சமையலில் உப்பு அதிகமானால் சரிசெய்ய Tips and Tricks in Tamil

KrishSel All in All

சமையல் Tips in Tamil

உணவில் உப்பு அதிகம் போட்டு விட்டால் எப்படி சரிசெய்வது?

How to correct or manage over Salt on Food

1.பிரியாணியில் உப்பு அதிகமாக இருந்தால் எப்படி சரிசெய்வது:

* பிரியாணி சமைக்கும் போதே உப்பு அதிகமாக இருப்பது தெரிந்தால், 1.தேங்காய் பால், 

2.எழுமிச்சை சாறு, 

3.காரம் (மிளகாய் தூள் / மற்ற கிரேவி மசாலா) 

4.நெய்

இந்த பொருட்களை பயன்படுத்தி சரி செய்து கொள்ளலாம். 

நீங்கள் சமைத்து இருக்கும் உணவின் அளவை பொருத்து,

இதில் தேவையான பொருட்கள் மற்றும் தேவையான அளவு மட்டும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

  * பிரியாணி சமைத்து முடித்த பிறகு உப்பு அதிகமாக இருப்பது தெரிகிறது என்றால், சிறிதளவு எழுமிச்சை சாறு  பிழிந்து கிளறி விடவும், இதே போல சூடாக இருக்கும் போது நெய்யும் சேர்க்கலாம். 

இந்த முறையில் உப்பு அதிகமாக தெரியாமல் சரி செய்து கொள்ளலாம்.

👉 உப்பு மிகவும் அதிகமாக வாயிலேயே வைக்க முடியாத அளவிற்கு அதிகமாக இருந்தால் அதையும் சரி செய்யலாம்.

எப்படி என்பதை பார்க்கலாம்.

அதற்கு நீங்கள் செய்து வைத்துள்ள பிரியாணின் அளவில் பாதி அளவிற்கு நெய் சாதம் உப்பு போடாமல் பிரியாணி பதத்தில் செய்து, இறக்கும் பதத்திற்கு முன்பாக அதில் இந்த உப்பு அதிகமான பிரியாணியை சேர்த்து நன்கு கிளறி விடவும். 

பிறகு வழக்கம் போல் தம் போட்டு விடுங்கள். இப்போது நல்ல சுவையில் பதமான அருமையான முறையில் பிரியாணி சரியாகிவிடும்.

2. குழம்பில் உப்பு அதிகமாக போட்டு விட்டால் எப்படி சரிசெய்வது?

கிரேவி, கூட்டு, அரைத்து வைத்துள்ள குழம்பாக இருந்தால் இந்த முறை சிறந்ததாக இருக்கும்.

* தேங்காய் பால்:

உப்பு அதிகமாக போன குழம்பில் தேங்காய் பால் சேர்த்து சிறிது நேரம் குறைவான தீயில் கொதிக்க விட்டு எடுத்துக் கொள்ளுங்கள். 

*உப்பு முழுவதும் சரிசெய்வது மட்டும் இல்லாமல் நீங்கள் செய்து இருக்கும் குழம்பு, கூட்டு, கிரேவி எதுவாக இருந்தாலும் சரி மேலும் அதிகமான சுவையுடன் இருக்கும்.

*இந்த தேங்காய் பால் முறை சைவம் மற்றும் அசைவ உணவுகளுக்கும் தாராளமாக சேர்க்கலாம்.

*மேலும் உணவில் தேங்காய் பூ வாக சேர்ப்பதைக் காட்டிலும், தேங்காய் பாலாக சேர்த்து சமைக்கும் உணவு அதிக நேரம் கெட்டுப் போகுமல் இருக்கும். 

*மற்றும் சமைக்க பயன்படுத்தி உள்ள காய், கறிகள் விரைவில் வேகவைக்கவும் உதவியாக இருக்கும்.

4. பருப்பு குழம்பு (சாம்பார்) உப்பு, புளி அதிகமானால் எப்படி சரிசெய்வது?

*பருப்பு குழம்பு (சாம்பார்) உப்பு அதிகமானாலும் இதே டிப்ஸ் கடைபிடியுங்கள் மிகவும் அருமையாக பலன் தரும். 

அதாவது தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கினால் போதும் உப்பு சரியாகிவிடும். தேவை இருந்தால் காரம் (மிளகாய் தூள்) சேர்த்துக் கொள்ளுங்கள்.

இதே போல புளி அதிகமாக சேர்த்து விட்டாலும், இந்த தேங்காய் பால் நல்லமுறையில் சரிசெய்வது உங்கள் பருப்பு சாம்பாரை சுவையான தாக மாற்றிவிடும் கவலையை விடுங்கள்.

3.பொரியலில் உப்பு அதிகமாக சேர்த்து விட்டால் எப்படி சரிசெய்வது?

*காய் பொரியலில் உப்பு அதிகமானால் 

- வேர்க்கடலை அரைத்து பொடி செய்து சேர்த்துக் கொள்ளுங்கள். உப்பு சரியாகிவிடும், சுவையும் மிகவும் நன்றாக இருக்கும்.

ஆனால் இது சில காய்களுக்கு சரியாக இருக்காது, காய் உடன் சேர்ந்து நல்ல சுவை கிடைக்காமல் போகலாம்.

நீங்கள் சமைக்கும் காய் பொருத்து இந்த டிப்ஸை செய்து கொள்ளுங்கள்.

(இந்த முறை ஒத்து வரும் காய்கள் - கத்தரிக்காய்,கொத்தவரங்காய், பீட்ரூட், நுரை பீர்க்கங்காய், காலிபிளவர், உருளைக்கிழங்கு, அவரைக்காய் இது போன்ற காய்கள்)

*முட்டை கோஸ் பொரியலில் உப்பு அதிகமானால் அதனுடன் பொட்டுக்கடலை பொடி செய்து சேர்த்துக் கொள்ளுங்கள் சுவையும் மிகவும் நன்றாக இருக்கும் உப்பும் சரியாகிவிடும்.

* உப்பு அதிகமான பொரியலில் தேங்காய் பால் சேர்த்து, தேவையான அளவு மிளகாய் தூள் / கறி மசாலா என உங்கள் விருப்பம் போல் சுவைக்கு ஏற்ப சேர்த்து கிரேவி போல செய்து கொள்ளலாம். இப்படியும் உப்பு அதிகமான பொறியலை சரி செய்யலாம்.


இவை அனைத்தும் நான் எனது சமையலில் பயன்படுத்தியது மட்டுமே. வேறு சில குறிப்புகள் இருந்தால் நீங்களும் கீழே கமென்ட் செய்யலாம்.