How to Apply Adsense Account Blogger in Tamil
உங்கள் Google Blogger Website -க்கு எப்படி Adsense Apply செய்வது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
![]() |
Link Blogger to Adsense account |
பிளாக்கர் தளத்திற்கு Adsense Apply செய்ய இரண்டு வழிகள் இருக்கிறது.
1.உங்களுக்கு ஏற்கனவே Adsense Account இருந்தால் ( தற்போது அதிகபட்சமாக அனைவரும் ஒரு யூடியூப் சேனல் வைத்திருக்கிறார்கள், எனவே யூடியூப் சேனலுக்காக Adsense Account வைத்திருக்கலாம்)
அதில் உங்கள் பிளாக்கர் இணையதளத்தை இணைத்துக் கொள்ளலாம்.
2.உங்களிடம் எந்த ஒரு Adsense Account-ம் இல்லை என்றால்.
உங்களின் பிளாக்கர் இணையதளத்தில் இருந்தே புதிய Adsense Accountஐ உருவாக்கும் Option ஐ பயன்படுத்தி Adsense Accountக்கு Apply செய்து கொள்ளலாம்.
அல்லது, யூடியூப் சேனல் அல்லது மற்ற இணைய தளத்திற்கு என ஒரு Adsense Account வைத்து இருந்தாலும் அதை பயன்படுத்த விருப்பம் இல்லை என்றால்.
இந்த தளத்திற்கு என தனிப்பட்ட Adsense Account ஐ உருவாக்கிக் கொள்ள விரும்பினால்.
நாம் குறிப்பிட்டுள்ள இரண்டாவது முறையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
( ஒருவருக்கு வாழ்நாளில் ஒரு Adsense Account மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்க)
இப்போது பிளாக்கர் இணையதளத்தில் இருந்து எப்படி புதிய Adsense Account-க்கு Apply செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
How to Apply Adsense Account in Blogger:
1. உங்கள் பிளாக்கர் இணையதளத்தில் மெனு ஆப்சனை கிளிக் செய்யுங்கள்.
அதில் $ Earnings -> Option-ஐ கிளிக் செய்யவும்.
2. Create Adsense Account - Buttonஐ கிளிக் செய்யுங்கள்.
3. உங்கள் நாட்டைத் தேர்வு செய்து கொள்ளுங்கள்.
Adsense account terms and conditions க்கு Accept செய்வதற்கு. கீழே கொடுக்கப்பட்டுள்ள சிறிய குட்டி Box- ல் Tick செய்து கொள்ளுங்கள்.
அடுத்து கீழே கடைசியாக உள்ள Create Account - Button-ஐ கிளிக் செய்யுங்கள்.
4. அடுத்து Get Started - கிளிக் செய்யுங்கள்.
இப்போது Adsense Account Page திறந்து விடும். இதில் உங்கள் பெயர், முகவரி தேவைப்பட்டால் தொலைபேசி எண் முதலிய தகவல்களை உள்ளிட வேண்டும்.
அவை:
1. individual Account
2. Name and Address
உங்களின் பெயர் மற்றும் முகவரி, pincode number உடன் உள்ளிட்டு கொள்ளுங்கள்.
இதில் நீங்கள் கொடுக்கும் பெயர், உங்களின் ஏதேனும் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையில் உள்ள பெயரை கொடுத்து கொள்ளுங்கள்.
உதாரணமாக: Pan Card, deriving Licence, Voter ID
3. Sate (தமிழ்நாடு)
4. Phone Number ( தேவைப்பட்டால் கொடுத்துக் கொள்ளுங்கள், கட்டாயம் இல்லை)
*பிறகு Submit Option-ஐ கிளிக் செய்யுங்கள்.
*அடுத்து உங்கள் பிளாக்கர் இணையதளத்தில் சென்று, $ Earnings Page-ல் சென்று பாருங்கள் இன்னோரு Option, Error ஆக Show ஆகும்.
*அதில் கொடுக்கப்பட்டுள்ள உங்கள் தளத்தின் URL Code ஐ Copy செய்து கொள்ளுங்கள்.
