How to Select YouTube Channel Name in Tamil - Before Select Names Note this Points

KrishSel All in All

Note This Important Points Before Select YouTube Channel Names

உங்களுடைய யூடியூப் சேனலுக்கு பெயர்  தேர்வு செய்து வைப்பதற்கு முன்பு கண்டிப்பாக இந்த முக்கியமான விசியங்களை எல்லாம் தெரிந்து கொண்டு பிறகு தேர்வு செய்து கொள்ளுங்கள்.

How to select YouTube channel names
How to select YouTube channel names 


நீங்கள் புதிதாக யூடியூப் சேனல் தொடங்கினாலும் சரி அல்லது ஏற்கனவே தொடங்கப் பட்ட சேனலாக இருந்தாலும் சரி,

அந்த சேனலுக்கு பெயர் மாற்றம் செய்ய விரும்பினால் இந்த முக்கியமான தகவல்களை மனதில் வைத்துகொண்டு உங்கள் சேனலுக்கு பெயர் மாற்றம் செய்து கொள்ளுங்கள்.

அவை:

1.தனித்துவமான பெயர்
2.சிறிய பெயர்
3. சேனல் தொடர்புடைய பெயர்
4.எளிதாக அடையாளம் காட்டும் பெயர்
5.Custom URL தகுந்த பெயர்
6.மற்ற சமூக வலைதளங்கள்
7.யூடியூப் விதிகள் / கொள்கைகள்

1.தனித்துவமான பெயர்:

உங்களுடைய யூடியூப் சேனலுக்கு தனித்துவமான பெயரை தேர்வு செய்து மிகவும் முக்கியமான ஒன்று.
நீங்கள் தேர்வு செய்து இருக்கும் பெயரில் ஏற்கனவே மற்ற யூடியூப் சேனல்கள் இருந்தால், கண்டிப்பாக அந்த பெயரில் சேனல் தொடங்க வேண்டாம்.

இதில் மிகவும் முக்கியமானது அதிலும் ஏதேனும் பிரபலமான சேனல் இருக்கிறது என்றால் அந்த பெயரை தேர்வு செய்யவே வேண்டாம்.

இது உங்கள் சேனல் வளர்ச்சிக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
உங்களுடைய சேனல் யூடியூப் Search-ல் மேலாக வராமல் போகலாம்.

எனவே உங்கள் சேனலை பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்க மிகவும் கடினமான முயற்சிகளை போட வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தும்.

இதனால் உங்கள் யூடியூப் சேனல் உடனடி வளர்ச்சிக்கு இதுவும் பெரிய தடையாக மாறலாம்.

எனவே உங்களுக்கு என் தனித்துவமான பெயரை தேர்வு செய்வதில் கவனமாக இருங்கள்.

2.சிறிய பெயர்:

தனித்துவமான பெயர் தேர்வு செய்வது எவ்வளவு முக்கியமோ அதே போல, உங்கள் சேனல் பெயர் ஒர் இரு வார்த்தைகள் கொண்டதாக சிறிய பெயராக இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ளுங்கள்.

அப்போது தான் பார்வையாளர் / சந்தாதாரர்கள் உங்கள் சேனல் பெயரை சுலபமாக மனதில் பதிய வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.

மற்றவர்களுக்கு உங்கள் யூடியூப் சேனல் பற்றி தெரியப்படுத்த விரும்பினால் எளிதாக சொல்வார்கள்.

3.சேனல் தொடர்புடைய பெயர்

உங்களுடைய சேனலுக்கு பெயர் தேர்வு செய்வதில் நீங்கள் கவனிக்க வேண்டிய  மிகவும் முக்கியமான விசியம் இதுவும் ஒன்று.

நீங்கள் தொடங்க கூடிய சேனல் எது சம்பந்தப்பட்ட வீடியோக்கள் போட போகிறோம் என நன்கு யோசித்து முடிவு எடுத்து தான் தொடங்கி இருப்பீர்கள்.

எனவே, உங்கள் சேனலுக்கு அதற்கு சம்பந்தப்பட்ட பெயரையும் வைக்க வேண்டும் இது மிகவும் முக்கியமான ஒன்று.

அப்போது தான் பார்வையாளர்கள் யூடியூப் மற்றும் Google-ல் உங்கள் சேனல் சம்பந்தப்பட்ட ஏதேனும் ஒரு keyword போட்டு Search செய்தாலே உங்கள் சேனல் வீடியோக்கள் மற்றும் யூடியூப் சேனல் Search Result-ல் மேலே எடுத்து வரும். 

அதாவது Search Result-ல் முதல் இடத்தில் வர அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தும்.

