Can I change YouTube Channel Adsense Account After Monetization? in Tamil

KrishSel All in All

Can I change YouTube Channel Adsense Account After Monetization? in Tamil

நமது யூடியூப் சேனலில் Monetization கிடைத்த பிறகு Google Adsense Account-ஐ தேவைப்பட்டால் மாற்ற முடியுமா? என கண்டிப்பாக புதிய யூடியூப் சேனல் நடத்துபவர்களுக்கு சந்தேகம் இருக்கலாம். 

இவ்வாறு மாற்றினால் இதனால் Channel Monetization-க்கு ஏதேனும் பிரச்சினை வருமா? என பயத்தில் இருப்பீர்கள்.


Can I change Adsense Account after Monetization

இதை பற்றிய முழு விவரங்களையும் இந்த பதில் பார்கலாம்.

Adsense Account-ஐ மாற்ற முடியுமா?

உங்கள் YouTube channel-ல் இணைத்துள்ள Google Adsense account-ஐ தேவை இருக்கும் பட்சத்தில் தாராளமாக மாற்றிக் கொள்ள முடியும்.

யூடியூபில் தற்போது இதற்கென தனி அமைப்பு ஒன்றையும் அப்டேட் செய்து கொடுத்துள்ளார்கள்.

இந்த குறிப்பிட்ட Option-ஐ பயன்படுத்தி மிக சுலபமாக நீங்கள் விரும்பும் வேறு Adsense Account-ற்க்கு மாற்றிக் கொள்ள முடியும். 

[ குறிப்பு: ஒருவருக்கு வாழ்நாளில் ஒரு Google Adsense account மட்டுமே இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்]

Adsense Account-ஐ மாற்றினால் சேனல் Monetization-க்கு பிரச்சினை வருமா?

தேவை இருக்கும் பட்சத்தில் தாராளமாக உங்கள் சேனல் Adsense Account-ஐ மாற்றிக் கொள்ளவே யூடியூப் தரப்பில் இருந்தே இந்த ஒரு புதிய அமைப்பை கொடுத்து இருக்கிறார்கள். 

எனவே நீங்கள், உங்கள் யூடியூப் சேனல் Monetization-க்கு எந்த ஒரு பிரச்சனையும் வராமல் எளிதாக மாற்றிக் கொள்ள முடியும்.

எப்படி மாற்றுவது? 

உங்கள் யூடியூப் சேனல் Monetization page-க்கு சென்று பாருங்கள் அங்கு நீங்கள் இணைத்த Google Adsense account Option வலது புறமாக இருக்கும்.

அதன் கீழ் Change - என்ற Option கொடுக்கப்பட்டு இருக்கும்.
இந்த Option-ஐ பயன்படுத்தி உங்களுக்கு தேவையான வேறு Adsense Account-ஐ இணைத்துக் கொள்ளலாம்.

இவ்வாறு மாற்றம் போது ஏற்கனவே இணைத்து இருந்த பழைய Adsense Account-ல் ஏதேனும் பணம் வைத்து இருந்தால் அந்த பணம் 10$ க்கு மேல் இருக்கும் பட்சத்தில் தற்போது இணைந்துள்ள புதிய Adsense Account-க்கு அனுப்பி வைப்பார்கள்.

 இல்லை என்றால் எந்த ஒரு பணமும் திரும்ப கிடைக்காது.
இது தொடர்பான தகவல்களை நீங்கள் Adsense Account மாற்றும் போது யூடியூப் தரப்பில் இருந்து mail அனுப்பப்படும். அதை Follow செய்து கொள்ளுங்கள்.

Adsense Account-ஐ மாற்றும் போது சரியான முறையில் செய்து கொள்ளுங்கள். ஏதேனும் பிழை செய்தால் சரியான முறையில் Adsense Account-ஐ மாற்ற முடியாமல் போகலாம்.

இதனால் Adsense Account error issue வருவதற்கான வாய்ப்பும் இருக்கிறது. மற்றும் இதன் காரணமாக Monetization-ம் நிறுத்தி வைக்கப்படும். எனவே கவனமாக சரியான முறையில் மாற்றிக் கொள்ளுங்கள்.

இது தொடர்பான ஏதேனும் சந்தேகங்கள் மற்றும் மேலும் விவரங்கள் தேவைப்பட்டால் நமது யூடியூப் சேனல் Krish Tech Tamil 👍- Follow செய்து கொள்ளுங்கள்.

Tags