வெங்காயம் கண் எரிச்சல் இல்லாமல் எப்படி எளிமையாக உரிப்பது | Onion peel and Cutting Tips

KrishSel All in All

இல்லத்தரசிகள் அன்றாடம் கிச்சனில் சமையல் செய்யும் போது இந்த சமையல் குறிப்புமிகவும் தேவையான முக்கியமான சமையல் குறிப்பாக இருக்கும். இந்த டிப்ஸ் தெரிந்து வச்சிக்கோங்க நிச்சயம் உங்களுக்கு உதவியாக இருக்கும்:

----------------------------------------------------------------------

Onion Peeling simple Tips in Tamil
Onion peel and Cutting Tips

வெங்காயம் உரிக்க எளிய டிப்ஸ்- கண் எரிச்சல் இல்லாமல் எப்படி எளிமையாக உரிப்பது

கிலோ கணக்கில் வெங்காயம் இருந்தால் எப்படி ஐந்தே நிமிடத்தில் எளிமையாக உரிப்பது மற்றும் வெட்டுவது:

சமையலில் சமைக்கும் நேரத்தைக் காட்டிலும் அதற்கு தேவையான பொருட்களை தயார் செய்வதில் தான் அதிக நேரம் மற்றும் நமக்கு கஷ்டமாகவும் இருக்கும்.

அதிலும் குறிப்பாக வெங்காயம் அனைத்து சமையலுக்கும் பயன்படுத்தும் பொருள். இந்த வெங்காயம் தோல் உரித்து, அரிந்து எடுப்பதற்குள் கண் எரிச்சலுடன் கண்ணில் தாரை, தாரையாக கண்ணீருடன் போதும் டா சாமி என்று அழும் நிலை தான்.

வெங்காயம் தோல் எளிமையாக உருக்க சூப்பர் டிப்ஸ்:

பெரிய வெங்காயம் என்றாலுல் சரி,

சின்ன வெங்காயம் என்றாலுல் சரி உரிக்கும் போது காம்பு கட் செய்து, வெங்காயத்தில் இரண்டு பக்கமும் இரண்டு கோடு கத்தியில் போட்டு விட்டு பிறகு உரித்தால் வெங்காயம் அழகாக மொட்டு போல் கோடு போட்ட இடத்தில் இருந்து தோல் உரித்து வந்து விடும்.

பெரிய வெங்காயம் தோல் உரிக்க எளிய டிப்ஸ்:

பெரிய வெங்காயத்தை காம்பு கட் செய்து விட்டு இரண்டாக கட் செய்து விட்டு மேல் தோல் உரித்தால் மிக மிகச் சுலபமாக தோல் உரித்து விடலாம்.

பெரிய வெங்காயம் கட் செய்யும் போது கண் எரிச்சல் இல்லாமல், கண்ணில் தண்ணீர் வராமல் எப்படி கட் செய்வது மற்றும் கிலோ கணக்கில் வெங்காயம் இருந்தால் எப்படி ஐந்தே நிமிடத்தில் வெட்டுவது.
இதற்கான எளிதான டிப்ஸ்:

கிழக்கு சீவி எடுத்துக் கொண்டு அதில் சிப்ஸ்-க்கு சீவும் பகுதியில், தோல் உரித்த பெரிய வெங்காயத்தை இரண்டாக மட்டும் கட் செய்து எடுத்து சீவி எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரே சீராகவும், கண்ணில் எரிச்சல் இல்லாமல் வெங்காயம் ரெடி.

இந்த முறையில் மிகவும் சுலபமாகவும், வேகமாகவும் எவ்வளவு வெங்காயம் வேண்டுமானாலும் கட் செய்து முடித்து விடலாம். சமையல் வேகமாக முடிந்து விடும்.

சின்ன வெங்காயம் கண் எரிச்சல் இல்லாமல், கண்ணில் தண்ணீர் வராமல் சுலபமாகவும் எப்படி உரிப்பது இதற்கான எளிதான டிப்ஸ்:

பெரிய வெங்காயத்தை காட்டிலும், சின்ன வெங்காயம் உரிக்கும் போது அழாத ஆள் இருக்க முடியாது, 

இது போல் கண் எரிச்சல் இல்லாமல் உரிக்க, சமையலுக்கு தேவையான சின்ன வெங்காயம் எடுத்து கொள்ளுங்கள் அதை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் போட்டு வைத்து விட்டு பிறகு உரித்தால் கண் எரிச்சல் இல்லாமல் அழகாக உரிக்கலாம். 

இந்த முறையை பயன்படுத்தி உரித்து பாருங்கள் சின்ன வெங்காயம் தோலும் எளிமையாக வரும். 

எத்தனை கிலோ வெங்காயம் இருந்தாலும் மிக குறைவான நேரத்தில் உரித்து முடித்து விடலாம்.

கல்யாண வீடு போன்ற பெரிய விஷேங்களில் அதிக அளவில் வெங்காயம் எப்படி வெட்டி எடுக்கறாங்க? 

எவ்ளோ வெங்காயம் இருந்தாலும் ஐந்தே நிமிடத்தில் எளிமையாக வெட்ட  இந்த டிப்ஸ் தான் ஃபாலோ பண்றாங்க.

ஒரு பெரிய பாத்திரத்தில் வெங்காயம் இருந்தாலும் அதை அப்படியே தோல் உரித்து அதே பெரிய பாத்திரத்தில் போட்டுக் கொள்ளுங்கள். 

கத்தி எடுத்துக் கொண்டு பாத்திரத்தில் உள்ளே குறுக்கு, மறுக்காக கோடு போடுவது போல வெட்டுங்கள். இதே போல பாத்திரம் முழுவதும் வெட்டுங்கள். 

இப்போது பாத்திரத்தில் உள்ள அனைத்து வெங்காயமும் பொடிப் பொடியாக நறுக்கிய வெங்காயமாக மாறி விடும். உங்களுக்கு தேவையான அளவுக்கு சிறிய அளவில் வெட்டிக் கொள்ளுங்கள். 

இந்த முறையில் எவ்வாறு நேரம் வெட்டுகிறீர்களோ அந்த அளவிற்கு சிறிய துண்டுகளாக வெங்காயம் கட் செய்து கிடைக்கும்.