How to Market Agricultural products Online?
விவசாய பொருட்களை ஆன்லைன் மூலம் எவ்வாறு சந்தை படுத்துவது?
ஆனால் அதற்கென பல செயலிகள் தற்சமயம் வந்திருந்தாலும் சரியான தரமான செயலிகள் எதுவும் இல்லை என்றே கூற வேண்டும்.
ஆனால் தனிப்பட்ட செயலிகள் இல்லாமல் பல வழிகளில் நம்மால் இதை சந்தை படுத்திக் கொள்ள முடியும்.
எனக்கு தெரிந்தவரை சிலவற்றை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
*முதலாவதாக சமூக வலைதளங்கள் இன்றளவில் சமூக வலைதளங்கள் இன்று அனைவரிடமும் இருக்கிறது.
எந்த செய்தியாக இருந்தாலும் அதை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து அதை ஒரு பொழுது போக்காகவே செய்து கொண்டிருக்கிறோம்.
இதை சரியான முறையில் பயன்படுத்தி அதிக பலன்களை பெற்றுக்கொண்டு இருப்பவர்களும் இருக்கிறார்கள். அதை தொழிலாக செய்து பல லட்சம், கோடி ரூபாய் சம்பாதித்துக் கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள்.
ஆனால் மக்களாகிய நாம் மட்டும் தான் அதை பொழுதுபோக்குக்காக மட்டுமே பயன்படுத்தி தேவை இல்லாமல் பொழுதையும் கழிக்கிறோம் நான் செய்ய வேண்டிய வேலைகளையும் செய்யாமல் இருக்கிறோம்.
இது போகட்டும், இதன் மூலம் எப்படி நாம் விவசாய பொருட்களை சந்தைப் படுத்தி கொள்ளலாம் என்பதை பார்க்கலாம்.
சமூக வலைதளங்கள் என்று சொன்னாலே ஆரம்ப காலங்களில் அனைவருக்கும் தெரிந்த ஒன்று *முகநூல் புத்தகம் அதாவது ஃபேஸ்புக்
இதன் மூலம் உங்களுக்கு என்ற கணக்கை உருவாக்கி அதில் விவசாய பொருட்களை சந்தைப் படுத்துவதற்காகவே தனியான ஒரு கணக்கையும் உருவாக்கலாம் அல்லது அதை தனியான ஒரு பக்கத்தையும் (Facebook page) உருவாக்கிக் கொள்ள முடியும்.
*இந்த பேஸ்புக் பேஜை
இதே போல தான் மற்ற சமூக வலைதளங்களில் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.
*Instagram
*Telegram
*YouTube
அடுத்தபடியாக முக்கியமான சமூக வலைதளம் என்றால் அது *யூடியூப் தான்.
YouTube
இதன் மூலம் உங்கள் விவசாய பொருட்களை சந்தைப் படுத்தி கொள்ளவும் முடியும்.
அதன் மூலம் உங்கள் பொருட்களை விற்பனை செய்து கொள்ளவும் முடியும் வாங்கிக் கொள்ளவும் முடியும்.
அந்த பகிர்வுகளின் மூலம் உங்களால் யூடியூபில் இருந்து பணம் சம்பாதித்துக் கொள்ளவும் முடியும்.
எனவே யூடியூபே பயன்படுத்தினால் உங்களுக்கு *ஒரே கல்லில் மூன்று மாங்காய் என்பது போல் உங்கள் பொருட்களை
1. விளம்பர படுத்திக்கொள்ள, 2. விற்பனை- வாங்குதல்,விற்றல் அனைத்தையும் செய்துகொண்டு அந்த பதிவுகளின் மூலம் உங்களால்
3. பணம் சம்பாதித்துக் கொள்ள முடியும் என்பது மிகவும் முக்கியமான விஷயமாக இருக்கிறது.
மேலும் இதில் உங்கள் விவசாய பொருட்களை சந்தைப்படுத்தும் போது அதாவது வீடியோவாக பதிவிடும் பொழுது இன்னும் மக்களுக்கு அதிகமாக வகையில் போய்ச்சேர நிறைய வாய்ப்பிருக்கிறது.
விவசாய பொருட்களை ஒரு கட்டுரையில் கொண்டு சேர்ப்பதை காட்டிலும் அதை ஒரு காணொளியாக பார்க்கும் பொழுது அவர்களுக்கு மேலும் ஒர் நம்பகத்தன்மை ஏற்படுத்தி வாங்குவதற்கும், விற்பனை செய்வதற்கும் அதாவது விவசாய பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு மிகவும் தகுந்த ஓர் இடமாக யூடிப் கண்டிப்பாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
அடுத்தபடியாக மேலே சொன்னது போல் எழுத்து வடிவிலும் நாம், நம் விவசாய பொருட்களை சந்தை படுத்தலாம் அதாவது வெப்சைட்டில் *இணைய தளம்.