4.எளிதாக அடையாளம் காட்டும் பெயர்:

உங்களுடைய யூடியூப் சேனலுக்கு தனித்துவமான பெயர், சிறிய அளவில் பெயர், மற்றும் சேனலுக்கு தொடர்புடைய பெயரை தேர்வு செய்யும்பொழுது- அப்படியே மக்கள் உங்கள் சேனல் பெயரை கேட்டவுடன் இது அந்த சேனல் பா..தெரியாத உனக்கு என எளிதாக அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் சொஞ்சம் மற்ற சேனல் பெயரில் இருந்து வித்தியாசமான பெயராக இருக்கும் வகையில் தேர்வு செய்யுங்கள்.

5.Custom URL தகுந்த பெயர்:

யூடியூபில் உங்கள் சேனலுக்கு ஒரு குறிப்பிட்ட Subscribers வந்தவுடன் Custom URL கொடுக்கப்படும்.

அதற்கு ஏற்ற வகையில் உங்கள் சேனல் பெயர் இருக்குமா என பார்த்து தேர்வு செய்து கொள்ளுங்கள்.

6.மற்ற சமூக வலைதளங்கள்

உங்களுடைய யூடியூப் சேனலுக்கு தொடக்கத்தில் அதிக பார்வையாளர்களை பெற்றுக் கொள்ள கண்டிப்பாக மற்ற சமூக வலைதளங்கள் உதவியாக இருக்கும்.

மற்றும் உலோகங்கள் யூடியூப் சேனல் பார்வையாளர்கள், Subscribers ஏதேனும் சந்தேகங்கள் கேட்கவும், மற்ற ஏதேனும் சேனல் சம்பந்தப்பட்ட விஷயம் பகிர்ந்து கொள்ளவும் கண்டிப்பாக நாம் Instagram, Facebook, Twitter போன்ற சமூக வலைதளங்கள் I'd கொடுக்க வேண்டிதாக இருக்கும்.

எனவே உங்கள் யூடியூப் சேனல் பெயரிலேயே மற்ற சமூக வலைதளங்கள் தொடங்குவது நல்லது.

எனவே உங்கள் யூடியூப் சேனல் பெயர் மற்ற சமூக வலை தளங்களுக்கும் ஏற்றதாக இருக்கிறாதா என ஆராய்ந்து தேர்வு செய்து கொள்ளுங்கள்.

7.யூடியூப் விதிகள் / கொள்கைகள்

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து தகவல்கள் மட்டும் இல்லாமல் யூட்யூப் உடைய Rules and Policy-க்கு தகுந்த மாதிரியும் உங்களுடைய யூடியூப் சேனல் பெயரை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

அவை:
உங்களுடைய யூடியூப் சேனலில் சிறப்பு பண்புகள் சின்னங்கள் (Text Special characteristics Symbols) இருக்கக் கூடாது.

[ உதாரணமாக: @#₹&+/✓©%  ]

முக்கியமாக ✓ verification Tick போன்ற Symbol பயன்படுத்தக் கூடாது.

மேலே குறிப்பிட்டுள்ளவற்றை தவிர்த்து  என்னுடைய பெயரிலேயே youtube சேனல் தொடங்கலாமா? அதனால் ஏதும் பிரச்சினை வருமா? என்று கேட்டால்;

தாராளமாக உங்களுடைய சொந்த பெயரிலேயே யூட்யூப் சேனல் தொடங்கலாம் அதில் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை.

ஆனால் உங்களின் பெயரிலே மற்ற யார் வேணாலும் இருக்கலாம் அவர்களும் அவருடைய பெயரில் தொடங்கினால் ஒரே பெயரில் நிறைய சேனல்கள் வந்துவிடும். 

எனவே உங்களின் சேனலை தனித்துவமாக அடையாளப்படுத்திக் கொள்வது என்பது சிரமமாகிவிடும்.

எனவே உங்களுடைய சேனல் என்ன கேட்டகிரியோ அதைப் பொறுத்து உங்களின் பெயர் + பின்னால் உங்களின் சேனல் கேட்டகிரிக்கு சம்பந்தப்பட்ட பெயர் இரண்டையும் சேர்த்து உங்களுடைய சேனலுக்கு பெயராக வைத்துக் கொள்வது நல்லது.

உதாரணமாக:

என்னுடைய youtube சேனலை எடுத்துக் கொள்வோம்.
 
Krish                              +  Tech Tamil
என்னுடைய பெயர் + Category = Krish Tech

என்னுடைய பெயர் Krish எனது சேனலில் கேட்டகிரி Tech இரண்டையும் சேர்த்து எனது சேனலுக்கு பெயராக வைத்துள்ளேன்.

இதுபோல் உங்களுடைய யூடியூப் சேனலுக்கு உங்களின் சொந்த பெயரில், சேனல் பெயரை வைக்க விரும்பினால் இதுபோல வைத்துக் கொள்வது நல்லது. 


Tags