YouTube #Shorts Videos Upload Methods | Shorts Monetization, Earnings , Channel Fast Reach
யூடியூபில் புதிதாக கொண்டு வரப்பட்ட #SHORTS beta Option அனைத்து யூடியூப் சேனல்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
குறிப்பாக புதிய யூடியூப் சேனல்கள் மிக அதிக அளவில் Reach அந்த Shorts Video மூலம் அடைந்துள்ளனர்.
மற்றும் அதிக Subscribers-ஐம் பெற்றுக் கொடுத்துள்ளது.
ஆனாலும் இன்னும் பல புதிய சேனல்களுக்கு மற்றும் தற்போது 2021-ல் சேனல் தொடங்கிய நபர்களுக்கும் இந்த Shorts பற்றிய நிறைய சந்தேகங்கள் இருக்கின்றன.
அவற்றை எல்லாம் இந்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
யூடியூப் #Shorts தொடர்பாக இருக்கும் கேள்விகள் / சந்தேகங்கள்:
1. How upload Shorts Video on YouTube
2. Short video monetization
3. Shorts Videos Subscribers
4. Short videos Watching Hours
5. Short videos Size
6. Short videos Thumbnail
7. Short Videos Earnings
8. Short Videos Music
9. Short Videos Copyright
10. Shorts beta Suggestion
1. How upload Shorts Video on YouTube
Short Videos எப்படி அப்லோடு செய்ய வேண்டும் - தற்போது அனைத்து சேனல்களுக்கும் Shorts Beta என்ற புதிய அம்சம் கொடுக்கப்பட்டு இருக்கும் அந்த Option-ஐ Click செய்வதன் மூலம் மிக எளிமையாக Shorts Video போடாடுக் கொள்ள முடியும்.
1.எவ்வளவு நேரம் உள்ள வீடியோவை போட வேண்டும்?
Shorts beta Video-க்கான நேர அளவு 15 Seconds மட்டுமே.
2. ஏற்கனவே எடுத்து வைத்த வீடியோக்கள் Shorts Video வில் போட முடியுமா?
போடலாம் ஆனால், அந்த வீடியோவின் Size பொருத்து Shorts beta Option ல் சேர்க்கப்படுவது அமையும்.
எனவே அது ஒரு Normal Upload போல் தான் அமையும்.
3. எந்த வடிவில் Shorts வீடியோ அப்லோட் செய்ய வேண்டும்?
Shorts Videos கண்டிப்பாக செங்குத்து வடிவில் (Veritcal mode) மட்டுமே போட வேண்டும்.
அதாவது Mobile View-ல் எடுக்கப்பட்ட வீடியோக்கள்.
இது Shorts -ல் மிகவும் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் ஆகும்.
2. Short video monetization
அடுத்த அனைவருக்கும் இருக்கும் மிக முக்கியமான சந்தேகம் Shorts Videos க்கு Monetization இருக்கிறதா என்பது தான்.
யூடியூப் தரப்பில் இருந்து கொடுக்கப்பட்டுள்ள கொள்கைகள் மற்றும் விதிமுறைகள் படி தற்போது Monetization இல்லை என்பது தான்.
ஆனால், Normal Upload மூலம் போடப்பட்ட அனைத்து வீடியோக்களும் Monetization இருக்கிறது.
அந்த வீடியோ Short ஆக இருந்தாலும் சரி, சாதாரணமாக Upload செய்யப்படும் வீடியோக்களாக இருந்தாலும் சரி Monetization இருக்கிறது.
Short beta Option-ஐ பயன்படுத்தி போடப்பட்ட வீடியோக்களுக்கு மட்டுமே Monetization இல்லை.
3. Shorts Videos Subscribers
Short Videos-க்கு Subscribers கிடைக்குமா? அது Monetization Eligiblelity சேர்க்கப்படுமா?
கண்டிப்பாக கிடைக்கும் Shorts beta Videos-ல் பார்க்க கூடிய வீடியோக்களில் Subscribe Button வரும், இதன் மூலம் கிடைக்கும் அனைத்து Subscribers-ம் Monetization Eligiblelity-க்கு எடுத்துக் கொள்ளப்படும்.
4. Short videos Watching Hours
Short Videos-க்கு வரும் Watching Hours Monetization Eligiblelity -ல் சேர்க்கப்படுமா?
இல்லை எடுத்துக் கொள்ளப்படாது.
வரும் காலங்களில் இது மாற்றப்பட வாய்ப்பு இருக்கிறது.
5. Short videos Size
Short Beta Videos அளவு பொதுவாக 15 Seconds தான்.
ஆனால், Normal Upload பயன்படுத்தி 60 Seconds-க்குள் போட படும் வீடியோக்கள் அனைத்தும் SHORT Video கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
ஆனால், 15 நிமிடம் வீடியோக்கள் தான் முதலில் அதிகபட்சமாக SHORT Suggestion-க்கு எடுத்துச் செல்லப்படும்.
இதை கவனித்து பதிவிடுங்கள்.
6. Short videos Thumbnail
Short Videos-க்கு Thumbnail வைக்கலாமா?
தாராளமக வைக்கலாம் Normal Upload video க்கு எப்படி Thumbnail வைத்துக் கொள்கிறோமோ, அதே போல SHORT Video- க்கும் வைக்கலாம்.