*அடுத்து திரும்ப தற்போது Apply செய்த Adsense Account- க்கு வாருங்கள்.
இதில் மெனு ஆப்சனை கிளிக் செய்யுங்கள்.
*அடுத்து Sites Option-ஐ கிளிக் செய்யுங்கள்.
இதில் உங்கள் பிளாக்கர் தளத்தின் URL அங்கு Copy செய்ததை இங்கு Add Site Option-ல் கொடுத்துக் கொள்ளுங்கள்.
*அடுத்து Save and Continue - Optionஐ கிளிக் செய்யுங்கள்.
*அடுத்து Request Review - Optionஐ கிளிக் செய்யுங்கள்.
*இப்போது Getting ready இது போல புளு கலரில் காட்டப்படும். ( உங்கள் இணைய தளம் Review-ல் இருக்கிறது என அருத்தம்)
அடுத்து திரும்ப உங்கள் இணைய தளத்திற்கு சென்று $ Earnings Page ஐ பாருங்கள்.
*அதில், இப்போது அந்த Error Option போயி இருக்கும். அந்த இடத்தில்
-> Getting your blog ready to show ads
Your AdSense account is connected என இருக்க வேண்டும்.
இதுபோல வந்துவிட்டால் நீங்கள் சரியான முறையில் Adsense Account Apply செய்து இருக்கிறீர்கள் என உறுதி செய்து கொள்ளலாம்.
அடுத்து ஒரு முக்கியமான Settings செய்ய வேண்டும்.
உங்கள் Blogger Website Gmail -க்கு சென்று திறந்து பாருங்கள்.
*அதில் Google Adsense Payment என்ற ஒரு மெயில் வந்து இருக்கும்.
*அந்த மெயிலில் Ad Code Review Script கொடுக்கப்பட்டு இருக்கும்.
*அதை அப்படியே Copy செய்து கொள்ளுங்கள்.
*அடுத்து திரும்ப உங்கள் பிளாக்கர் இணையதளத்தில் சென்று மெனு ஆப்சனை கிளிக் செய்து அதில் Themes Option-ஐ கிளிக் செய்து கொள்ளுங்கள்.
அதில் Customise -> Edit Html Option ல் சென்று அங்கு,
<head> க்கு கீழே - மெயில் இருந்து Copy செய்து கொண்டுவந்த Ad Code Script-ஐ அப்படியே இங்கு Past செய்து -> Save செய்து கொள்ளுங்கள்.
அவ்வளவு தான் இப்போது முழுமையாக உங்கள் பிளாக்கர் இணைய தளத்திற்கு Adsense Account Apply செய்து முடித்து விட்டீர்கள்.
இப்போது Adsense Account Review ல் இருக்கும். 24 மணி நேரத்தில் இருந்து 2 வாரத்திற்குள் உங்களின் பிளாக்கர் இணைய தளத்திற்கான Adsense Account முடிவு தெரிவிக்கப்படும்.
How to Check your Adsense Account get Approval?:
உங்கள் இணைய தளம் Adsense Account Approval பெற்று விட்டால்.Get ready என புளு நிறத்தில் இதுவரை காட்டப்பட்ட, இடத்தில் Ready என பச்சை நிறத்தில் காண்பிக்கப்படும்.
அடுத்து உங்கள் பிளாக்கர் இணையதளத்தில் விளம்பரங்களும் காண்பிக்க ஆரம்பமாகி விடும்.
உங்கள் இணைய தளத்திற்கு Adsense Account Approval கிடைத்த பிறகு Adsense Account ல் உங்களுக்கு தேவையான விளம்பரங்களை சேர்த்துக் கொள்ளலாம்.
அந்த வகையில் (Automatic) Auto Ad -ஐ On செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
அப்போது தான் Adsense Account Approval கிடைத்த உடன் உங்கள் பிளாக்கர் இணையதளத்தில் விளம்பரங்கள் தானாக காண்பிக்கப்படும்.