அனைத்து வீடுகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.
மேலும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கமெண்டில் தெரிவு படுத்தலாம் அல்லது நமது Krish Tech Tamil யூடியூப் சேனலில் உங்களது சந்தேகங்களை கேட்டுக் கொள்ளலாம்.
மேலும் இந்தப் பதிவை படிக்கும் நபர்களில் யாராவது இதுபோல் பாதிக்கப்பட்டிருந்தால், நான் குறிப்பிடாத ஏதோ ஒரு முறையில் உங்களை அல்லது உங்கள் சேனலை ஏமாற்றி பெற்றிருந்தால் அதை கீழே குறிப்பிடுங்கள் மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.