Weight Gain Simple Foods in Tamil | உடல் எடையை அதிகரிக்கும் விலை மலிவான உணவுகள்

KrishSel All in All

Weight Gain Foods Tamil

உடல் எடையை அதிகரிக்கும் விலை மலிவான உணவுகள்.

எவ்வளவு தான் சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்கவில்லை என்றுசொல்லி யோசிப்பீர்கள். உடல் எடை அதிகரிக்க வேண்டுமானால் சாப்பிட வேண்டிய சாப்பாடுகள் அதிக விலையில் இருக்கின்றது என்று கவலையாகவும் இருப்பீர்கள்


Weight Gain Foods low cost


இந்தப் பதிவில் மிகவும் விலை குறைவான 4 உணவுகளைத்தான் நான் உங்களுக்கு சொல்லப் போகிறேன். அந்த நான்கு உணவுகளும் உங்களுடைய உடல் எடை அதிகரிப்பதற்கு உதவி செய்யும்.


வாழைப்பழம்🍌

 வாழைப்பழத்தை நீங்கள் ஒவ்வொரு நாளும் சாப்பிட்டு வந்தீர்கள் என்றால் உங்களுடைய உடல் எடையில் உங்களுக்கே வித்தியாசம் தெரியும்.

 நீங்கள் எவ்வளவு ஒல்லியாக இருந்தாலும் பரவாயில்லை ஒவ்வொரு நாளும் வாழைப்பழத்தை எடுத்துக்கொள்ளுங்கள் உண்மையில் உங்களுக்கு உடல் எடை அதிகரிக்கும.


பால்🥛

 பெரும்பாலும் நாங்கள் ஒவ்வொரு நாளும் எடுத்துக் கொள்வதுதான் பால். பாலினை நீங்கள் ஒவ்வொரு நாளும் எடுத்துக்கொள்வதால் உங்களுடைய உடல் எடையில் கண்டிப்பாக வித்தியாசம் தெரியும்.

 முக்கியமான ஒரு விடயம் கடையில் விற்கின்ற பால்களை வாங்கி குடிப்பதை விட சுத்தமான பசும்பால் எடுத்துக் குடிப்பது மிகவும் நல்லது.

ஏனென்றால் கடையில் விற்கின்ற பால்களில் உங்களுக்கு உடல் எடை வைப்பதற்கான சத்துக்கள் அனைத்தையும் எடுத்து விட்டுத்தான் கடையில் அந்த பாலை விற்பார்கள்.

 அப்படி இருக்கின்ற பொழுது அந்தப் பாலைக் குடிப்பது உங்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. அதுவே பசும்பால் எடுத்துக் கொண்டு இருந்தால் அதில் இருக்கும் அத்தனை சத்துக்களும் உங்களுடைய உடலில் சேரும் அதனால் உங்களுக்கு உடல் எடை அதிகரிக்கும்.


கடலைப்பருப்பு

 கடலைப்பருப்பு விலை குறைந்த ஒரு பொருள் தான். அப்படி இருக்கின்ற பொழுது நீங்கள் ஒவ்வொரு நாளும் 50 கிராம் கடலைப்பருப்பு எடுத்துக்கொள்ளுங்கள்.

 ஏனென்றால் கடலைப்பருப்பில் அதிகளவான காபோவைதரேட் மற்றும் புரதம் இருக்கின்றது.

 அதனால் உங்களுக்கு புரோட்டீனும் கிடைக்கும் அதே நேரம் உங்களுடைய உடல் எடை காபோவைதரேட்டினால் அதிகரிக்கப்படும்.


பேரிச்சம்பழம்

 உண்மையில் உடல் எடை அதிகரிப்பதற்கு பேரீச்சை பழமானது அதிகளவான உதவி செய்கின்றது.

 ஒரு நாளைக்கு நீங்கள் குறைந்தது ஐந்து பேரீச்சை பழமாவது  எடுத்துக் கொள்ளுங்கள். ஐந்து பேரீச்சம் பழம் என்பது விலை மலிவான ஒன்றுதான்.

 நான் சொன்ன 4 உணவுகளை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் உங்களுக்கு அதி சீக்கிரத்தில் உடல் எடை அதிகரிக்கும்.

 அதேநேரம் உங்களுக்கு அதிகளவான பணமும் செலவாகாது ஏனென்றால் இந்த நான்கு உணவுகளும் விலை மலிவான உணவுகள்.

 இந்த உணவுகள் நீங்கள் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் எடுத்துக்கொள்ளலாம் அதனால் நீங்கள் இந்த நான்கு உணவுகளை பிரதானமாக ஒவ்வொரு நாளும் எடுத்துக் கொள்ள பழகிக் கொள்ளுங்கள். உங்கள் உடல் எடை அதிகரிப்பது தெரியும்.