Website
நமது விவசாய பொருள்களுக்கு என தனி இணையதளத்தை உருவாக்கி அதில் உங்கள் விவசாய பொருட்களை எல்லாம் பதிவு செய்து மூலம்; எழுத்துக்களையும்,படங்களையும் பதிவு செய்து அதை மக்களிடையே பகிர்வதன் மூலம் உங்கள் விவசாய பொருட்களை சந்தைப் படுத்தி கொள்ள முடியும்.
இணையதளத்தில் பெரும்பாலும் நாம் இமேஜ் மற்றும் எழுத்து வடிவில் நமது பொருட்களைப் பற்றி பதிவிடோம். ஆனால் அதிலும் வீடியோ வடிவில் காணொளி ஆகவும் பகிர முடியும்.
அடுத்தபடியாக விவசாயப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்காவே தனி செயலிகள் தற்சமயம் சில உருவாக்கப்பட்டுள்ளன.
ஆனால் மேலே குறிப்பிட்டது போலவே அது இன்னும் தரமானதாகவும் சிறப்பாகவும் செயல்பட்டால் மிகவும் நன்றாக இருக்கும் அரசாங்கம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு செயலை உருவாக்கினாலும் அதில் முழுமையான ஒரு அமைப்புகள் இருக்காது மக்களுக்குத் தேவையான முறையில் சரிவர இயங்காது என்பதுதான் உண்மை.
இதனைத் தவிர மேலும் சிலர் *வாட்ஸ்அப் மூலமாகவே அதிகமான தொழில்களை செய்து வருகின்றனர்.
WhatsApp Group
அனைத்து வகையான தொழில்களுக்கும் அதற்கென ஒரு தனி *குரூப்பை உருவாக்கி அதில் தகவல்களை பரிமாறி அதன் மூலம் தங்களது தொழில்களை சிறப்பாக செய்து வருகின்றனர்.
எனவே வாட்ஸப்பில் ஒரு குழுவை உருவாக்கி அதன் மூலம் உங்களின் விவசாய பொருட்களை சந்தைப் படுத்தி கொள்ள முடியும்.
ஆனால் இதற்கு தனி ஒரு தொலை பேசி எண்ணை வாங்க வேண்டி தான் இருக்கும் தொலைபேசி என் மூலமாகவே வாட்ஸப் குழுவில் இணைந்து கொள்ள முடியும் அப்போதுதான். உங்களால் பகிர்படுவதை மற்றவர்களும் சென்றடைய வைக்க முடியும்.
இதில் பொதுவான ஒரு சந்தைப்படுத்தல் இருக்க முடியாது. ஏனென்றால் உங்களின் தனிப்பட்ட ஒரு வாட்ஸ்அப் குரூப்பாக இருப்பதால் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு ஷேர் செய்யப்பட்டால் மட்டுமே அவளுக்குத் தெரிய வரும் என்பதால் இது ஒரு தனிப்பட்ட சந்தைப்படுத்தல் ஆகவே இருக்கும்.
இது போன்ற அனைத்து சமூக வலைதளங்களிலும் நாம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
செயலி -App
Create Own App - for market Agricultural products online
அல்லது உங்களிடம் பணம் வசதி இருந்தால் இதற்கென தனி செயலை நீங்களே பணம் கொடுத்து உருவாக்கியும் கூட பயன்படுத்தி கொள்ளலாம்.
அதில் சரிவர தேவையான உங்கள் விவசாய பொருள்களுக்கு ஏற்ப அனைத்து சிறப்பு அம்சங்களையும் உள்ளே அமைத்துக்கொண்டு அதை செயல்பட வைக்கலாம் அதன் மூலம் விவசாய பொருட்களை தாராளமாக சந்தை படுத்திக்கொள்ள முடியும்.
எனக்குத் தெரிந்த வரையிலான விவரங்களை குறிப்பிட்டிருக்கிறேன் இதில் உங்களுக்கு பிடித்தமான உணவாகவும் சரியானதாகவும் இருக்கும் பட்சத்தில் எடுத்துக் கொள்ளுங்கள் இது ஏதேனும் நான் குறிப்பிடவில்லை என்றால் அதனையும் நீங்கள் தெரியப்படுத்தலாம்.