WhatsApp New Agreement Problem | Whatsapp Alternative Messenger App

KrishSel All in All

WhatsApp New Agreement Problem | Whatsapp Alternative Messenger App

Whatsapp ல் தற்போது புதிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் கொண்டு வந்து இருக்கிறார்கள்.

Whatsapp New Agreement Problem

இதன் காரணமாக இதற்கு ஏற்றுக் கொள்ளும் வகையில் Agree or Not Now என்ற Notification msg அனைத்து Whatsapp பயனாளர்களுக்கும் வந்து கொண்டு இருக்கிறது.

இதில் Agree கொடுப்பதா? அல்லது Not Now கொடுப்பதா? என அனைவரும் குழப்பத்தில் இருக்கின்றனர்.

இப்போதைக்கு AGREE கொடுக்க வேண்டாம் என்பதே சரியான முடிவு அல்லது ஆலோசனையாக இருக்கும்.

ஏனென்றால் WhatsApp புதிதாக கொண்டு வந்துள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் அதுபோல் இருக்கிறது.

அதாவது உங்களின் (WhatsApp பயன்படுத்தும் பயனாளிகளின்) உரையாடல், [Chating, Sharing] தகவல்கள் அனைத்தும் அவர்களின் வணிகம் சார்ந்த நடைமுறைக்காக பயன்படுத்தி கொள்ள அனுமதி கொடுப்பதாக தான் இந்த புதிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் கொண்டு வரப்பட்டுள்ளது.

அவை:
AGREE ஐத் தட்டுவதன் மூலம், பிப்ரவரி 8, 2021 முதல் நடைமுறைக்கு வரும் புதிய விதிமுறைகளையும் தனியுரிமைக் கொள்கையையும் நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள்.

இந்த தேதிக்குப் பிறகு, வாட்ஸ்அப்பைப் பயன்படுத்துவதற்கு இந்த புதுப்பிப்புகளை நீங்கள் ஏற்க வேண்டும்.

உங்கள் கணக்கை நீக்க விரும்பினால், மேலும் தகவலை விரும்பினால் உதவி மையத்தையும் பார்வையிடலாம்.

எனவே இப்பக்கத்தை Agree Option-ஐ கொடுக்காமல் தவிப்பது நல்லது.

மேலும் WhatsApp Messenger க்கு மாற்றாக இதை விட சிறப்பான அம்சங்களை கொண்ட Messagers இருக்கிறது.

அதனால் யாரும் கவலைப் பட தேவையில்லை.

அதில் முக்கியமானது
1. Telegram Messager App மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இன்னும் சொல்லப்போனால் Whatsapp விட மேலும் நிறைய சிறப்பு அம்சங்களை கொண்டு இருக்கிறது.

2. அடுத்து Signals Messenger App
இதையே மக்கள் தற்போது அதிகமாக install செய்து கொண்டு இருக்கிறார்கள்.

அல்லது எனக்கு WhatsApp தான் வேண்டும், அதில் என்னுடைய அனைத்து நண்பர்களும் இருக்கிறார்கள், எனது Business முழுவதும் WhatsApp மூலம் தான் நடக்கிறது என்பது போல இருக்கிறீர்கள் என்றாலும் பொறுமையாக காத்திருங்கள்.

அனைவரும் இந்த புதிய விதிமுறைகள் ஏற்றுக் கொள்ளாத வகையில், இதற்கு மாற்று தீர்வு கொண்டு வருவதற்கு கண்டிப்பாக அதிகமான வாய்ப்பு இருக்கிறது.

Tags