ஆனால், Thumbnail-ம் செங்குத்து வடிவில் இருக்கும் பட்சத்தில் மேலும் Shorts Viewers-ஐ கவரும் வகையில் இருக்கும். இன்னும் அதிக views-ஐ பெற முடியும்.
7. Short Videos Earnings
Shorts Video-ல் இருக்கும் மிக முக்கியமான சந்தேகம் என்றால் அது இது தான்- Short Video-க்கு பணம் சம்பாதித்துக் கொள்ள முடியுமா? என்பது தான்.
இப்போதைக்கு Short Video-க்கு Monetization இல்லை என்பதால் பணம் சம்பாதித்துக் கொள்ள முடியாது.
ஆனால், சில Short வீடியோக்களுக்கு / சில நேரங்களில் மட்டும் பணம் வந்திருக்கும். இதை கவனித்து இருப்பீர்கள்.
அது எப்படி கிடைக்கிறது என்றால்?
உங்கள் Short Video-ஐ SHORT Beta Option -ல் பார்க்கப்படும் பொழுது அதுக்கு எந்த வித பணமும் கிடைக்காது.
ஏனென்றால் எந்த ஒரு விளம்பரங்களும் காட்டப்படுவது இல்லை.
அதே வீடியோக்களை உங்கள் சேனலின் உள்ளே வந்து பார்க்கப்பட்டால் அப்போது விளம்பரங்கள் காட்டப்பட்டு, அதற்கான பணமும் கிடைக்கிறது.
எனவே Shorts Option இல்லாமல் Normal Suggestion வீடியோக்களில் அல்லது உங்கள் சேனலில் உள்ளே வந்து பார்க்கப்பட்டால் பணம் (Earnings) வரும்.
8. Short Videos Music
அடுத்த முக்கியமான விஷயம் Shorts Video-க்கு Music எப்படி Add செய்வது? என்பது தான்.
ஏனென்றால் Shorts Beta-வில் சினிமா பாடல்களும் கொடுக்கப்படுகிறது.
இதை தாராளமாக பயன்படுத்தி வீடியோ அப்லோட் செய்யலாம். ஆனால் அந்த வீடியோக்களுக்கு உங்களால் Monetization On செய்து கொள்ள முடியாது.
Music Add செய்யாமல் அப்லோடு செய்யும் வீடியோக்களுக்கு மட்டுமே Monetization On செய்து கொள்ள முடியும்.
அல்லது யூடியூப் Free Music Library-ல் உள்ள music பயன்படுத்திக் கொண்டால் Monetization On செய்து கொள்ள வாய்ப்புகள் இருக்கின்றது.
எனவே Shorts Videos-க்கு Music பயன்படுத்த விரும்பினால் கவனமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
9. Short Videos Copyright
அடுத்த மிக முக்கியமான தகவல் என்னவென்றால் Copyright.
YouTube சேனலில் பதிவிடப்படும் மற்ற சாதாரன (Normal) வீடியோக்களுக்கு உள்ள அனைத்து Copyright விதிகளையும் Shorts வீடியோக்களுக்கும் கடைபிடிக்க வேண்டும்.
Shorts video-க்கும் Copyright Strike மற்றும் Claim கொடுக்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
10. Shorts beta Suggestion
Shorts-ல் பெரும்பாலான பேர் கவலை மற்றும் சந்தேகங்கள் இது தான்.
எனது சேனல் SHORT Video ஏன் Short Option-ல் வரவில்லை?
அதிகமான பேரால் பார்க்கப்பட்ட வீடியோக்கள் தான் அதிகம் Shorts Option-ல் காட்டப்படுகிறது.
அதாவது அதிக Views போன வீடியோக்கள்.
*நீங்கள் போடக்கூடிய வீடியோக்கள் செங்குத்து வடிவில் எடுத்து போடுங்கள்.
*குறைந்த கால அளவில் வீடியோக்கள் போடுங்கள். [Upload Seconds Time duration short videos]
[அதிகபட்சமாக 15 நிமிடங்கள் இருக்கும் வீடியோக்கள் தான் முதலில் Suggestion செய்யப்படும்.]
* Shorts Video என்பதால் ஏதோ ஒன்றை போடாமல், அந்த குறுகிய கால வீடியோவில் எவ்வளவு கவர்ச்சியான மக்களுக்கு பிடிக்கும் வகையில், Engement வீடியோக்களை உருவாக்க முடியுமோ அந்த அளவுக்கு ஒரு நல்ல வீடியோக்களை உருவாக்கி பதிவிடுவதன் மூலம் தானாக அதிக அளவில் views-ஐ பெற முடியும். மற்றும் Shorts beta Option-க்கும் Suggestion செய்யப்படும். அதாவது காட்டப்படும்.
இவ்வாறு SHORT Beta-வில் உங்கள் சேனல் வீடியோ காட்டப்படுவதன் மூலம் உங்கள் சேனல் SHORT Video மற்றும் சேனல் மிக விரைவிலேயே அதிக அளவில் வளர்ச்சி அடையும்.
சேனல் தொடங்கி ஆரம்பத்திலேயே அதிக மக்களை சென்றடைய முடியும்.
இதற்கு SHORT Video மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
எனவே,
*SHORTS உங்கள் சேனலை மிக எளிமையாக குறுகிய காலத்தில் Reach அடையச் செய்யும்.
*அதிக Views-ஐ பெற்றுக் கொள்ள முடியும்.
*அதிக Subscribers-ஐ பெற்றுக் கொள்ள முடியும்.