How to download Voter id Card on your Mobile Phone in Tamil 2021

KrishSel All in All

Download Voter id Card Online on mobile

Online Voter ID Card
Online Voter id Card

தமிழகம் உட்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் படி தமிழகத்தில் அடுத்த மாதம் 6ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.
இந்த நிலையில், வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்த வாக்காளர் அட்டையை அவசியம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
எனவே உங்கள் மொபைலில் வாக்காளர் அட்டையை பதிவிறக்கம் செய்யவதற்கான எளிய படிகளை இங்கு காணலாம்.

மொபைலில் வாக்காளர் அட்டையை பதிவிறக்கம் செய்யவதற்கான படிகள்:
முதலில் உங்கள் தொலைபேசியில் ஏதேனுமொரு பிரௌசர்-ஐ திறந்து கொள்ளுங்கள்.  இதில் தேசிய வாக்காளர் போர்ட்டல் (NVSP) என்ற இணைய பக்கத்திற்கு செல்லவும்.

அல்லது வாக்காளர் ஹெல்ப்லைன் மொபைல் செயலி எனும் செயலியை பயன்படுத்தி e-EPIC என்ற விருப்பத்தை தெரிவு செய்யவும்.

Epic Voter ID Card in mobile
Online Voter id Card download

* இப்போது இந்த இணையதளத்தில்

Login/ Register சொல்வதற்கு Option கொடுக்கப்பட்டிருக்கும்.
-அதை கிளிக் செய்யுங்கள்
-இதில் லாகின் (Login) என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்
*இப்போது அதில் இ-மெயில் மற்றும் கடவுச் சொல் கேட்க்கும்.
* நீங்கள் முன்பு இந்த இணைய பக்கத்தில் பதிவு செய்திருந்தால் அந்த ஐடி-யை கொடுக்கவும்.

*இல்லையென்றால், அதே பகுதியில் கீழ்ப்புறமாக ரிஜிஸ்டர் செய்து கொள்வதற்கான ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்யுங்கள்.
பின் அதில் இந்த இணையப்பக்கத்தில் புதிய ஐடி-யை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

*ரிஜிஸ்டர் செய்து கொள்வதற்கு உங்களுடைய தொலைபேசி எண்ணை உள்ளிட்டு பிறகு, அந்த தொலைபேசி எண்ணிற்கு ஒரு OTP அனுப்பப்படும்.
அந்த OTP எண்ணை உள்ளிட்ட பிறகு கீழே கேட்கப்படும் தகவல்களை மூர்த்தி செய்து கொள்ளுங்கள்.
இப்போது உங்களுக்கான ஒரு அக்கௌன்ட் நீங்கள் உருவாக்கி விட்டீர்கள்.

*அதன்பின் அந்த புதிய ஐடி-யை உள்ளீடு செய்து உள்ளே நுழைய வேண்டும்.

*இப்போது இணையத்தின் முகப்பு பக்கத்தில் இருக்கும் Download e-EPIC என்ற விருப்பத்தை தேர்வு செய்து,
*அதில் உங்கள் வாக்காளர் அடையாள அட்டையில் எண்ணை உள்ளீடு செய்யவும்.
*அடுத்தபடியாக உங்களது மாநிலத்தை தேர்வு செய்ய வேண்டியதாக இருக்கும்.
இந்த பதிவை பாருங்கள் கண்டிப்பாக நாம் அனைவரும்
தமிழ்நாடாகத் தான் இருப்போம். எனவே நாம் தமிழ்நாடு தேர்வு செய்துகொள்ள வேண்டும். (அல்லது உங்களது மாநிலம் எதுவோ அதை தேர்வு செய்து கொள்ளுங்கள்)

* இப்போது உங்களுடைய ஓட்டர் ஐடி கானா முழு தகவல்களும் காட்டப்படும் அதை ஒருமுறை சோதனை செய்து கொள்ளுங்கள்.
*பிறகு மீண்டும் ஒருமுறை நீங்கள் உள்ளிட்ட தொலைபேசி எண்ணிற்கு ஒரு OTP அனுப்புவதற்கான ஆப்ஷன் இருக்கும் (send OTP) அதை கிளிக் செய்யுங்கள்.

* இப்போது உங்களுடைய தொலைபேசி எண்ணிற்கு ஒரு OTP வழக்கம்போல் வந்திருக்கும். அதை உள்ளிட்டு Verify என்ற ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
*இப்போது தானாக உங்கள் Voter ID Card download ஆகி இருக்கும்.
(பிடிஎஃப் பார்மேட்டில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.)

Website:

National   voters' Service portal
👉https://www.nvsp.in/

இந்த சேவை புதியதாக வாக்களர் அட்டை பதிவு செய்தவர்களுக்கு மட்டும் உள்ளது எனவும், முன்பு பதிவு செய்தவர்களுக்கு விரைவில் அப்டேட் செய்யப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணைய இணைய பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags