How to Check Websites Speed in Tamil? | Best website for Blogger, Wordpress Website Speed Test 2021
How to check your website Speed and improve your site for good performance:
உங்கள் இணைய தளம் வேகத்தை எவ்வாறு கணக்கிட்டு பார்த்து தெரிந்து கொள்வது? என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
உங்கள் இணைய தளத்தின் வேகம் அதிகமாக இருந்தால் தான் தேடி வரும் பார்வையாளர்களுக்கு நல்ல எண்ணங்களை (impression) உருவாக்கும்.
இதையே அனைவரும் எதிர்பார்ப்பார்கள்.
அதாவது Search செய்த உடன் தளம் திறக்க வேண்டும், அதில் கொடுக்கப்படும் தகவல்களை உடனடியாக பார்க்க வேண்டும் என்பது போல தான் அனைவரும் எதிர்பார்ப்போம் மற்றும் விரும்புவோம்.
இதன் மூலம் உங்கள் இணைய தளத்தில் அதிக நேரம் இருப்பார்கள்.
இணைய தளம் திறப்பதற்கே அதிக நேரம் எடுத்துக் கொண்டால் தேடி வரும் பார்வையாளர்கள் கண்டிப்பாக பெரும்பாலும் காத்திருந்து பார்க்க மாட்டார்கள். அடுத்த தளத்தை தேடி சென்று விடுவார்கள்.
எனவே உங்கள் இணைய தளத்தின் Traffic -ம் இதனால் கண்டிப்பாக பாதிக்கப்படும்.
Traffic அதில் இருந்தால் தான் உங்கள் இணைய தளத்தின் மூலம் அதிக பணம் சம்பாதித்துக் கொள்ள முடியும்.
எனவே உங்கள் இணைய தளத்தின் வேகம் எவ்வாறு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
அதில் ஏதேனும் தடைகள் இருக்கும் பட்சத்தில் அதை சரி செய்து கொண்டு, உங்கள் இணைய தளம் வேகமாக திறக்கும் (செயல்படும்) வகையில் அமைந்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக இணைய தளத்தில் போடக்கூடிய ஒவ்வொரு Post -க்கும் பெரும்பாலும் கண்டிப்பாக ஒரு (படம்) image -ஆவது சேர்த்து தான் Publish செய்வோம்.
இவ்வாறு படங்களை சேர்த்து போடும் பொழுது, அதற்கான image's Size அளவை எந்த அளவிற்கு குறைத்து போட முடியுமோ அந்த அளவுக்கு குறைவான அளவில் தயார் செய்து போடுவது நல்லது.
ஆனால் images தரம் குறையாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஏனென்றால் நாம் சேர்க்கும் இந்த images தான் Load ஆக அதிக நேரம் எடுத்துக் கொண்டு உள்ளது இணைய தளத்தின் வேகத்தை குறைக்கும்.
இதை அனைத்தையும் கண்டுபிடித்து சரி செய்து கொள்ள முடியும்.
அதற்கான இணைய தளம் gtmetrix
Check in Google search with
👉www.gtmetrix.com
![]() |
Website Speed Testing |
இந்த தளத்தில் உங்கள் website link கொடுத்து விட்டு Test your site Option -ஐ Click செய்யுங்கள் போதும்
உங்கள் இணைய தளத்தின் வேகத்தை முழுவதுமாக analyze செய்து கொடுக்கும்.
இந்த தளத்தில் முழுவதும் இலவசமாக உங்கள் இணைய தளத்தின் வேகத்தை Check செய்து கொள்ள முடியும்.
அதுமட்டும் இல்லாமல் எந்த எந்த காரணங்களால் உங்கள் இணைய தளம் வேகம் குறைவாக இருக்கிறது என்பதை கீழே வரிசையாக குறிப்பிட்டு காட்டப்படும்.
இதன் மூலம் மேலே குறிப்பிட்டுள்ளது போல் அந்த தடைகளை கண்டறிந்து சரி செய்வதன் மூலம் உங்கள் இணைய தளத்தின் வேகத்தை அதிகப்படுத்திக்க முடியும்.
Website Speed Usage:
உங்கள் இணைய தளம் வேகம் அதிகமாக இருந்தால் என்ன பலன் கிடைக்கும்.
அல்லது உங்களுடைய இணைய தளம் வேகம் குறைவாக இருந்தால் என்ன பிரச்சனைகள் உங்களது இணைய தளத்திற்கு வரும்.
இணையதளத்தின் வேகம் பொதுவாக குறைவாக இருந்தால் ஒரு இணையதளத்தில் தேடி வரும் பயனாளர்கள் அதிக நேரம் காத்திருக்க விரும்புவதில்லை.
தான் தேடி வருவது உடனுக்குடன் கிடைக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புவார்கள் இவ்வாறு இருக்கையில் உங்கள் இணையதளம் திறப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டால் காத்திருந்து பார்க்க மாட்டார்கள் அடுத்த இணையதளத்தை தேடி சென்று விடுவார்கள்.
இதுமட்டுமல்லாமல் இணைய தளத்திற்கு உள்ளையே செல்லவில்லை என்றால், உங்களின் போஸ்ட்களை அவர்கள் திறந்து பார்ப்பதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவாகவே இருக்கும்.
ஒவ்வொரு போஸ்ட் திறப்பதற்கும் அதிக நேரத்தை எடுத்துக் கொண்டால் உங்களின் போஸ்ட்டை முழுவதுமாக படிக்க மாட்டார்கள் எனவே உங்களில் இணைய தளத்தில் அவர்கள் செலவழிக்கும் நேரமும் மிக மிக குறைவாகவே இருக்கும்.
இதன் காரணமாக உங்களின் இணையதளத்தில் ட்ராபிக் மிகவும் பாதிக்கப்படும்.
இவ்வாறு ட்ராபிக் மிகவும் குறைகிறது என்றால், அதற்கு காரணம் உள் நுழைந்த உடனே வெளியே சென்றுவிடுவார்கள் அதன் காரணமாக டிராபிக் குறைகிறது.
உங்களின் இணைய தளத்தின் பயனாளிகளும் முழுவதுமாக குறைந்து விடுவார்கள்.
இதை தாண்டியும் காத்திருந்து வரும் ஒன்று இரண்டு பார்வையாளர்களும் வந்தவுடன் வெளியே சென்று விடுகிறார்கள் என்றால் உங்களின் இணைய தளத்திற்க்கான சம்பாத்தியம் (Earnings) மிக மிக குறைந்த அளவிலேயே வரும்.
இன்னும் சொல்லப்போனால் சரியான content தேர்வு செய்து போட வில்லை மற்றும் குறைவான மக்களுக்கு தேவைப்படும் கட்டுரைகளை நீங்கள் எழுதி இருந்தால்,
இதுபோல் வெப்சைட்ஸ் வேகமும் குறைவாக இருக்கிறது எனில் உங்களின் இணையதளத்தை நீங்கள் உருவாக்கியதற்கான எந்த பலனும் கிடைக்காமல் கூட போகலாம்.
அதாவது எந்த ஒரு பணமும் உங்களால் சம்பாதிக்க முடியாமல் போகலாம்.